Showing posts with label The New LiFi Technology. Show all posts
Showing posts with label The New LiFi Technology. Show all posts

Friday, November 27, 2015

Wi-Fi தெரியும். Li-Fi தெரியுமா? தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் Li-fi technology

 

 

’’​Wi-Fi’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”Li-Fi ” தொழில்நுட்பத்தை லண்டன்  எடின்பர்க்(University of Edinburgh) பேராசிரியர் Prof. Harald Haas என்பவர் 2011ஆம் ஆண்டு உருவாக்கினார்.

 

Li-Fi என்பது இருவழி தகவல் பரிமாற்றம்(Bi Directional)  நடத்தும் திறனுள்ள, அதி வேகமான தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும்.  இது  அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புறஊதாக் கதிர்களை பயன்படுத்தும் ஒளி வழி தகவல் பரிமாற்ற (visible light communication / Optical wireless communications) தொழில்நுட்பமாகும்.

Li-Fi தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டால் , உங்கள் அறையிலுள்ள மின்விளக்கு, உங்கள் காரின் ஹெட்லைட்,  தெருவிளக்குகள், சுரங்கப்பாதையில் உள்ள விளக்குகள், உங்கள் செல்போனின் ப்ளாஷ்லைட்  என அனைத்தின் வழியாகவும் நீங்கள் அதிவேக  இணையத் தொடர்பை பெறலாம்.



ஒரு வினாடிக்கு 224 GB வேகம் கொண்ட Li-Fi இதுவரை ஆய்வுக் கூடத்தில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக அலுவலகம் மற்றும் தொழிற் கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது. 


இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 1 GB வேகத்தில் டேட்டா உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்ற இயலும் என்று  அறிவியலாள்ர்கள் கூறுகின்றனர். இது, சாதாரண  Li-Fi வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது.

Li-Fi  இயங்கும் முறை:

ஒரு முனையில் LED போன்ற ஒளிமூலமும்(light source) , மறுமுனையில் போட்டோ உணர்வி (Light Sensor) பொருத்தப்பட்ட சாதனங்களும் இருந்தால், விளக்கு ஒளிரும்போது 1 என்ற பைனரி எண்ணையும், விளக்கு அணையும்போது  0 என்ற பைனரி எண்ணையும் அளிக்கிறது. (நமது வீடுகள் உட்பட உள்ள  அனைத்து ஒளிமூலங்களும் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பது போல இருந்தாலும், உண்மையில் மிகக் குறுகிய நேரத்தில் விட்டு விட்டு ஒளிர்கிறது என்பதே உண்மை.)  இவ்வாறான பைனரி தகவல் பரிமாற்றத்தின் மூலமாக உலகில் உள்ள அனைத்து ஒளி மூலங்களையும் நாம் இணைய வழி தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம்.

ஒளியின் வேகம் அதிகமாக உள்ளதால் (299792458 1080 meters per second  or 1080 million kilometers per hour ) இதில் டேட்டா பரிமாற்றம் அதிவேகமாக இருக்கும்.

Li-Fi பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள் 

ஆப்டிகல் பைபர் கேபிள்களை அமைக்க முடியாத இடங்களில் Li-Fi தொழில்நுட்பத்தை  பயன்படுத்தலாம். 

உங்கள் அறையிலுள்ள அனைத்து விளக்குகளையும் வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைக்க முடியும்.

கார், பஸ் போன்ற வாகனங்களின் முன்விளக்குகளில் LED பயன்படுத்துவதன் மூலம்போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.

’’​Wi-Fi’’யை விட  விட நூறு மடங்கு வேகமானது. ஒளி சுவற்றில் ஊடுருவாது என்பதால் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும்  Li-Fi உதவும். ஒரு வினாடியில் 50 GB தகவல்களை அல்லது 20 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவிற்கு வேகமானது. 

அடுத்த  சில ஆண்டுகளில் Li-Fi     இணைய  சேவையில் புரட்சியை உருவாக்கும் என்று  எதிர்ப்பார்க்கலாம்.

For more details: