Saturday, April 25, 2015

பொறியியல் விண்ணப்பம் மே 6 , மருத்துவம் மே 11 - தேதிகள் அறிவிப்பு (Engineering May 6 , Medical May 11 - Date Announced)



தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள்  மே 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் Engineering படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 6ம் தேதியும், MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் மே 11ம் தேதியும் துவங்குகின்றன.

மெடிக்கல் விண்ணப்பங்கள் 

  மருத்துவக்கல்வி இயக்குனர் Dr.S.Geethalakshmi,M.D.,Ph.D. அவர்கள் கூறியதாவது: MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி  முதல் 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னை பல் மருத்துவக் கல்லூரியிலும் கிடைக்கும். http://www.tnhealth.org/ இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தரப்பட உள்ளன. மே 28ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 12ல், கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,555 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் (383) போக, 2,172 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கிறது. ஓமந்தூரார் புதிய அரசு கல்லூரியில் 100 இடங்களுக்கான அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்ஜினீயரிங் விண்ணப்பங்கள்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே 6ம் தேதி முதல் சென்னையில் சென்னையில் Anna University-Guindy, Govt Polytechnic College-Purasaivakkam, MIT-Chrompet, மற்றும் Bharathi Womens College-Broadway ஆகிய நான்கு இடங்களிலும், தமிழகம் முழுவதும், 60 இடங்களிலும் வினியோகம் செய்யப்படும். 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தரப்படும். அண்ணா பல்கலை வளாகத்தில் 29ம் தேதி வரையும், பிற இடங்களில் 27ம் தேதி வரையும் கிடைக்கும்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 29ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 250 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்புக்கு, அண்ணா பல்கலையின் 16 அரசு கல்லூரிகளும், 596 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதில், 2.30 லட்சம் இடங்கள் உள்ளன.

Friday, April 24, 2015

May 7th - 12th & May 21st - 10th வேற என்ன? Result தான்.

மே மாதம் 7-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளும், மே 21-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 7-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பன்னிரன்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

 தேர்வு முடிவுகள் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Thursday, April 23, 2015

அரசு பள்ளிகளில் 4360 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 24.04.2015 முதல் விண்ணப்பம் - 4360 LAB ASST POST ON GOVT SCHOOLS - APPLY THROUGH ONLINE

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24– ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 06.05.2015
 மேலும் விவரங்களுக்கு www.tndge.in வலைதளத்தை பார்க்கவும்

வேலூர் , திருவள்ளூர் மாவட்ட தினத்தந்தி  விளம்பரங்களை கீழே பார்க்கவும்


 

Wednesday, April 22, 2015

அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - DA Hike to 6% - DOWNLOAD THE G.O.

6% சதவீதம்  அகவிலைப்படி உயர்வு 
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 


அரசாணையை பெற இங்கே கிளிக் செய்யவும்.


உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திடுங்கள் - SEED YOUR AADHAAR NO. WITH VOTERS ID(EPIC) CARD

அனைத்து  வாக்குச்சாவடி மையங்களிலும்  சிறப்பு முகாம்  நடைபெறும் நாட்கள் 

19 April 2015 , 26 April 2015 ,  3 May 2015, 10 May 2015, 17 May 2015  
அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்



ஆன்லைனில் உங்கள் வீட்டிலிருந்தே வாக்காளர் பட்டியல் மற்றும் EPIC  விவரங்களை சரி செய்ய,
கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் உங்கள் வீட்டிலிருந்தே ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட 

 http://elections.tn.gov.in/Aadhaar_2015.htm   ஐ கிளிக் செய்யவும்.
 
மேலே வருகின்ற  திரையில் குறிப்பிட்ட நபரின் மொபைல் எண்ணிலிருந்தே எளிமையாக  ஆதார் எண்ணை  இணைக்க முடியும்.



