Tuesday, March 8, 2016

International Women's Day - March 08 - மகளிர் தினம்

Happy  International Women's Day 
 மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


One Day i will.



The willingness to listen
The Patience to understand
The Strength to support
The Heart to Care 


You can Feel her Innocence in the form of a daughter
You can feel her Care in the form of a sister
You can feel Her Warmth in the form of a friend
You Can feel her Passion in the form of a beloved
You can Feel her Dedication in the form of a wife
You can feel her Divinity in the form of a mother
You can feel her Blessing in the form of a Grandmother
Yet She is so Tough too


Her Heart is so Tender
So Naughty
So Charming
So Sharing 
So Melodious
She is a Women
And
She is a Life

Every man needs a women when his life is a Mess
Because just like the game of Chess
the Queen protects the King

Happy International Women's Day

தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு:




நாள்
கிழமை
தேர்வு பாடம்
22.04.2016
வெள்ளி
தமிழ்
25.04.2016
திங்கள்
ஆங்கிலம்
26.04.2016
செவ்வாய்
கணிதம்
27.04.2016
புதன்
அறிவியல்
28.04.2016
வியாழன்
சமூக அறிவியல்
29.04.2016
வெள்ளி
உடற்கல்வி

Monday, March 7, 2016

TNPSC DEPARTMENTAL EXAM TIME TABLE - MAY 2016


மஹா சிவராத்திரி - 2016


மஹா சிவராத்திரி 

 ஸ்ரீ லிங்காஷ்டகம்


 ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்i
ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்ii

தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
காமதஹம்கருணாகர லிங்கம்i
ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
 ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தனகாரண லிங்கம்i
ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்i
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்i
ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
 

தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவச லிங்கம்i
தினகரகோடிப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்i
அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்i
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்



திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே! 

திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!





வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் - See more at: http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_27.html#sthash.JTu1FGSG.dpuf
திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!





வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் - See more at: http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_27.html#sthash.JTu1FGSG.dpuf

Wednesday, March 2, 2016

குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்களுக்காக googleன் புதிய kiddle.

குழந்தைகளின் பயன்பாட்டுக்காக கூகுள் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கும் தேடு(Search Engine) எந்திரம்தான்  Kiddle.

www.kiddle.co என டைப் செய்ததும், வேற்றுக்கிரகப் பின்னணியில் ஒரு பெரிய சிவப்பு நிற ரோபோ பளிச்சென்று திரையில் தோன்றும். 

Google Search பெட்டியில் தேடும் வார்த்தையை தட்டச்சு செய்தால், ஏராளமான தகவல்கள் கொட்டும். 
குழந்தைகளுக்கு என்றே இது உருவாக்கப்பட்டிருப்பதால் பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன. வயது வந்தவர்களுக்கான வார்த்தைகள், வலைத்தளங்களை Kiddle அனுமதிப்பதில்லை.

புகார் அளிக்க,   Kids safe search, Site blocking,  Keyword blocking   ஆகிய Link கொடுக்கப் பட்டிருக்கின்றன.  குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்களுக்கு உகந்த, சிறப்பான, பாதுகாப்பான தேடுபொறி   Kiddle.

Monday, February 29, 2016

மத்திய பட்ஜெட் 2016


  •  நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றடை கோடி குடும்பத்திற்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

  • வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை. 

  • வருமான வரிக்கழிவு ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக அதிகரிப்பு. 

  • புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு.

  • 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.

  •  60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.

  • வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது. 

  • வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும்.

  • பொதுத் துறை - தனியார் துறை பங்களிப்பில் தேசிய டயாலஸிஸ் சேவை திட்டம் தொடங்கப்படும். 

  • ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.

  • 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும். 

  • பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

  • 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.

  • முதல்முறையாக, ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை

  • ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது.

  • பணக்காரர்களுக்கான கூடுதல் வரி 12லிருந்து 15 சதவிகிதமாக உயர்வு.

  • பெட்ரோல் கார்கள் மீது கட்டமைப்பு வரியாக ஒரு சதவிகித வரி விதிக்கப்படும்

Saturday, February 27, 2016

ANNA UNIVERSITY - U.G Full Time I Sem ( CBCS ) Regular Results Published





Click Here to Download the Anna university UG Full time I semester(CBCS) Result


or

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
  தேதி        பாடம் 

18-04-2016      தமிழ்
20-04-2016     ஆங்கிலம்
21-04-2016      கணிதம்
22-04-2016     அறிவியல்
23-04-2016     சமூக அறிவியல்

பிப்ரவரி 29 : மத்திய பட்ஜெட்: சிலிண்டர்கள் 12லிருந்து 10ஆக குறைய வாய்ப்பு: வருமானவரி விலக்கு உச்சவரம்பு 3 லட்சமாக உயர வாய்ப்பில்லை

 

பிப்ரவரி 29 திங்கள் அன்று மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மானியத்தில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை, 12லிருந்து இனி, ஆண்டுக்கு 10ஆக குறைக்கவும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 2.50 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த வேண்டாம் எனவும்  மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


எனவே, இதுவே மத்திய பொது பட்ஜெட் அறிக்கையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.


