Showing posts with label XII EXAM TIME SCHEDULE FOR MARCH 2016. Show all posts
Showing posts with label XII EXAM TIME SCHEDULE FOR MARCH 2016. Show all posts

Friday, February 26, 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை; தேர்வுத்துறை சுற்றறிக்கை

பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அதன் விவரம்:
  • பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
  • முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், ஹால் டிக்கெட்டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்
  • பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்
  • இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்
  • மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும்
  • நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும்
  • ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம்
  • முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும்
  • ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர்
  • இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும். 1:15 மணிக்கு தேர்வு முடியும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.