நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றடை கோடி குடும்பத்திற்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.
வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
வருமான வரிக்கழிவு ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாக அதிகரிப்பு.
புகையிலைப் பொருட்கள் மீதான உற்பத்தி வரி 10 முதல் 15% வரை அதிகரிப்பு.
35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம்
ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால்
மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.
60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.
வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை
வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக
இருந்தது.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும்.
பொதுத் துறை - தனியார் துறை பங்களிப்பில் தேசிய டயாலஸிஸ் சேவை திட்டம் தொடங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ சேவை
அளிக்கும் வகையில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.
100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.
பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.
முதல்முறையாக, ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிச்சலுகை
ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி உயர்த்தப்படுகிறது.
பணக்காரர்களுக்கான கூடுதல் வரி 12லிருந்து 15 சதவிகிதமாக உயர்வு.
பெட்ரோல் கார்கள் மீது கட்டமைப்பு வரியாக ஒரு சதவிகித வரி விதிக்கப்படும்
No comments:
Post a Comment