Monday, June 8, 2015

EMIS சுணக்கம் - பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ  மாணவியரின் விவரங்களை  பதிவு செய்ய, EMIS ( Educational Management Information System) என்ற மின்னணு மேலாண்மை மற்றும் தகவல் திட்டம் 2012ம்  ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது.

இந்த திட்டத்தில் மாணவர் பெயர், வகுப்பு, பெற்றோர் பெயர், தொழில், இனம், முகவரி, அங்க அடையாளம் மற்றும் ரத்தப்பிரிவு போன்ற பல்வேறு விவரங்களை வலைத்தளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி  மாணவர் விவரங்களை  கணினியில் முழுமையாக பதிவேற்ற இயலாமல் மூன்று ஆண்டுகளாக இழுபறி நிலையில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல் நடைமுறைப் படுத்த நினைத்த Smart BusPass வழங்கும் திட்டம் கேள்விக்குறியானது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்த போது, 'கணினி சரியில்லை, பழுது, சர்வர் மக்கர்' என, பள்ளிகளில் பல காரணங்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு தெரியாததால், இந்தப் பணிகள் கிடப்புக்குப் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும், ஜூன் 10ம் தேதிக்குள் திட்டமிட்டு இதற்கு உரிய அறிக்கை தருமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு மாவட்ட வாரியாக கட் ஆப்.

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.


அரசு தேர்வுத்துறை நடத்திய இந்தத் தேர்வை 7 லட்சத்து 32 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டுக்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
முதல்கட்டமாக எழுத்துத் தேர்வு அடிப்படையில் ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சாரத்தில் நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் மாவட்ட அளவில் தான் நிரப்பப்படும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு பணியை மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அனுமதிக் கப்படுவார்கள். எனவே, கட் ஆப் மதிப்பெண் மாவட்ட அளவில் தான் நிர்ணயிக்கப்படும். இதனால், கட் ஆப் மதிப் பெண் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள காலியிடங்களின் எண் ணிக்கை, அந்த மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களின் மதிப்பெண் நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கட் ஆப் மதிப்பெண் அமைந்திருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட் ஆப் மதிப்பெண் மாவட்ட அளவில் நிர்ணயிக்கப்படுவதால் ஒரு மாவட்டத்தில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்த ஒரு விண்ணப்பதாரர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பார். வேறு மாவட்டத்தில் இதே மதிப்பெண் பெற்ற தேர்வருக்கு நேர்காணல் வாய்ப்பு வராமல் போகலாம் என்பது குறிப் பிடத்தக்கது.  மேலும்  "ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு கீ ஆன்சர் எதுவும் வெளியிடப்படாது” எனவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்யும் பள்ளிக் கல்வித் துறையின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 5, 2015

World Environment Day 2015

Seven Billion Dreams
One Planet.
Consume with Care.













அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் துவங்க திட்டம்




மாணவர் எண்ணிக்கை குறைந்த அரசு தொடக்கப் பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளைத் துவங்க, தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. அதேநேரம், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பெற்றோரிடம் பிரசாரம் செய்யுமாறு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், ஒரு பள்ளிக்கு குறைந்தது, 30 மாணவர்களாவது இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத, ஓர் ஆசிரியர் மட்டுமே இருக்கும் தொடக்கப் பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இப்பணியில் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும், 250 பள்ளிகள், ஒற்றை இலக்க மாணவர்களுடன் இயங்குவது தெரியவந்துள்ளது; இப்பள்ளிகள் மூடப்பட்டு அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட உள்ளன.


இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்கள், ”தொடக்கப் பள்ளிகளை மூடும் பேச்சுக்கே இடமில்லை. எப்படியாவது, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் வரை, மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தவும், மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் தொடர்ந்து முயற்சி எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது,” என்றார். 


சென்னை மாநகராட்சியில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகள், சிறுபான்மை மொழி உருது மற்றும் தெலுங்குப் பள்ளிகளில் 100 இடங்களில், எல்.கே.ஜி., யு.கே.ஜி ஆங்கில வகுப்புகள் துவங்கி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.


இதை பின்பற்றி, மற்ற மாநகராட்சிப் பள்ளிகளிலும், ஆங்கில மழலையர் வகுப்புகள் துவங்க, தொடக்கக் கல்வி இயக்கம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

Monday, June 1, 2015

நல்ல ரூபாய் நோட்டுகளை கண்டறிவது எப்படி? ( How to Identify the Original Currency? )


நாம் தினந்தோறும் பலவகைகளில் பயன்படுத்தும், கைக்கு கை மாறும் ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுக்கள் தானா என கண்டறிவது எப்படி?

