Friday, April 21, 2017

2017-2018 அனைத்து வகை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை

2017-2018 அனைத்து வகை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு 
கால அட்டவணை

இடமாறுதல் கோரி ஏப்ரல் 24 முதல் மே 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 

 DEPARTMENT OF SCHOOL EDUCATION
 
1
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடமாறுதல்
(Within Dist /  Dist to Dist)
19.05.2017
2
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு
20.05.2017
3
அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
22.05.2017
4
அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு
23.05.2017
5
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை/ தொழிற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் (Within Dist)
24.05.2017
6
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை / தொழிற்கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் (Dist to Dist)
25.05.2017
7
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு
27.05.2017
8
உடற்கல்வி, தையல், இசை, கலை ஆசிரியர்கள் இடமாறுதல்
(Within Dist / Dist to Dist)
28.05.2017
9
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் (Within Dist)
29.05.2017
10
பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல்
(Dist to Dist)
30.05.2017
11
இடைநிலை / உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு
31.05.2017



DEPARTMENT OF ELEMENTARY EDUCATION

1
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பொதுமாறுதல்
19.05.2017 FN
2
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் à உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பதவி உயர்வு
19.05.2017 AN
3
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல், பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் / பொது மாறுதல்(Within Block) மற்றும் பதவி உயர்வு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (Within Dist)
22.05.2017
4
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு / பொது மாறுதல்
23.05.2017
5
இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல்
24.05.2017
6
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல்
(Within Block  & Within Dist)
25.05.2017
7
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (Dist to Dist)
26.05.2017
8
இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல்
(Dist to Dist)
29.05.2017,
30.05.2017
 


Thursday, March 16, 2017

வாகன பதிவுக்கு 'ஆதார்' அவசியம். 01.04.2017 முதல் தமிழகத்தில் அமல்

தமிழகத்தில் 01.04.2017 முதல் வாகனங்கள் பதிவு செய்ய 'ஆதார்' எண் அவசியம்' என, அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, 'வாகன் 4' என்னும் புதிய மென்பொருளை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் வழங்கி உள்ளது. அந்த மென்பொருள், 01.04.2017 முதல் செயல்பட துவங்கி உள்ளது.அந்த மென்பொருளில், 'அலைபேசி போன், ஆதார், பான்' எண் உள்ளிட்ட விண்ணப்பதாரரின் முழுமையான விபரங்கள் இடம்பெறும் வகையில், விண்ணப்ப படிவம் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள வாகன விற்பனையாளர் களுக்கும் போக்குவரத்து துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'வரும் ஏப்., 1 முதல், வாகனம் வாங்கும் அனைவரிடமும், ஆதார், பான், அலைபேசி எண்ணை கட்டாயம் பெற்று, பதிவு செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, வாகன விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக பட்ஜெட் : 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

தமிழக சட்டசபையில் 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் இன்று தாக்கல் செய்கிறார். இதற்காக சட்டசபையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். 


23ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த இலவச செல்போன் உள்ளிட்ட சில புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

டெல்லியில் நேற்று  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு  2% அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். 

இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2017 முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 


இதற்கு முன் 01.07.2016ல்  அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 8, 2017

1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு (1111 BT Teachers Will have Appointed through TRB. List on 10.03.2017 in TRB Website)

2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு TET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து, பள்ளிக்கல்வித் துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்விதி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு, தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் 1111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அற்கான பட்டியல் 10 மார்ச் 2017ம் தேதி www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்படும். 
 
TET  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், B.Ed படித்த வருடத்திலேயே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், ஏற்கெனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு வராதவர்கள் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது பணித் தெரிவுக்குரிய தகுதியினைப் பெறாமல் தற்போது தகுதியைப் பெற்றிருப்பவர்கள் ஆகியோர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்து உள்ளனர். 
 
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 10.03.2017ம் ஆண்டு வெளியிடப்படும். அந்தப் பட்டியல் ஆன்லைனில் 20.03.2017 வரை இருக்கும். தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அதில் உரிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்  என ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.