Friday, February 26, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை; தேர்வுத்துறை சுற்றறிக்கை

பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அதன் விவரம்:
  • பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
  • முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், ஹால் டிக்கெட்டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்
  • பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்
  • இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்
  • மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும்
  • நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும்
  • ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம்
  • முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும்
  • ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர்
  • இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும். 1:15 மணிக்கு தேர்வு முடியும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 24, 2016

ஓய்வு பெற்ற, மரணமுற்ற CPS சந்தாதாரர்கள் Final Settlement பெறுவதற்கான அரசாணை வெளியீடு

01.04.2003க்கு பின்னர் அரசுப் பணியில் சேர்ந்த தமிழக அரசுப்பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளனர். 

இத்திட்டத்தில் சேர்ந்துள்ள அரசுப்பணியாளர்களிடம் மாதந்தோறும், மொத்த ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, அரசின் பங்களிப்பாக 10% சேர்க்கப்படும். ஓய்வு பெறும்போது முதிர்வுத் தொகை, தவணைகளாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்திய சந்ததாரர்களில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை ஓய்வு பெற்றுள்ளனர். பலர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை எவருக்கும் எந்த தொகையும் திருப்பி தரப்படவில்லை.

தற்போது முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, CPS Final Settlement பெறுவதற்க்கான, கணக்குத் தலைப்புகளும்(DPC - Head of Accounts), Final  Settlement பெறுவதற்கான படிவம்(ANNEXURE I), அங்கீகாரம் அளிப்பதற்கான படிவம் (ANNEXURE II) ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

அரசாணையை பெற 

அரசுப் பணியில் இறந்தால் வழங்கப்படும் FBF தொகை 3,00,000/- ஆக உயர்வு. பிப்ரவரி முதல் மாதம் 60 ரூபாய் பிடித்தம் - அரசாணை வெளியீடு

அரசுப் பணியாளர்களுக்கு  தற்போது மாதம் தோறும் ரூபாய் 30/- FBF தொகையாக பிடித்தம் செய்யப் படுகிறது. ஓய்வு பெறும்போது முதிர்வுத் தொகை வழங்கப்படும். பணியிலிருக்கும் போதே பணியாளர் மரணமுற்றால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூபாய் 1,50,000/- வழங்கப்படும்.

தற்போது முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இனி மாதம் தோறும் ரூபாய் 60/- பிடித்தம் செய்யப்படும் . அரசுப் பணியாளர் பணியிலிருக்கும் போது மரணமடைய நேர்ந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூபாய் 3,00,000/- வழங்கப்படும். இது 01.02.2016 முதல் அமலாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


அரசாணையை டவுன்லோட் செய்ய,



Saturday, February 20, 2016

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 110 விதியின் கீழ் அறிவிப்புகள்

சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில அறிவிப்புக்களை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :

அரசு ஊழியர்களின் நலனில் தமிழக அரசு தனி அக்கறை கொண்டுள்ளது. அரசு ஊழியர்களுக்காக சில சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி,

  • குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் பயன்பெறும் தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். 

  • குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கும் தொகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். 

  • குடும்ப நல உதவி திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடம் இருந்து ரூ.60 பிடித்தம் செய்யப்படும். 

  • சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப்பயன் ரூ.60,000 ஆக உயர்த்தப்படும். 

  • சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் போது பணப்பயன் ரூ.25,000 வழங்கப்படும். 

  • சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 86, 831 ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

  • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும். வல்லுனர் குழு பரிந்துரையின் பேரில் ஓய்வூதியம் குறித்த தமிழக அரசு முடிவு செய்யும். 

  • கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளவர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள். 

  • அரசு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர். 

  • கவுரவ விரிவுரையாளர் ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். 

  • 605 கிராம சுகாதாரத்துறை செவிலியர்கள் துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறுவர். 

  • அரசு அலுவலர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மீண்டும் நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு விரைவில்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அக விலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி, பிடிஐ செய்தி நிறுவனத் திடம் கூறியதாவது: 

'கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர் வோர் குறியீட்டு எண் 6.73 சதவீத மாக உள்ளது. அதன் அடிப்படை யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம். அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போ துள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும்' என அவர் தெரிவித்தார். 

அமைச்சரவை விரைவில் அக விலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங் கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.

