Sunday, May 31, 2015

Maggi நூடுல்ஸ் - தீங்கு விளைவிக்கும் பொருட்களால் நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு

 
மேகி நூடுல்ஸின் பாதுகாப்பு தரத்தை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனங்கள், மற்றும் அதன் மேலாளர்கள் 3 பேர் மீது, பாரபங்கி  நீதிமன்றத்தில்  உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’ ஐ  நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். 

இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் பெரும் சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள Easyday கடையில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்து ஆய்வு  செய்தது.

அப்போது அதில் மோனோ சோடியம் குளூட்டாமேட் (Mono sodium Glutamate- MSG)
என்ற அமினோ அமிலம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், 17 மடங்கு அதிகமாக இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல்நலத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது.  இதைத்தொடர்ந்து  மாநில சந்தைகளில் இருந்து  நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிடப்பட்டது. மேலும்,  பாரபங்கி கூடுதல்  தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நெஸ்லே நிறுவனம் மீது நேற்று வழக்கு  தொடரப்பட்டது.

இது குறித்து பாரபங்கி உணவு பாதுகாப்பு அதிகாரி வி.கே.பாண்டே கூறுகையில், ‘ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவன ஆணையர்  பி.பி.சிங்,  நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார். அதன் அடிப்படையில்  ஹரோலியில் உள்ள நகல் கலன் தொழில்நுட்ப  பூங்காவில் உள்ள நெஸ்லே நிறுவனம், டெல்லியில் உள்ள நெஸ்லே நிறுவனம், பாரபங்கியில் உள்ள Easyday  நிறுவனம், டெல்லியில் உள்ள Easyday,  நிறுவன மேலாளர்கள் மோகன்குப்தா, சபாப்ஆலம், பாண்டே ஆகியோர் மீது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது ’ என்றார்.

பாரபங்கியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக திசை திருப்பிய நடிகர் அமிதாப், நடிகைகள்  மாதுரிதீட்சித், ப்ரீதி ஜிந்தாஆகியோர் மீது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனியாக நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்கள்  மீது குற்றவியல் சட்டம் 420, 272, 273, மற்றும் 109 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Saturday, May 30, 2015

கள்ளநோட்டு என அறியாமல் வைத்திருந்தால் குற்றமில்லை



'கள்ளநோட்டு என அறியாமல் கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது குற்றமல்ல' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவர், வங்கியில் செலுத்திய கரன்சி நோட்டுகள், சிலவற்றில் கள்ள நோட்டுகள் இருந்தன. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் மே 28 அன்று விசாரணைக்கு வந்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  " கள்ளநோட்டு வைத்திருந்த நபருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சரியல்ல. தன் கையில் இருக்கும் நோட்டுகளில், சில கள்ளநோட்டுகளும் உள்ளன என்பதை அவர் அறியாத நிலையில், அவரை குற்றவாளியாக கருத முடியாது. வங்கியில் அவர் செலுத்திய நோட்டுகள் கள்ள நோட்டுகள் என வங்கியில் தெரிவித்த பிறகும் அவர் தப்பி ஓடவில்லை என்பதால், அந்த கள்ளநோட்டை அவர் வேண்டுமென்றே வைத்திருக்கவில்லை என்பது புலனாகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறேன்" என  உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நிலையில், கள்ளநோட்டு என தெரியாமல், பிறர் கொடுக்கும் நோட்டுகளை வைத்திருந்ததால் பலர் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

San Andreas - Official Trailer 3 [HD]

Friday, May 29, 2015

Bajrangi Bhaijaan - Official Teaser ft. Salman Khan, Kareena Kapoor Khan...

‘திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ - பள்ளிக்கல்வி இயக்குனர்

குட்டிப் பசங்க கவலை 



“பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,” என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.


கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. தினந்தோறும்  தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து ஏதேனும் அறிவிப்பு வருகிறதா என ஆராய்ச்சியே செய்து வருகின்றனர்.


இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் கூறியதாவது: 

"பள்ளி திறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும். பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.

XII SCAN COPY DOWNLOAD & RETOTAL/ REVALUATION APPLICATION

XII SCAN COPY DOWNLOAD & RETOTAL/ REVALUATION APPLICATION

Click Here to Download the Scaned Copy of XII Public Examination Answer Script Papers (Tamil, English, C.S, Maths, Physics, Chemistry, etc.....

Thursday, May 28, 2015

3 Monkeys - Award Winning Comedy Tamil Short film

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு....???


"குழப்பத்தில்" ஆசிரியர்கள்  

இன்னும் நான்கு நாட்களில்  பள்ளிகள்  திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.  இவ்வாறு நடக்கும்  கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

வழக்கம் போல இந்த ஆண்டும்  காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாறுதல் பெற  ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு  இருந்தனர். ஆனால்   ஜூன் 1ம் தேதி பள்ளிகள்  திறக்க உள்ள நிலையிலும், கலந்தாய்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அறிவிக்காதது, ஆசிரியர் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டில் தாமதமாக, ஜூன், ஜூலை மாதங்களில், கலந்தாய்வு நடந்தது. இதனால், பள்ளி வேலை நாளில், ஆசிரியர்கள் பலர் விடுமுறை எடுத்து, கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்னும் நான்கு நாளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 
இதுவரை, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கோடை விடுமுறையில் கலந்தாய்வு நடத்தியிருந்தால், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 1ம் தேதியே, சம்பந்தப்பட்ட புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர்வர். குடும்பத்தை, மாற்றுவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.

பள்ளி துவங்கிய பின் கலந்தாய்வு நடத்தினால், ஒரு பள்ளியில், ஒரு மாதம் பாடம் நடத்திய பின், அந்த ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாறிச் செல்வர். அதே பாடத்துக்கு, வேறு ஒரு ஆசிரியர் வருவதால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிப்பு பாதிக்கும்.

பள்ளி திறந்த பின், வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு, வேறு பள்ளியில், ’சீட்’ பெற முடியாத நிலையும் ஏற்படும். மொத்தத்தில், பள்ளி திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால், ஆசிரியர்கள், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் மிகுந்த குழப்ப மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

 

CBSE X EXAM RESULT TO BE PUBLISHED AROUND 12.01 PM ON cbseresults.nic.in/

 
 

CBSE  10ம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

WEBSITE FOR X RESULT

Wednesday, May 27, 2015

10ம் வகுப்பு (SSLC) தற்காலிக மதிப்பெண் பட்டியல் (PROVISIONAL MARKSHEET) - பள்ளிகள் இன்று பதிவிறக்கம் செய்யலாம்


நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 21.05.2015  அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள்  (PROVISIONAL MARKSHEET) இன்று (27.05.2015) பள்ளிகளில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

WEBSITE FOR SCHOOL'S:



12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோட் செய்ய வழங்கப்பட்ட அதே User ID, Password ஐ பயன்படுத்தி மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

மே 29ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு TC, Mark sheet வழங்கப் படும்.

Tuesday, May 26, 2015

கர்ப்பிணிகளில் பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகள் ஏற்படுத்தும் தாக்கம்


 

(Paracetamol-acetaminophen)

கருவுற்ற காலத்தில் பெண்கள்  அதிக அளவிலான பாராசிட்டமால் (Paracetamol-acetaminophen) மாத்திரைகளை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சுரம்(Fever), தலைவலி( headache), உடல்வலி(muscle aches), முதுகு வலி(backache), பல்வலி(toothaches), சளி(colds)   என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மருந்தானது எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகள்  இதனை தெரிவித்துள்ளனர்.

எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பாராசிட்டமால் மருந்தை  7 நாட்கள் தொடர்ந்து   கொடுக்கப்பட்ட எலிகளின் கருவில் Testosterone அளவு மிகவும் குறைவாக இருந்தது கண்டறியப் பட்டது.

ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த Testosterone ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.  எனவே கர்ப்பிணிகள் பாராசிட்டமால் வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மட்டும் குறைந்த காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் எப்போது?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் 2 நாட்களில் முடிய உள்ளது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து, 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.

இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்பு கலந்தாய்வைத் தொடர்ந்து, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும், கலந்தாய்வு துவக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தாலும், அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாததால், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டிய கடைசி மாதத்தில், கலந்தாய்வு நடத்தும் நிலை தொடர்கிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 28ம் தேதியுடன் முடிகிறது.

முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 19ல் நடக்க உள்ளது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் வழங்கவில்லை.

இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர, கட் - ஆப் மதிப்பெண் இருந்தும், இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என, அரை ஆண்டு காலம் காத்திருப்பது நரக வேதனை. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், இந்த சிக்கல் தீரும் என மாணவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: கல்லூரிகளில், ஆயுஷ் கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது. முறையான அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு, ஜூலை 14ல் விண்ணப்பம் தரப்பட்டு, அக்., மாதம்தான் கலந்தாய்வு நடந்தது.

இந்த ஆண்டு, ஜூன், இரண்டாம் வாரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவை, ஆயுஷ் கவுன்சில் அனுமதியைப் பொறுத்தே அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Monday, May 25, 2015

LAB ASSISTANT SCREENING TEST (31.05.2015) - HALL TICKET DOWNLOAD HERE


SCREENING TEST FOR LAB ASSISTANT - MAY - 2015 
HALL TICKET DOWNLOAD 

Click Here to Download


தமிழக பள்ளிக்கல்வித் துறையில்  காலியாக உள்ள  4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான  தேர்வுகள் தமிழகம் முழுவதும்  31.05.2015 காலை 10.00 முதல் 12.30 வரை நடைபெற உள்ளது. இதற்கான Hall Ticket  டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஆட்குறைப்பு: காலிப் பணியிடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு


தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில், ஆசிரியர் எண்ணிக்கையை, பள்ளிக்கல்வித் துறை ஒழுங்குபடுத்தி வருகிறது.இதனால், ஒன்று முதல் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரையுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை முதற்கட்ட மாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில் மொத்தத்தில், 30 முதல் 50 மாணவர்கள் மட்டுமே இருப்பது தெரிய வந்து உள்ளது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி, மொத்த மாணவர்களுக்கும், 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்களை நிர்ணயித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக, தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், கூடுதலாக உள்ள ஆசிரியர் இடங்களை, சரண் செய்யும்படி, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை அதிகம் வைத்திருப்பதால், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு தேவையின்றி கூடுதல் மானியம் வழங்க வேண்டி உள்ளது; அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அந்த இடங்களை திரும்பப் பெற்று, தேவையுள்ள அல்லது காலியான இடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், அரசுக்கு செலவு குறையும்' என்றனர்.

Friday, May 22, 2015

நாளை (23.05.2015) முதல்வர் பதவியேற்பு விழா - 28 அமைச்சர்கள் பட்டியல்


அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்  மே 23 (சனிக்கிழமை) அன்று  முதல்வராக பதவியேற்கிறார். 5-வது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்கும் அவருடன் பட்டியலில் உள்ள  28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.