கல்லூரிகள், பள்ளிகளில் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாட உத்தரவு

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 செப்., 27ம் தேதி, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியபோது, சர்வதேச யோகா தினத்தை, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாட கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., அறிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகப் பரிந்துரையில், UGC மற்றும் CBSE ஆகியவை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளன.

அதில் "ஜூன் 21ம் தேதி, கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும். ஐ.நா., சபை அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக, யோகா தினம் கொண்டாட உள்ளதால், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். யோகா குறித்த பயிற்சிகள், போட்டிகள், விழிப்புணர்வுப் படங்கள், வீடியோ கிளிப்பிங்ஸ் பாடல்கள் போன்றவற்றை உருவாக்கலாம். இதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதிருந்தே துவங்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்"  என  கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை

தமிழகத்தில் புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில்  மூன்று நாள் சர்வதேச மாநாடு சென்னையில் துவங்கியது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா உட்பட பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் பாண்டா அவர்கள் பேசும்போது,

நாட்டிலேயே, தமிழகத்தில்தான் அதிக பி.எட்., கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் இனி புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு மத்திய கல்வியல் கவுன்சில் அனுமதி அளிக்காது. தரமற்ற கல்லூரிகள் அதிகமாவதைத் தடுக்கவும், தரமான கல்லூரிகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய கல்லூரி தேவை என்று, மாநில ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், தடையில்லா சான்று அளித்தால் மட்டுமே, அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். 


Jurassic World - Official Global Trailer (HD)

Monday, April 20, 2015

விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து, ஒழுங்கு நடவடிக்கை

பத்தாம் வகுப்பு விடைத்தாள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை எச்சரித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று (20.04.2015)துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

திருத்தம் தொடர்பாக, அனைத்து Govt, Aided, Matric, Anglo Indian பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவுப்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் விவரம் பின்வருமாறு 

விடைத்தாள் திருத்தும் பணி  20.04.2015 ல் துவங்கி 25.04.2015க்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. எனவே  ஒரு ஆண்டுக்கு மேலாக, 10ம் வகுப்பு பாடம் நடத்தி அனுபவம் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு சம்மந்தப்பட்ட பள்ளிகள் விடுவித்து அனுப்ப வேண்டும்.

விடைத்தாள் திருத்தும்  பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ஊதியம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்களின் விடுமுறை நாள், ஆப்சென்ட் ஆக கணக்கிடப்படும்.

அவர்களது விடுமுறை நாள், மொத்த விடுமுறையில் வரைமுறை செய்யப்படாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ல் வெளியிடப்படலாம் என அறிவிப்பு

+2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகலாம் என, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:  

 மே 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும்.இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், ரிசல்ட் வெளியாகும் தேதி முடிவாகும். எப்படியும், மே 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள் ரிசல்ட் வெளியாகலாம்.பெரும்பாலும், மே 7ம் தேதியே 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் 

மே 8 முதல் 18 வரை B.Ed தேர்வுகள்



பி.எட்., படிப்புக்கான தேர்வுகள் மே 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கின்றன. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு.


வ.எண்
தேதி
பாடம்
1
மே 8ம் தேதி       
இந்திய சமூகத்தில் கல்வி 
2
மே 9ம் தேதி       
கற்றல் உளவியல் மற்றும் மனித வளர்ச்சி

3
மே 11ம் தேதி       
கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு 
4
மே 12ம் தேதி      
விருப்ப பாடங்கள் 
5
மே, 13, 14ம் தேதி    
மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் 
6
மே 15ம் தேதி
M.Ed மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல்,
புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் 
7
மே 16ம் தேதி
B.Ed பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி  அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல்                மற்றும் கணினி அறிவியல் பாடங்கள்
8
மே 18ம் தேதி
M.Ed முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப்   பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ்உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல்புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப்  பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும்.
 

Saturday, April 18, 2015

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது?

 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் வினியோகிக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. இதில், 2,176 எம்.பி.பி.எஸ். இடங்கள், 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், மே 11, 12ம் தேதிகளில் துவங்கும்  என எதிர்பார்க்கப் பட்டது.
 