Friday, February 19, 2016

விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

மார்ச் 4 ல் பிளஸ் 2 அரசு தேர்வு, மார்ச் 15 ல் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகின்றன. கடந்த காலங்களில் சில மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் விளையாட்டு தனமாக பேனாவால் கோடிட்டு அடித்து விடுகின்றனர். இதனால் அவர்களின் விடைத்தாளை திருத்துவதிலும், மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிப்பதிலும் அரசு தேர்வுத்துறைக்கு சிரமம் இருந்தது. 

இதையடுத்து இந்த ஆண்டு முதல், விடைத்தாளில் எழுதிய அனைத்து பதில்களையும் அடித்துவிடுவது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அடுத்த 2 பருவங்களுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து முன்கூட்டியே மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து காலை இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டுமெனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Income Tax Challan ITNS 280 for Banks

Click Here to Download

Thursday, February 18, 2016

பிளாஸ்டிக் கழிவுகள் (Plastic Wastage)

Source : The Hindu



ஒவ்வொரு நாளும் நம்மில் பெரும்பாலானோர் சாதாரணமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நாம் பயன்படுத்திய பிறகு என்னவாகிறது என்பதை பற்றிய கவலை நமக்கில்லை. இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கூட  கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் இது.


பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப் போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம்! கடல் நீரில் உள்ள மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதனால் புவியின் ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமே மாற்றத்திற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்படுகிறது.
  • வருடத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

  • கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 7 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள்.

  • தற்போது 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்துள்ளன. இது 25 கோடி டன் ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • இன்னும் சில வருடங்களில் கடலில் இருக்கும் மீன்களின் அளவை விட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரித்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் தான் பிளாஸ்டிக்கை அதிக அளவு கடலில் கலக்கின்றன.

  • பிளாஸ்டிக் கழிவு அதிகம் கலக்கப்படுவதால் கடலில் வாழும் உயிரினங்கள் அதை தின்று விடுகின்றன. இதனால் அந்த உயிரினங்களில் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது

  • தமிழகத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வையும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளையும் டிஜிட்டல் தட்டிகளுக்கு பதிலாக சணலினால் ஆன தட்டிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

  • கடந்த 50 வருடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது 20 முறை அதிகரித்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது.

  • இந்தியாவில் 20 மைக்ரான் எடை மற்றும் 8க்கு 12 அங்குலத்திற்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் தற்போது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

  • இந்தியா முழுவதும் 60 முக்கியமான நகரங்களில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3501 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது.

  • சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் குப்பை உருவாகிறது. இதில் 7 சதவீதம் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகள்.

  • 2013-14ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.1 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

  • பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

  • பிளாஸ்டிக் பைகளை குப்பைகளுடன் சேர்த்து மண்ணில் புதைப்பதால் நீண்ட காலத்துக்கு மண்ணில் மக்கி போகாமல் இருக்கும். இது மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

  • பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் பாலி எத்திலின் என்ற துணை பொருளை கொண்டு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளைக் தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு எரிபொருள் அதிகமாக காகிதப்பையை உருவாக்கப் பயன்படுகிறது. ஆகையால் இருவிதமான பைகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து முடிந்த வரை துணிப்பைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.

  • சர்வதேச அளவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

  • முதன் முதலில் மனிதனால் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை உருவாகியவர் அலெக்ஸாண்டர் பார்க்ஸ்.

Friday, February 12, 2016

XII EMA (Vocational) PRACTICAL QUESTION PAPER FEB 2016

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. 

இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம். 

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Thursday, February 11, 2016

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6வது மாநில மாநாட்டு தீர்மானங்கள்

 

3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' : பணிகள் ஸ்தம்பிப்பு

மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.
 
அப்போது, ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசு செயல்படுத்தாததாலும், ஆட்சிக்காலம் முடிய உள்ளதாலும், தற்போது போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற, ஐவர் அணி பேச்சு நடத்தியது. ஆனால், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.'அரசாணைகள் தர நீங்கள் முயற்சியுங்கள்; நாங்கள் போராட்டத்தை துவக்குகிறோம்' எனக்கூறி, அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று திட்டமிட்டபடி, காலவரையற்ற ஸ்டிரைக் துவங்கியது.

இந்த சங்கத்தில், வருவாய் துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி என, 68 சங்கங்கள் உள்ளன. வணிக வரித்துறையில், ஒரு வாரத்திற்கும் மேலாக, ஸ்டிரைக் நீடிப்பதால், ஏற்கனவே பணிகள் முடங்கி, வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, அரசின் மற்ற துறைகளிலும் பணிகள் முடங்கின. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தபோராட்டத்தில், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களும் பங்கேற்றனர். இதனால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், சத்துணவு வழங்கும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் வெளி ஆட்கள் மூலம், பல இடங்களில் சத்துணவு வழங்கும் பணி நடந்தது. அரசு ஊழியர்கள், மூன்று லட்சம் பேர் வரை பங்கேற்றதால், அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கின.