வ.
எண்
பெயர்
துறை
1
செல்வி ஜெ. ஜெயலலிதா
முதல்வர் | காவல், உள்துறை
2
ஓ.பன்னீர்செல்வம்
நிதி, பொதுப்பணித் து
3
நத்தம் ஆர்.விஸ்வநாதன்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4
ஆர்.வைத்திலிங்கம்
வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதி
5
எடப்பாடி கே.பழனிச்சாமி
நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
6
ப.மோகன்
தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்
7
ப.வளர்மதி
சமூல நலத்துறை, சத்துணவு
8
பி.பழனியப்பன்
உயர் கல்வித்துறை
9
செல்லூர் கே.ராஜூ
கூட்டுறவுத்துறை
10
ஆர்.காம
உணவு, இந்து சமய அறநிலைத்துறை
11
பி.தங்கமணி
தொழிற்துறை
12
வி.செந்தில் பாலாஜி
போக்குவரத்துத்துறை
13
எம்.சி.சம்பத்
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை
14
எஸ்.பி.வேலுமணி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை
15
டி.கே.எம். சின்னை
கால்நடை பராமரிப்புத் துறை
16
எஸ்.கோகுல இந்திரா
 கைத்தறி மற்றும் துணிநூல்
17
எஸ்.சுந்தரராஜ்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
18
எஸ்.பி.சண்முகநாதன்
சுற்றுலாத்துறை
19
என்.சுப்பிரமணியன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
20
கே.எ.ஜெயபால்
மீன்வளத்துறை
21
முக்கூர் என்.சுப்பிரமணியன்
தகவல் தொழில்நுட்பம்
22
ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை
23
கே.டி.ராஜேந்திர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
24
பி.வி.ரமணா
பால்வளத்துறை
25
கே.சி.வீரமணி
பள்ளிக் கல்வித்துறை
26
தோப்பு என்.டி.வெங்கடாசலம்
சுற்றுச்சூழல்துறை
27
டி.பி.பூனாச்சி
காதி, கிராமத் தொழில்
28
எஸ்.அப்துல் ரஹிம்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
29
சி.விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை

TNPSC GROUP IV தேர்வு முடிவுகள் வெளியீடு - ( GROUP IV RESULT ANNOUNCED )

 TNPSC GROUP IV RESULT 

கடந்த டிசம்பர் 2014ல்  (21.12.2014)  நடைபெற்ற GROUP IV தேர்வுகளுக்கான முடிவுகளை  தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.


GROUP IV தேர்வுகளுக்கான முடிவுகளை பார்க்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

Wednesday, May 20, 2015

14 சதவீதம் ஆகிறது: சேவை வரி உயர்வு, ஜூன் 1–ந் தேதி அமல் மத்திய அரசு அறிவிப்பு


 

தற்போது, கல்வி வரியையும் சேர்த்து, சேவை வரி 12.36 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

இந்த 14 சதவீத சேவை வரி, ஜூன் 1–ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்மூலம், உணவகங்களில் சாப்பிடுதல், காப்பீடு, டெலிபோன் பில், விளம்பரம் செய்தல், விமான பயணம், சிலவகை கட்டுமானங்கள், கிரெடிட் கார்டு, நிகழ்ச்சி ஏற்பாடு, சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டு, கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் மே முதல் வாரத்தில் வெளியாகிவிடும். அதைத்தொடர்ந்து, மே மாதம் இறுதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் புதிய பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துவிடுவர். ஆனால், இந்த ஆண்டு என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இன்னும் அரசாணையே வெளியிடவில்லை

இடமாறுதலைப் பொருத்தவரையில், முதலில் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடும். அந்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு இட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் முறைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவர். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும். 

 பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஏதும் இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

நாளை 10ம் வகுப்பு Result ; சிறப்பு துணைத் தேர்வு பதிவு ,மறுகூட்டல் மே 22 முதல் 27; மதிப்பெண் சான்றிதழ் மே 29

SSLC RESULT


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை   இணையதளத்தில் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 29ம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, ஜூன் 4ம் தேதி முதல் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்

விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டல் 

விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். 

1
மொழிப்பாடங்கள் ( Tamil, English)
ரூ.305 (ஒரு பாடத்திற்கு)
2
கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
ரூ.205  (ஒரு பாடத்திற்கு)

விண்ணப்பிக்கும் பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை அறியலாம்


சிறப்பு உடனடித் துணைத் தேர்வு


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர் களுக்கான சிறப்பு உடனடித் துணைத் தேர்வுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.