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டு மே 14ல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை துவக்கினோம். இந்த ஆண்டு  பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதைப் பொறுத்தே, விண்ணப்ப வினியோக தேதியை முடிவு செய்வோம்" என்றார்.

+2 தேர்வு  முடிவுகள் மே 16 அல்லது மே 17ல்  வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Friday, April 17, 2015

பள்ளி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் Insight அறிவியல் கருத்தரங்கம் - அனுமதி இலவசம்

 Advertisement

 

 Insight 2015

Insight is back this year too on May 4, 5 and 6 from 9.00 A.M to 4.00 P.M. in the Department of Information Science and Technology, CEG Campus, Anna University. We invite students of IX-XII to participate. The workshop is conducted free of cost.

About Insight

This workshop aims at presenting the scientific thought process that has been followed for centuries in our country. All major areas of study from Mathematics and Astronomy to Logic and Grammar are influenced by this thought process. The highlight of this thought process is that it improves the ability to think differently, yet quickly; and communicate precisely. This is embedded in the techniques used for Mathematics, Logic and Astronomy. This workshop will train the students in these techniques through short-cuts and mental calculations that the students can effectively use in their day-to-day activities. In turn, these techniques will enhance in depth understanding of academics, lateral thinking and memory.

To Register Insight 2015                Click Here


TOPICS IN THIS WORKSHOP
 Indian Mathematics
  •   Place Value System
  •   Arithmetic – multiplication, squaring, division, square-root, divisibility and other short-cuts
  •   Algebra – solution of simultaneous and quadratic equations
Logic
  • Introduction to Tarka
  •   Classification from Tarka perspective
  •   Intellect, apprehension, perception and inference
  •   Inference structure
  •   Defective reasoning
 Astronomy
  • The planets and the Stars
  •   The Indian Calendar

காதல் வலையில் சிக்கும் பள்ளி மாணவிகள் - வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு


பள்ளி பொதுத் தேர்வுகள்  முடிந்துள்ள நிலையில், காதல் வலையில் சிக்கி, வீட்டை விட்டு ஓடும் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 25 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி,கல்வியில் பின்தங்கிய மாவட்டம். குறிப்பாக பெண் கல்வி சதவீதத்தில், மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. பொருளாதார ரீதியில், பின்தங்கியிருப்பதால், படிக்கும் வயதிலேயே, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் அதிகமாக உள்ளது.உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும், சினிமா, 'டிவி' உள்ளிட்டவை, பள்ளி மாணவியரை ஹீரோயினாக்கி விடுவதால், 'ரோமியோ'க்கள், பள்ளிகளை முற்றுகையிட துவங்கி விடுகின்றனர். மொபைல் போன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன், பள்ளிப் பருவம் முடிவதற்குள், 'காதலை' வளர்த்துக் கொள்கின்றனர்.பள்ளிப் படிப்பை முடித்தவுடன், பெண் குழந்தைகளை, உயர்கல்விக்கு அனுப்பாமல், பல குடும்பத்தினர், திருமணம் நடத்துவதில் குறியாக உள்ளனர். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, தேர்வு முடிந்தவுடன் மாணவியர், 'காதலனோடு' ஓட்டம் பிடிப்பது அதிகரித்து வருகிறது.


நடப்பு கல்வியாண்டில் இதைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்வு மையங்களையொட்டிய பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த வாலிபர்களை விசாரித்து விரட்டியடித்தனர். ஆனாலும், தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 25க்கும் மேற்பட்ட மாணவியர், குறிப்பாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதியோர் மாயமாகி உள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.

