Saturday, October 29, 2016

கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு. வங்கி ATM உட்பட அனைத்து பரிமாற்றங்களிலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 


அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளான ரூ.1000, ரூ 500 ஆகியவற்றின்  போலி கரன்சி நோட்டுகளை, சில விஷமிகள், பொது இடங்களிலும், கடைகளிலும் புழக்கத்தில் விட துவங்கியுள்ளனர். எனவே அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அனைத்து பொது மக்களும்  தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என  ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.


கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க, ரூபாய் நோட்டுகளில் மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

1000 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


500 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


https://paisaboltahai.rbi.org.in என்ற இணையதளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்த  பாதுகாப்பு அம்சங்களை  முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும்.



No comments: