Showing posts with label Common Entrance Examination for Medical Courses. Show all posts
Showing posts with label Common Entrance Examination for Medical Courses. Show all posts

Tuesday, February 9, 2016

மருத்துவ படிப்பில் சேர தேசிய அளவில் பொது நுழைவு தேர்வு

தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.எம்.சி., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ கல்வியை கட்டுப்படுத்தும் அமைப்பாக செயல்படுகிறது. மருத்துவ கல்லுாரிகளில் சேரதேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை ஐ.எம்.சி., முன்வைத்துள்ளது.

இத்திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதுபற்றி பிற அமைச்சகங்களின் கருத்துகளை பெறுவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விரிவான ஆலோசனைகளுக்கு பின் இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொது நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்தால்,
  • அனைத்து கல்லுாரிகளிலும் இளநிலை மற்றும்முதுநிலை மருத்துவ பாடப் பிரிவுகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடக்கும்.
  • தனியார் கல்லுாரிகளும், பொது நுழைவுத் தேர்வு வளையத்தில் கொண்டு வரப்படும்.
  • நாடு முழுவதும் மருத்துவக் கல்லுாரிகளில் 32 ஆயிரம் இளநிலை, 13 ஆயிரம் முதுநிலை மருத்துவப் பட்டங்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடைபெறும்.
  • தற்போதைய முறைப்படி மருத்துவப் படிப்பில் சேர ஏழுக்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.புதிய முறைப்படி ஒரே பொது நுழைவுத் தேர்வை எழுதினால் போதும்.