புள்ளி விவரம் 


போலீஸ் விசாரணையில், பெரும்பாலான மாணவியர், காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, இது போன்று காணாமல் போன மாணவியர் எண்ணிக்கை, 17. இந்த ஆண்டு, 25 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரம், போலீசில் பதிவு செய்யப்பட்ட புகார் அடிப்படையிலானது. போலீசில் புகார் செய்யாத குடும்பத்தினர் பலர், தனிப்பட்ட முறையில் தேடி வருவதும் நடந்து வருகிறது.

போலீசார் கூறியதாவது:

காதல் என்ற பெயரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவியர் ஓட்டம் பிடிப்பது அதிகரித்து வருகிறது. பல ரோமியோக்கள், பள்ளி மாணவியரை இலக்காக கொண்டு உள்ளனர். வாழ்க்கை குறித்த எவ்வித தெளிவும் இல்லாமல், சில நாளிலேயே, இந்த காதல் முடிவுக்கு வந்து விடுகிறது. பலரும், மாணவியரை விட்டு ஓடி விடுகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு

பெற்றோர்,குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். நடவடிக்கையில் சந்தேகம் இருந்தால், விசாரித்து அறிய வேண்டும். ஏனென்றால் இவ்வாறு ஓட்டம் பிடிக்கும் மாணவியரில், 90 சதவீதம் பேர், சில நாட்களிலேயே கைவிடப்படுகின்றனர். மாணவியருக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

காற்றினால் இயங்கும் 4 சக்கர வாகனம் கண்டுபிடித்த மாணவர்கள்


திண்டுக்கல்: திண்டுக்கல் PSNA இன்ஜி., கல்லூரி மாணவர்கள், காற்றினால் இயங்கும் மாசு ஏற்படுத்தாத நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரெக்ஸ்ஆரோ, சந்தோஷ் தங்கராஜ், ரிஷிமணிகண்டன், சதீஷ்பாண்டியராஜா, மிதிவண்டியின் ப்ரீ வீல் தத்துவத்தில், காற்றால் இயக்கப்படும் நான்கு சக்கர (மாதிரி) வாகனத்தை தயாரித்துள்ளனர். துறை தலைவர் வாசுதேவன், பேராசிரியர் கண்ணன் உதவியுடன் ரூ.14,500ல் வாகனம் தயாரிக்கப்பட்டது.

பேராசிரியர் கண்ணன் கூறியதாவது: காற்றில் இயங்குவதால் மாசு ஏற்படாது. சைலன்சர் இதில் இல்லை. பத்து பார் அளவுள்ள காற்றை டேங்கில் அடைத்து, ஏர் ரெகுலேட்டருக்கு அனுப்பிவைக்கப்படும். பின், செலிநாய்டு வால்வு மூலம் இரண்டு ஏர் சிலிண்டர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக காற்று செலுத்தப்படும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சிலிண்டர் மூலம், திறன் பெறப்பட்டு ப்ரீ வீலுக்கு சக்தி கடத்தப்பட்டு வாகனம் நகரும். மணிக்கு 17 கி.மீ., செல்லும். 60 மீட்டரை 10 நொடிகளில் கடக்கும். வேகத்தை கட்டுப்படுத்த, டைமிங் கண்ட்ரோல் போர்டு அமைத்திருக்கிறார்கள். இதேபோல் காற்று மறுபடியும் டேங்கிற்கு கடத்தப்படுகிறது. தொடர்ந்து காற்று வெளியேறாமல் திறன் பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது, மாதிரி கண்டுபிடிப்புத்தான். தற்போது, கல்லூரி வளாகத்தில் பொருட்களை கொண்டுசெல்ல பயன்படுத்த உள்ளோம். அடுத்தகட்ட ஆய்வில், பெரியளவில் காற்றினால் இயங்கும் வாகனம் உருவாக்குவோம், என்றார்.