Sunday, March 5, 2017

Destruction of Thamirabharani River

The 5 Most Mysterious Temples

+2 விடைத்தாள் திருத்தம், ஏப்ரல் 1 முதல் துவங்கும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 31ல் முடிவடைகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக தேர்வுகள் நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெற்றதால் ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனை தடுக்க, இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கப்பட்ட உள்ளது. ஏப்ரல் 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, March 3, 2017

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2017

TEACHERS RECRUITMENT BOARD
COLLEGE ROAD,CHENNAI-6

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST 
(TNTET) - 2017

The applications for Tamil Nadu Teachers Eligibility Test will be available for sale from 06.03.2017 to 22.03.2017. 

Candidates can submit the filled in applications from 06.03.2017 to 23.03.2017.




 
TET SYLLABUS - PAPER 1




TET SYLLABUS - PAPER 2




PROSPECTUS




Application Sales & Receiving Center's












 

Wednesday, March 1, 2017

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் குறைதீர்க்கும் மையம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு ( Grievance Redressal for SSLC and +2 Exam Students)


10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரையும்,  12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையும்  நடைபெற உள்ளது.

மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக அரசு தேர்வாணையம் நான்கு எண்களை அறிவித்துள்ளது.  
 
இந்த எண்களில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
 
அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கியிருக்கும் தொலைபேசி எண்கள் 
 
8012594114, 8012594115, 8012594122, 8012594124

DEPARTMENTAL EXAMINATIONS – MAY- 2017 - Registration Upto 31.03.2017

தமிழக அரசின் துறைத்தேர்வுகள் 24.05.2017 முதல்  31.05.2017 வரை நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க 31.03.2017 கடைசி நாளாகும்.
 
டிசம்பர் 2016ல்  நடைபெற்ற துறைத்தேர்வுகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
To Apply Online, Click the link Below


or 

10ம் வகுப்பு, மார்ச் 2017 - பொதுத்தேர்வு எழுதவுள்ள மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள்(Urdu, Telugu, Kannada, Malayalam-Language Minority Students) தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை

'மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு , இந்த ஆண்டும்(மார்ச் 2017), தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த ஆண்டு 

தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என, 2006ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி, 2016ல், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத வேண்டும். அப்போது, மொழி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ் மொழி கற்பிக்க, தமிழ் ஆசிரியர்களை அரசு நியமிக்கவில்லை; எனவே, இந்த ஆண்டு தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என, கோரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத, மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. 

தற்போது 

தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், தமிழ் மொழி பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கவும், அதற்கு பதில், தங்கள் தாய் மொழி பாடத்தில் எழுத அனுமதிக்கவும் கோரப்பட்டது.

மனுக்களை, தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ’முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர் தாட்சாயிணி ரெட்டி ஆஜராகினர்.

வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், ’உயர் நீதிமன்றம், 2016 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவு, இந்த ஆண்டுக்கும் தொடரும்’ என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை, இரண்டு நாட்களில் முடிக்கும் படியும், கல்வித்துறைக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

 

Thursday, February 23, 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐவர் குழு- 30.06.2017க்குள் அறிக்கை அளிக்க உத்தரவு: தமிழக முதல்வர்

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி,  தமிழக அரசு ஊழியர்களின்  ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க  5 பேர் கொண்ட  அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்த அலுவலர் குழு தமது அறிக்கையை 30.06.2017க்குள்  அரசுக்கு அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், உறுப்பினர் செயலாளர் உமாநாத் ஆகியோர் இடம்பெறுவர்

இந்த 'அலுவலர் குழு' மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிப்பு : 3 கோள்களில் உயிர்கள் இருக்க வாய்ப்பு : நாசா

பூமியை போன்று 7 புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதாகவும் நாசா கூறியுள்ளது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, கோள்கள் குறித்து அறியும் வகையில் நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்செர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா விஞ்ஞானிகள் நேற்று நேரலையில் அறிவித்தனர்.  

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போன்றே மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அந்த 3 கோள்களில் நீர் ஆதாரம், பாறைகள் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள்கள் உள்ளன. அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப் படுகிறது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.