Friday, November 13, 2015

மழையில் நனைந்த மலர்

(மழையில வேற என்ன பண்றது? தெரியலைங்க.. அதான். தப்பிருந்தா மன்னிச்சுக்குங்க.)


இது நவம்பர் மாதம்.
அலைகின்ற என் விழிகளின் தேடலில்

கலைந்து போனது

அமைதியான மாலைப் பொழுது.

நான் பார்க்கும்போதே

ஜன்னலுக்கு வெளியே

சிறு தூறல்கள்

மழையாகிப் போனது.



தனிமையான நினைவுகளில் சிறைப்பட்டு
இன்னும்
எவ்வளவு நேரந்தான் இருப்பேன்!

ஜன்னலுக்கு வெளியே
மழை மீண்டும் தூறலானது.

வாசலுக்கு வந்து நின்ற

என் பாதங்கள் பட்டு

சிதறின சில்லென்ற தூறல்கள்.


இதோ..

சில்லென்ற தூறலின்

இதமான அடிகளை வாங்கும்

எனது தோட்டத்தின்

ரோஜாக்களோடு நானும்...

முகர்நதால் வாடும்
தொட்டால் கசங்கும்
எனது தோட்டத்தின் ரோஜாக்களே! 

என்னை விட்டு
அவர் எங்கே ஒளிந்தார்?
மெல்ல நான்

நழுவும்போது

அவர் இழுத்துப் பிடிக்கும்

என் கூந்தல்

இன்று அவரில்லாமல்

காற்றில் அலைகிறது.

வளைத்து அணைக்க

அவரில்லாமல்

என் இடை

எழிலழிந்து

போனது.

அவரின் அழகான

உதடுகளைத் தொடாத

என் உதடுகள்

இன்று

உணவைக் கூட மறுக்கிறது.



முகர்நதால் வாடும்

தொட்டால் கசங்கும்

எனது தோட்டத்தின் ரோஜாக்களே..

அவர் முத்தமிட்ட நேரங்களில்

உங்களை தோற்கடித்தன

என் கன்னங்கள்.


என் கன்னங்கள் சிவப்பேற

அவர் வரும்நாள்

எந்நாளோ?


தூறல் மீண்டும்

மழையானது.