Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Thursday, October 27, 2016
Download ccleaner for Removing Temporary Files on your computer
CCleaner is the best tool for cleaning your Computer. It protects your privacy and makes your computer faster and more secure
Click Below to Download ccleaner.exe - 7.88 MB
Click Below to Download ccleaner.exe - 7.88 MB
TNPSC Group IV தேர்வுக்கான Hall Ticket இணையதளத்தில் வெளியீடு
TNPSC Group IV தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.
5,451 அரசுத் துறை பணியிடங்களுக்கான Group IV தேர்வு நவம்பர் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது.
இதனை, TNPSC இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு பணம் கட்டிய ரசீதுடன் அக்டோபர் 31 தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
Click Here to Download Group IV Hall Ticket
5,451 அரசுத் துறை பணியிடங்களுக்கான Group IV தேர்வு நவம்பர் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாகியுள்ளது.
இதனை, TNPSC இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு பணம் கட்டிய ரசீதுடன் அக்டோபர் 31 தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
Click Here to Download Group IV Hall Ticket
Wednesday, October 26, 2016
அரசு ஊழியருக்கான சம்பள அறிவிப்பை திரும்பப் பெற்றது ஏன்? டாக்டர் ராமதாஸ் கேள்வி
தீபாவளி திருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம்
28ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, சிறிது நேரத்தில் அதை
திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டிற்கான தீபஒளி திருநாள் இம்மாத இறுதியில் 29-ஆம் தேதி
வருவதால், அதைக் கொண்டாட வசதியாக இம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு
தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்திருந்தன.
புதுச்சேரியில் தீபஒளி திருநாளையொட்டி நேற்றே ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக
அரசு ஊழியர்களிடையே இக்கோரிக்கை தீவிரமடைந்தது. இந்தக் கோரிக்கையில் உள்ள
நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாத
ஊதியம் நாளை மறுநாள் 28ம் தேதி வழங்கப்படும் என நேற்று மாலை ஆணை
பிறப்பித்தது.
இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் அந்த அரசாணையை ரத்து
செய்த அரசு, ஊழியர்களுக்கு நாளை மறுநாள் ஊதியம் வழங்கப்படாது; வழக்கம் போல
மாதக் கடைசி நாளான 31ம் தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என்று புதிய
அரசாணையை வெளியிட்டது. தமிழக அரசின் இந்தக் குளறுபடியால் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானதோ,
நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில்
அக்டோபர் ஊதியம் கடந்த 25ம் தேதி வழங்கப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்கும்
போது தமிழகத்தில் இது ஏன் சாத்தியமில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை
சாத்தியமற்றதாக இருந்தால் கூட அதை சாத்தியமாக்குவது தான் நிர்வாகத்தின்
பணியாக இருக்க வேண்டுமே தவிர, அறிவித்ததை திரும்பப்பெறுவது அழகல்ல.
மேலும் அவரது அறிக்கையில்,
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு
நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால், தமிழகத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, மத்திய அரசு ஊழியருக்கு
கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்
நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாதது
செய்யாத தவறுக்கு கிடைத்த இரட்டை தண்டனையாகும்.
எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர்
ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, 7-ஆவது
ஊதியக்குழு பரிந்துரை, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை
செயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும்
உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'SMART' ரேஷன் கார்டுக்கு 'AADHAAR' விபரம் தர நவம்பர் 30 வரை அவகாசம்
தமிழகத்தில், பழைய ரேஷன்
கார்டுக்கு பதிலாக 'Smart Ration Card' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு,
அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.
நேற்று வரை, 4.76 கோடி
மட்டுமே, ஆதார் விபரங்களை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த
விபரத்தை தராததால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.
எனவே, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர,
நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு நிர்ணயிக்க அரசிடம்
ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு,
ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
Wednesday, October 19, 2016
Learning Materials (Revised) for 12th Standard By TN SCERT
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்ய உரிய இணைப்பை கிளிக் செய்யவும்
|
Tuesday, October 18, 2016
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination,
2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி
|
Postal Assistant, Sorting Assistant
|
காலியிடங்கள்
|
3,281
|
பணி
|
Data Entry Operator
|
காலியிடங்கள்
|
506
|
பணி
|
Court Clerks
|
காலியிடங்கள்
|
26
|
சம்பளம்
|
மாதம் ரூ.5,200 - 20,200 + 2800 GP
|
வயதுவரம்பு
|
01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்
|
கல்வித்தகுதி
|
+2 தேர்ச்சியுடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும்,
ஹிந்தியில்
நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
|
தேர்வு செய்யப்படும் முறை
|
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
|
தேர்வு மையங்கள்
|
சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி,
திருநெல்வேலி
|
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
நடைபெறும் தேதி
|
07.01.2017 - 05.02.2017
|
விண்ணப்பக் கட்டணம்
|
ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
|
விண்ணப்பிக்கும் முறை
|
www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
|
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
|
07.11.2016
|
மேலும் விவரங்கள் அறிய
|
www.ssconline.nic.in மற்றும்
Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor, College Road,
Chennai - 600006
|
Saturday, October 15, 2016
ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க ’மொபைல் ஆப்’! ( Mobile App Watch Register for Govt School Headmasters)
அரசு பள்ளிகளில்,
ஆசிரியர்கள் பாடம்
நடத்துவதை
கண்காணிக்க, மொபைல்
போன் ஆப் கொண்டு
வரப்பட உள்ளது.
ஒவ்வொரு தலைமை
ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன்
அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க
வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க
வேண்டும்.பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும்.
ஆனால், பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் தற்போது பின்பற்றும் நடைமுறையால் (?@%$-...) ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகள் தெரிவதில்லை. இந்நிலையை
போக்க, தனியார் பல்கலை உதவியுடன், மொபைல் போன் ஆப் எனப்படும், செயலி
உருவாக்கப்படுகிறது. இந்த செயலி மூலம், அனைத்து பள்ளி
தலைமை ஆசிரியர்களும், அந்தந்த மாவட்ட மற்றும் மாநில தலைமை
அதிகாரிகளுடன் இணைக்கப்படுகின்றனர்.
தலைமை
ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பு
எடுப்பதை கண்காணிக்கும் போது, மொபைல் ஆப் வசதியை, On செய்து, புகைப்படம் எடுக்கலாம். ஆசிரியர் பாடம் நடத்துவதை ஆடியோ,வீடியோ பதிவுகள் செய்யலாம். அதை அப்படியே, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
’Mobile App’ எப்படி செயல்படும்?
- ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த வகுப்புக்கு செல்லும் தலைமை ஆசிரியர், பாடம் நடத்தப்படுவதை, மொபைல் ஆப்பில் உள்ள கேமரா மூலம் படம் எடுக்க வேண்டும்
- பின், அதில் கேட்கப்படும், 10 வகையான தகவல்களை, தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.
- ஆசிரியர் கூறும் அறிவுரை, பாடம் நடத்தும் விதம், என்ன பாடம், மாணவர்களின் கேள்வித் திறன், ஆசிரியர் அளிக்கும் பதில் என, ஒவ்வொன்றையும், தனி பதிவுகளாக நிரப்ப வேண்டும்.
- கடைசியில், ஆசிரியர் எப்படி பாடம் நடத்தினார்,எப்படி நடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்
- உயரதிகாரிகள், புகைப்படம் மற்றும் பதிவுகள் மூலம், ஆசிரியர்களின் திறனை நேரலையாக அறியலாம்.
- தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
- இந்த தகவல்கள் அனைத்தும், சர்வரில் ஏற்றப்பட்டு, தேவைப்படும் போது, நேரம், தேதியுடன் ஆய்வு செய்ய முடியும்.
புதிய, வண்ண, வாக்காளர் அடையாள அட்டையை பெற விரும்புவோர் இ-சேவை மையங்களில் ரூ.25/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
இன்று(15.10.2016)முதல், புதிய, வண்ண, வாக்காளர் அடையாள அட்டையை பெற விரும்பும் வாக்காளர்கள், தலைமைச் செயலகம் , அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ -சேவை மையங்களில் சென்று, ரூ 25/- செலுத்தி, தங்களை வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரியப்படுத்தி, வாக்காளர்கள் தங்கள் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
Tuesday, October 11, 2016
முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு (O.Panneerselvam gets Chief Minister’s portfolios)
முதல்வர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த பொதுத்துறை, பொது நிர்வாகம், உள்துறை, IAS, IPS, IFS மற்றும் காவல்துறை உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் சட்டப்பிரிவு 166 (3)-ன்படி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று திரும்பும்வரை இனி, அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார். இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார்.' எனவும்
ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
Friday, October 7, 2016
நாளை(08.10.2016) முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகள் இயங்காது. வங்கிப் பணிகளை இன்றே முடித்துக்கொள்ளவும்
நாளை இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும் 10.10.2016 - ஆயுத பூஜை, 11.10.2016 - விஜயதசமி, 12.10.2016 - மொஹரம் என 3 நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறை என்பதால் அடுத்த வியாழன் (13.10.2016) அன்று தான் வங்கிகள் செயல்பட தொடங்கும்.