ஐந்தோ, பத்தோ.. கள்ள   நோட்டு என கண்டறியப் பட்டால் கிழித்து கூட போட்டு விடலாம்.   ஆனால்  500, 1000 என பெரிய தொகையிலான நோட்டுகள் கள்ள   நோட்டு என கண்டறியப் பட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தப் படுவீர்கள்?


ஏதேனும் ஒரு கடையிலிருந்தோ, பஸ் பயணத்திலோ, சினிமா தியேட்டரிலோ  அல்லது தெரிந்தவர்களிடமிருந்தே கூட நீங்கள் பெரும் ரூபாய் நோட்டுக்களை  நீங்கள் வங்கியிலோ அல்லது வேறு எங்கேனும் செலுத்தும் போது "இது கள்ள நோட்டுங்க" என்று  நம்மை பார்க்கும் பார்வை என்னவோ நாமே கள்ள நோட்டுக்களை அச்சடித்து கொண்டுவந்தது போல இருப்பது  ஒரு பக்கம் என்றால், அதற்காக நாம் ஏமாளியான வருத்தம் மறுபக்கம். 


அப்போ இப்படி எல்லாம் நடக்காம கொஞ்சம் உஷாரா இருக்கனும்னா நீங்க என்னங்க பண்ணனும்?

எந்தெந்த ரூபாய் நோட்டுகள்ல என்னென்ன பாதுகாப்பு விஷயங்கள் இருக்குன்னு முதல்ல நீங்க தெரிஞ்சிக்கனும்.  அப்போ இதை படிங்க முதல்ல.


Security Features of 1000 Rs. Currency Note

gfgfgfg 



 1. Watermark

 
1996ம் ஆண்டு முதல் மகாத்மா காந்தி படம் போடப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகள் வெளிவருகின்றன.   1000 ரூபாய் நோட்டின் இடது பக்கத்திலுள்ள வெள்ளை பகுதியை உற்று நோக்கினால் Watermarkல்  அமைந்த நிழல் போன்ற காந்தி உருவமும், பல கோணங்களில் செல்லும் மெல்லிய கோடுகளும்   தெரியும்.
( The Mahatma Gandhi Series of banknotes contain the Mahatma Gandhi watermark with a light and shade effect and multi-directional lines in the watermark window.)

2. Security Thread

2000ம் வருடத்தில் முதல் முதலாக  1000 ரூபாய்  நோட்டுக்கள் அறிமுகப் படுத்தப்பட்டன.  இதில்  மேலிருந்து கீழ் வரை வெள்ளிக் கம்பி போன்று அமைந்துள்ள Security Thread   பட்டை கொஞ்சம் உட்பொதிந்தும், கொஞ்சம் வெளியே இருக்கும் படியும் அமைந்துள்ளது.

1000 ரூபாய் நோட்டுகளில் காணப்படும் Security Threadல் भारत ( Bharath - In Hindi) என ஹிந்தியிலும், 1000, RBI  ஆகிய எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். Security Thread  கரும்பச்சை நிறத்தில் மின்னும்.

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளில் காணப்படும் Security Threadல் भारत ( Bharath - In Hindi) என ஹிந்தியிலும், RBI  ஆகிய எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். Security Thread  கரும்பச்சை நிறத்தில் மின்னும்.

10,20,50  ரூபாய் நோட்டுகளில் காணப்படும் Security Threadல் RBI என்னும் வார்த்தையும்.   Security Thread   வெள்ளிக் கம்பி நிறத்திலும்  மின்னும்.

( Rs.1000 notes introduced in October 2000 contain a readable, windowed security thread alternately visible on the obverse with the inscriptions ‘Bharat’ (in Hindi), ‘1000’ and ‘RBI’, but totally embedded on the reverse. The Rs.500 and Rs.100 notes have a security thread with similar visible features and inscription ‘Bharat’ (in Hindi), and ‘RBI’. When held against the light, the security thread on Rs.1000, Rs.500 and Rs.100 can be seen as one continuous line. The Rs.5, Rs.10, Rs.20 and Rs.50 notes contain a readable, fully embedded windowed security thread with the inscription ‘Bharat’ (in Hindi), and ‘RBI’. The security thread appears to the left of the Mahatma's portrait. Notes issued prior to the introduction of the Mahatma Gandhi Series have a plain, non-readable fully embedded security thread.)

3.Latent Image
 (A latent image is an invisible image produced by the exposure to light)

Baahubali ( బాహుబలి ) - The Beginning | Official Trailer | Prabhas, Rana Daggubati, SS...


Presenting the much awaited trailer of Baahubali 
 The Beginning.

Deployment First, General Transfer Next - பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு



ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்

பொதுமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் பாடவாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டு  பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தற்போதுள்ள காலிப் பணியிடங்களில் பணி நிரவல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.