Wednesday, April 15, 2015

UGC NATIONAL ELIGIBILITY TEST (NET) - NOTIFICATION JUNE 2015

UGC NET  -  JUNE 2015

NOTIFICATION



It is notified that CBSE  will conduct the next  UGC-NET for Junior Research  Fellowship & Eligibility for Assistant Professor  which  will be held on 28th June  2015 (Sunday). The candidates who desire to appear in the test may see the detailed notification available on the website  www.cbsenet.nic.in  from  15th April  2015. The candidates are required to apply online only  from  16th April, 2015. The last date for applying online is  15th May 2015 and fee can be paid up to 16th May, 2015. 
 
 Important Dates
Online Form Submission
16th April 2015
Last date for Applying Online & generation of filled Bank Challan for Fee.
15th May 2015
Last date of submission of Fee through online generated Bank Challan, at any branch of (SYNDICATE/CANARA/ICICI BANK)
16th May 2015
Date of Examination
28.06.2015

 Fees



Category
Fee Amount
General
Rs. 600 /- (Six Hundred)
OBC 
Rs. 300 /- (Three Hundred)
SC / ST / Person with Disabilities(PwD)
Rs. 150 /- (One Hundred Fifty)
 

மாணவர்களின் ‘பஸ் பாஸ்’களில் அடுத்த ஆண்டு முதல் ரத்தப் பிரிவு இடம்பெறும்.

BUS PASS 

மாணவர்களின் ’பஸ் பாஸ்’களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகிறது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதற்கட்டமாக, அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மாணவ, மாணவியரின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதை, EMIS, I.D.கார்டு, பஸ் பாஸ்  போன்றவற்றில் குறிப்பிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் மூலம் உத்தரவிடப் படுகிறது.

வரும் கல்வியாண்டில்  ’பஸ் பாஸ்’  கோரும்  மாணவர்களின்  பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், பஸ்சில் ஏறும், இறங்கும் இடம், அந்தப் பாதையில் வரும் பஸ்களின் தடம் எண் போன்ற விவரங்களை, ஆன்-லைன் பதிவேட்டில் (EMIS) குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்துடன் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து, ரத்தப் பரிசோதனை நடத்தி, அவர்களின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதையும் ஆன்-லைனில் மாணவர் விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை, வரும், 28ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ரத்தப் பிரிவுடன் கூடிய விவரங்களை போக்குவரத்துத் துறைக்கு அனுப்பி, பள்ளி திறக்கும் ஜூன், 1ம் தேதி, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, ’பஸ் பாஸ்’ அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tuesday, April 14, 2015

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.




             யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
             தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
             நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

             சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
             இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
             இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
  
             வானம் தண்துளி தலைஇ, ஆனாது
             கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
             நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
             முறைவழிப் படூஉம்என்பது திறவோர்

             காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
             பெரியோரை வியத்தலும் இலமே;
             சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


                     கணியன் பூங்குன்றன்
                                                 ( புறநானூறு - 192)







பொருள்:                                                                                               © deccanbluediamonds

            எவ்வூரும் எமது ஊர்.அனைவரும் எம் சொந்தம்.

            துன்பங்களும், இன்பங்களும் நம்மால் தான்.

            பிறர் தந்து வருவதல்ல தீதும், நன்றும்.



            மரணம் என்பது இயற்கை.

            அதனால்,

            வாழ்வு இனிது என

            மகிழ்வதும் தவறு.

            துறவு கொடிது என

            இகழ்வதும் தவறு.



            வெட்டும் மின்னலில்

            விழுகின்ற நீர்த் துளி

            கட்டுக் கடங்காத வெள்ளமாய்

            கல்லும் மண்ணும் புறண்டோட,

            அதில் சிக்கி அதன் வழியே போகும்

            ஓடம் போன்றது உயிர்.



            அது முன்னர் இட்ட முறைவழியே

            போகத் தான் செய்யும் என

            முன்பே அறிந்தவர் முனிவர்.

            அதனால்


                             பெரியோர் என நினைப்பவரை

            வியத்தலும் இல்லை.

            சிறியோரை இகழ்தல் என்பது

            அதனினும் இல்லை.            

                                                                 

                            
                                          

Sadhguru Tamil Video சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Sadhguru...