இதனால் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிப்பணிகளை இன்றே முடித்துக்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், இதனால் ATM இயந்திரங்கள் பணமில்லாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்(CPS) குறித்து விரைவில் அறிக்கை: ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை
2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே
செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலுவலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் நிபுணர் குழுவை
முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை
அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள்
கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது.
இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள் நேற்று
சந்தித்தனர்.
ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Wednesday, October 5, 2016
காஸ் மானியம்: ஆதார் எண் சமர்ப்பிக்க நவம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக காஸ் மானியம் பெற, ஆதார் எண் சமர்ப்பிக்க செப்டம்பர் 30 வரை இறுதி கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீட்டித்து நவம்பர் 30
ம் தேதிக்குள், ஆதார் எண்ணை, காஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந்
தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் சார்பில்
அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு
தாக்கல் தொடங்குவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பாக, தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்வதாக நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு :
"தமிழகத் தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து
செய்யப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட
வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆணிவேர் சரியாக
இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும்.
புதிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்னர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
சமூகத்துக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும்.
கிரிமினல் பின்னணி
கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலை
ஜனநாயக முறைப்படி செயல்படுத்த வேண்டும். பணம் தேர்தல் வெற்றியை
நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக் கூடாது.
புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு, டிசம்பர், 31க்குள் தேர்தல் நடத்தப் பட
வேண்டும். அதுவரை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகளை அரசு
நியமிக்க வேண்டும்."
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தெரிவித்தார்.
Sunday, October 2, 2016
Thursday, September 29, 2016
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதன்படி,
1. லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
2. நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
3. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
4. லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை என மொத்தம் 20% வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.
5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும்.
7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகையோ வழங்கப்படும்.
8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8400 ரூபாய் அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர். தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் போனஸாக வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, September 27, 2016
TNPSC தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? (TNPSC Exam's Preparation Tips)
Base : M.Karthikeyan @ Dinamalar
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டு தோறும் Group-I, Group-II, Group-IV, Group -VIII, VAO மற்றும் பலவிதமான தேர்வுகளை நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது.
கல்வி ஒன்று மட்டுமே துணையாகக் கொண்ட, வசதியற்ற பல்லாயிரம் இளைஞர், இளம்பெண்களின் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றக்கூடியதாக விளங்கும் TNPSC தேர்வுகளில் வெற்றியடைய வேண்டுமானால், சிறப்பான திட்டமிடல் வேண்டும்.
TNPSC தேர்வுகளுக்கான திட்டமிடல் எவ்வாறு
அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் இங்கே வழங்கப் படுகிறது.
- தேர்வுக்கான தேதி அறிவிப்பு வந்தவுடன், தேர்வு நடைபெறும் நாள்வரையிலான நேரத்தை. பாடத்திட்டத்திற்கேற்ப பகுத்து படிக்க வேண்டும்.
- தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.
- ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.
- நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம் என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும். முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
- தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.
அறிவியல்
தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல்
பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல்
ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.
வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம்,
நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்),
கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.
ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கனிகள் -
விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல்
ஆகியவையும் இடம் பெறலாம்.
சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு:
போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது.
பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள்,
பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள்
முக்கியத்துவம் பெறுகின்றன.
வரலாறு
வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947),
புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும்
மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர்
காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.
பொருளாதாரம்
குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே
பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை
அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.
பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்
போட்டித்
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு
மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.
புவியியல்
இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்
வினாத்தாளில் நான்கில்
ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.
சில குறிப்புகள்
முக்கிய ஆண்டுகளை நினைவில்
வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை
இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு
பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை
கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.
குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8
ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை
அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.
முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில்
வெற்றி பெறலாம்.
அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி
உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
ஊக்க முடையா னுழை.
வாழ்த்துக்கள்
Composed By: DBD Team
Sunday, September 25, 2016
DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER- 2016 - Registration Upto 30.09.2016 ( Reminder Notice)
தமிழக அரசின் துறைத்தேர்வுகள் 23.12.2016 முதல் 31.12.2016 வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 30.09.2016 கடைசி நாளாகும்.
Subscribe to:
Posts (Atom)