பள்ளிகளில் உபரிப்பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டங்களில் வேறு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களிலோவெளிமாவட்டங்களிலோ நியமிக்கப்பட உள்ளனர். அதன்பின்னர் எஞ்சிய காலிப்பணியிடங்களை கணக்கிட்டு அதன்படி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்என பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

Sunday, May 31, 2015

Maggi நூடுல்ஸ் - தீங்கு விளைவிக்கும் பொருட்களால் நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு

 
மேகி நூடுல்ஸின் பாதுகாப்பு தரத்தை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனங்கள், மற்றும் அதன் மேலாளர்கள் 3 பேர் மீது, பாரபங்கி  நீதிமன்றத்தில்  உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’ ஐ  நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். 

இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் பெரும் சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள Easyday கடையில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்து ஆய்வு  செய்தது.

அப்போது அதில் மோனோ சோடியம் குளூட்டாமேட் (Mono sodium Glutamate- MSG)
என்ற அமினோ அமிலம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், 17 மடங்கு அதிகமாக இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல்நலத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது.  இதைத்தொடர்ந்து  மாநில சந்தைகளில் இருந்து  நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிடப்பட்டது. மேலும்,  பாரபங்கி கூடுதல்  தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நெஸ்லே நிறுவனம் மீது நேற்று வழக்கு  தொடரப்பட்டது.

இது குறித்து பாரபங்கி உணவு பாதுகாப்பு அதிகாரி வி.கே.பாண்டே கூறுகையில், ‘ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவன ஆணையர்  பி.பி.சிங்,  நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார். அதன் அடிப்படையில்  ஹரோலியில் உள்ள நகல் கலன் தொழில்நுட்ப  பூங்காவில் உள்ள நெஸ்லே நிறுவனம், டெல்லியில் உள்ள நெஸ்லே நிறுவனம், பாரபங்கியில் உள்ள Easyday  நிறுவனம், டெல்லியில் உள்ள Easyday,  நிறுவன மேலாளர்கள் மோகன்குப்தா, சபாப்ஆலம், பாண்டே ஆகியோர் மீது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது ’ என்றார்.

பாரபங்கியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக திசை திருப்பிய நடிகர் அமிதாப், நடிகைகள்  மாதுரிதீட்சித், ப்ரீதி ஜிந்தாஆகியோர் மீது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனியாக நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்கள்  மீது குற்றவியல் சட்டம் 420, 272, 273, மற்றும் 109 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Saturday, May 30, 2015

கள்ளநோட்டு என அறியாமல் வைத்திருந்தால் குற்றமில்லை



'கள்ளநோட்டு என அறியாமல் கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது குற்றமல்ல' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒருவர், வங்கியில் செலுத்திய கரன்சி நோட்டுகள், சிலவற்றில் கள்ள நோட்டுகள் இருந்தன. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் மே 28 அன்று விசாரணைக்கு வந்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  " கள்ளநோட்டு வைத்திருந்த நபருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சரியல்ல. தன் கையில் இருக்கும் நோட்டுகளில், சில கள்ளநோட்டுகளும் உள்ளன என்பதை அவர் அறியாத நிலையில், அவரை குற்றவாளியாக கருத முடியாது. வங்கியில் அவர் செலுத்திய நோட்டுகள் கள்ள நோட்டுகள் என வங்கியில் தெரிவித்த பிறகும் அவர் தப்பி ஓடவில்லை என்பதால், அந்த கள்ளநோட்டை அவர் வேண்டுமென்றே வைத்திருக்கவில்லை என்பது புலனாகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறேன்" என  உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நிலையில், கள்ளநோட்டு என தெரியாமல், பிறர் கொடுக்கும் நோட்டுகளை வைத்திருந்ததால் பலர் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

San Andreas - Official Trailer 3 [HD]

Friday, May 29, 2015

Bajrangi Bhaijaan - Official Teaser ft. Salman Khan, Kareena Kapoor Khan...

‘திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ - பள்ளிக்கல்வி இயக்குனர்

குட்டிப் பசங்க கவலை 



“பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,” என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.


கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. தினந்தோறும்  தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து ஏதேனும் அறிவிப்பு வருகிறதா என ஆராய்ச்சியே செய்து வருகின்றனர்.


இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் கூறியதாவது: 

"பள்ளி திறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும். பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.

XII SCAN COPY DOWNLOAD & RETOTAL/ REVALUATION APPLICATION

XII SCAN COPY DOWNLOAD & RETOTAL/ REVALUATION APPLICATION

Click Here to Download the Scaned Copy of XII Public Examination Answer Script Papers (Tamil, English, C.S, Maths, Physics, Chemistry, etc.....

Thursday, May 28, 2015

3 Monkeys - Award Winning Comedy Tamil Short film

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு....???