'அரசாணை கிடைத்தால் ஸ்டிரைக்கை முடிப்போம்' :

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்செல்வி கூறியதாவது: மூத்த அமைச்சர்கள் பேச்சு நடத்திய போது, 'கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்கிறோம்' என்றனர். அமைதியாக, சுமூகமாக பேசினர். ஆனால், உறுதியான முடிவு கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி காலவரையற்ற ஸ்டிரைக் துவக்கி உள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டப்படி, ஓய்வு பெற்ற, இறந்த, 6,000பேருக்கு இதுவரை, பணப்பயன் கிடைக்கவில்லை. கோரிக்கைகளை ஏற்று, அரசாணைகள் ஓரிரு நாளில் கிடைக்கும் என,நம்புகிறோம். அரசாணைகள் கிடைத்தால், ஸ்டிரைக்கை கைவிட தயார்; அரசுப் பணிகளை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில், அரசு அலுவலர் ஒன்றியம், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ' உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கவில்லை. காலவரையற்ற ஸ்டிரைக் நீடித்தால், பணிகள் முடங்கி, அரசுக்கு பெரும் சிக்கலாக அமையும்.

'நசுக்கப்படுகிறோம்':
 
தமிழகத்தில், 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கம் ஸ்டிரைக் நடத்தி வருகிறது. ஆனால், பதிவுத்துறை பணியாளர் சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை. பதிவுத்துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பதிவுத்துறையில், 50 ஆயிரம் பேர் உள்ளனர். பதிவுத்துறை சங்கங்கள் ஆரம்பத்தில், போராட்டங்களில் தீவிரம் காட்டி வந்தது.கோரிக்கை மனு கொடுக்கச் சென்றாலும், போராட்ட, 'நோட்டீஸ்' தரச்சென்றாலும், துறைத் தலைமை யாரையும் சந்திப்பது இல்லை. சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறி வைத்து பழி வாங்கப்படுகின்றனர். எனவே, கோரிக்கை குறித்து குரல் எழுப்பக்கூட முடியாமல் நசுக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tuesday, February 9, 2016

மருத்துவ படிப்பில் சேர தேசிய அளவில் பொது நுழைவு தேர்வு

தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.எம்.சி., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ கல்வியை கட்டுப்படுத்தும் அமைப்பாக செயல்படுகிறது. மருத்துவ கல்லுாரிகளில் சேரதேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஐ.எம்.சி., முன்வைத்துள்ளது.

இத்திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுபற்றி பிற அமைச்சகங்களின் கருத்துகளை பெறுவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விரிவான ஆலோசனைகளுக்கு பின் இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தால்,
  • அனைத்து கல்லுாரிகளிலும் இளநிலை மற்றும்முதுநிலை மருத்துவ பாடப் பிரிவுகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடக்கும்.
  • தனியார் கல்லுாரிகளும், பொது நுழைவுத் தேர்வு வளையத்தில் கொண்டு வரப்படும்.
  • நாடு முழுவதும் மருத்துவக் கல்லுாரிகளில் 32 ஆயிரம் இளநிலை, 13 ஆயிரம் முதுநிலை மருத்துவப் பட்டங்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.
  • தற்போதைய முறைப்படி மருத்துவப் படிப்பில் சேர ஏழுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.புதிய முறைப்படி ஒரே பொது நுழைவுத் தேர்வை எழுதினால் போதும்.

XII COMPUTER SCIENCE PRACTICAL QUESTION PAPER FEB 2016 (Tamil & English Medium)

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா? அரசு ஊழியர் சங்கம் மறுப்பு

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

தேனியில் அவர் கூறியதாவது:20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 67 சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பிப். 10 முதல் ஈடுபடுகின்றன. மாநில முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் தொகுப்பூதியம் பெறுபவர்களும் பங்கேற்பர்.அரசு ஊழியர் வசூலித்த தானே புயல் நிவாரண நிதியை கூட முதல்வர், தலைமை செயலாளரை சந்தித்து வழங்க முடியவில்லை. சங்க பிரதிநிதிகளை சந்திப்பது இல்லை. 
 
அரசின் நிதிவருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுவதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தவறான தகவலை கூறி வருகிறார். அரசின் நிதிவருவாய் 41,215,57 லட்சம் கோடி. இதில் கல்வி மானியத்திற்கு 40 சதவீத நிதி செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகை ரூ.30 ஆயிரம் கோடி. இதில் முதல்வர்,அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். 20 ஆயிரம் கோடியில் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இது அரசின் வருவாயில் 30 சதவீதம், என்றார்.