"குழப்பத்தில்" ஆசிரியர்கள்  

இன்னும் நான்கு நாட்களில்  பள்ளிகள்  திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.  இவ்வாறு நடக்கும்  கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

வழக்கம் போல இந்த ஆண்டும்  காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாறுதல் பெற  ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு  இருந்தனர். ஆனால்   ஜூன் 1ம் தேதி பள்ளிகள்  திறக்க உள்ள நிலையிலும், கலந்தாய்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அறிவிக்காதது, ஆசிரியர் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டில் தாமதமாக, ஜூன், ஜூலை மாதங்களில், கலந்தாய்வு நடந்தது. இதனால், பள்ளி வேலை நாளில், ஆசிரியர்கள் பலர் விடுமுறை எடுத்து, கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்னும் நான்கு நாளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 
இதுவரை, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கோடை விடுமுறையில் கலந்தாய்வு நடத்தியிருந்தால், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 1ம் தேதியே, சம்பந்தப்பட்ட புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர்வர். குடும்பத்தை, மாற்றுவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.

பள்ளி துவங்கிய பின் கலந்தாய்வு நடத்தினால், ஒரு பள்ளியில், ஒரு மாதம் பாடம் நடத்திய பின், அந்த ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாறிச் செல்வர். அதே பாடத்துக்கு, வேறு ஒரு ஆசிரியர் வருவதால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிப்பு பாதிக்கும்.

பள்ளி திறந்த பின், வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு, வேறு பள்ளியில், ’சீட்’ பெற முடியாத நிலையும் ஏற்படும். மொத்தத்தில், பள்ளி திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால், ஆசிரியர்கள், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் மிகுந்த குழப்ப மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.

 

CBSE X EXAM RESULT TO BE PUBLISHED AROUND 12.01 PM ON cbseresults.nic.in/

 
 

CBSE  10ம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் சுமார் 12.00 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

WEBSITE FOR X RESULT

Wednesday, May 27, 2015

10ம் வகுப்பு (SSLC) தற்காலிக மதிப்பெண் பட்டியல் (PROVISIONAL MARKSHEET) - பள்ளிகள் இன்று பதிவிறக்கம் செய்யலாம்


நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 21.05.2015  அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள்  (PROVISIONAL MARKSHEET) இன்று (27.05.2015) பள்ளிகளில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

WEBSITE FOR SCHOOL'S:



12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோட் செய்ய வழங்கப்பட்ட அதே User ID, Password ஐ பயன்படுத்தி மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

மே 29ம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு TC, Mark sheet வழங்கப் படும்.

Tuesday, May 26, 2015

கர்ப்பிணிகளில் பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகள் ஏற்படுத்தும் தாக்கம்


 

(Paracetamol-acetaminophen)

கருவுற்ற காலத்தில் பெண்கள்  அதிக அளவிலான பாராசிட்டமால் (Paracetamol-acetaminophen) மாத்திரைகளை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சுரம்(Fever), தலைவலி( headache), உடல்வலி(muscle aches), முதுகு வலி(backache), பல்வலி(toothaches), சளி(colds)   என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மருந்தானது எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகள்  இதனை தெரிவித்துள்ளனர்.

எலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பாராசிட்டமால் மருந்தை  7 நாட்கள் தொடர்ந்து   கொடுக்கப்பட்ட எலிகளின் கருவில் Testosterone அளவு மிகவும் குறைவாக இருந்தது கண்டறியப் பட்டது.

ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த Testosterone ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.  எனவே கர்ப்பிணிகள் பாராசிட்டமால் வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மட்டும் குறைந்த காலத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் எப்போது?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் 2 நாட்களில் முடிய உள்ளது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 296 இடங்கள் உள்ளன. இதுதவிர, 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து, 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும்.

இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்பு கலந்தாய்வைத் தொடர்ந்து, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும், கலந்தாய்வு துவக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்தாலும், அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாததால், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை முடிக்க வேண்டிய கடைசி மாதத்தில், கலந்தாய்வு நடத்தும் நிலை தொடர்கிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 28ம் தேதியுடன் முடிகிறது.

முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 19ல் நடக்க உள்ளது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இதுவரை விண்ணப்பம் வழங்கவில்லை.

இந்திய மருத்துவப் படிப்புகளில் சேர, கட் - ஆப் மதிப்பெண் இருந்தும், இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என, அரை ஆண்டு காலம் காத்திருப்பது நரக வேதனை. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், இந்த சிக்கல் தீரும் என மாணவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: கல்லூரிகளில், ஆயுஷ் கவுன்சில் ஆய்வு முடிந்துள்ளது. முறையான அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆண்டு, ஜூலை 14ல் விண்ணப்பம் தரப்பட்டு, அக்., மாதம்தான் கலந்தாய்வு நடந்தது.

இந்த ஆண்டு, ஜூன், இரண்டாம் வாரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் கலந்தாய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவை, ஆயுஷ் கவுன்சில் அனுமதியைப் பொறுத்தே அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.