கனவுகளை நொடிப்பொழுதில் தகர்க்கும்
சாலை விபத்துகளை தவிப்பது எப்படி?
சாலை விபத்துகளை தவிப்பது எப்படி?
(How to Avoid Road Accident)
Re-published
நேரம் நள்ளிரவை நெருங்கிய பிறகும் அன்பிற்குரிய கணவரோ, அப்பாவோ, அண்ணனோ , தம்பியோ வீடு திரும்பாத போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் number you have called is not reachable என்று வந்தால் மனசு எப்படி பதறி துடிக்கும்?
பள்ளிக்கு சென்ற அக்கா, தங்கை, தம்பி வீடு திரும்ப நேரம் ஆனாலும், வெளியூருக்கு சென்ற அப்பா, அம்மாவை தொடர்பு கொள்ள இயலாதபோதும், வேலைக்கு சென்ற மகன் அல்லது மகள் உரிய நேரத்தில் திரும்பி வராத போதும் ஒருவரது மனம் எவ்வளவு பாடுபடும்?
பதற்றமும், பயமுமாய் நாம் அவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றுக் கொண்டே இருப்போம். ஏன்?
Accident என்னும் வார்த்தையின் தாக்கத்தை நாம் தினந்தோறும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள் மூலமாகவும், சில நேரங்களில் நேரில் பார்த்தும் அனுபவித்து இருக்கிறோம்.
- பாதுகாப்பில்லாத சாலை போக்குவரத்தின் கசப்பான உண்மைகள் என்ன?
- விபத்துக்கான காரணிகள் யாவை?
- பாதுகாப்பான பயணத்திற்கு நம் எதை செய்ய வேண்டும் ?
- எதை செய்யக் கூடாது?
பார்ப்போம் வாருங்கள்.
2014ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 17,000 பேர் இறந்துள்ளனர்.
இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள் : 4500 பேர்
கார் , தனியார் பஸ்களால் இறந்தவர்கள் : 3700 பேர்
லாரி மோதி இறந்தவர்கள் : 3000 பேர்
அரசு பஸ் மோதி இறந்தவர்கள் : 1200 பேர்
பிற வாகனங்கள், ரயில், பிற விபத்துகளில் : 4600 பேர்
விபத்துக்கான காரணிகள்
- வாகனம் ஓட்டுபவர்களின் கவனக் குறைவு (அ ) கவனச் சிதறல் 40%
- அசுர வேகம் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் 30%
- செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுதல் 20%
- குறுகலான சாலை
- மழையால் ஓரங்கள் அரிக்கப்பட்டு பள்ளமான சாலைகள்
- ஆபத்தான வளைவுகள்
- வேகத்தடையை கவனிக்காமல் செல்வது
- சாலையோர ஆக்ரமிப்புகள்
- கண்ட இடங்களில் வண்டிகளை Park செய்து Blind Spot களை உருவாக்குதல்
- சாலையின் குறுக்கே மாடுகள், நாய்கள் வருவது
- ஹெல்மெட் அணியாமல் ஒட்டுவது
- சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுதல்
- பராமரிப்பில்லாத வாகனங்களை ஓட்டுதல்
- ஓய்வில்லாத நீண்ட தூரப் பயணம்
- சாலை விதிகளை மதிக்காமல் நடப்பது.
விபத்தை தவிர்க்க செய்யவேண்டியவை (Do's)
- வாகனத்தை எடுக்கும் போது ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா? பிரேக் சரியாக இருக்கிறதா? டயர் சரியாக உள்ளதா? லைட் சரியாக எரிகிறதா என்பதை கவனியுங்கள்.
- சாலை விபத்துக்களில் ஆண்கள் தான் சிக்குகிறார்கள். அல்லது ஆண்களால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. உங்களை ஒருவர் முந்திச் செல்வது உங்களை Tease செய்வது போல் இருக்கிறதா? ஆனாலும் நீங்கள் ஆக்சிலரேட்டரை வேகமாக அழுத்த வேண்டாம். நான் தான் முன் செல்ல வேண்டும் என்ற வேக உணர்வை அப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது உங்கள் முன்னே இருக்கும் சாலையை Scan செய்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு முன்னாலும், பக்கவாட்டிலும், உங்களுக்கு பின்னாலும். Blind Spot எனப்படும் சாலையின் மறைக்கப் பட்ட பகுதிகளில் அதிக கவனத்துடன் இருங்கள் .
- சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் வேகத்தை குறைக்க வேண்டியிருப்பின் உடனடியாக Flashers அல்லது Signal Indicatorகளை ON செய்யுங்கள்.
- மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? அப்படியெனில் வாகனங்களில் இருந்து கசியும் எண்ணெய் படலத்துடன் மழை நீர் கலந்து வழுக்கும் தன்மையுடைய (Slippery Surface from water & Oil contact) பரப்புகளை உருவாக்கி இருக்கும். எனவே வேகத்தை குறையுங்கள். கவனமாக செல்லுங்கள்.
- வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள். முக்கியமாக Hands Free Set களையும் பயன்படுத்த வேண்டாம். அதிக அளவில் விபத்து ஏற்படுவதற்கு வாகனம் ஓட்டும் நேரத்தில் ஏற்படும் கவனச்சிதறலே முக்கிய காரணம்.கவனச் சிதறல் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் செல்போன் உள்ளது..
- வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது (ஹேண்ட்ஸ் ஃப்ரீ போட்டிருந்தாலும்) அல்லது எஸ்.எம்.எஸ். டைப் செய்வது போன்றவை கவனத்தைத் திசைதிருப்புகின்றன.
- கவனச்சிதறல் ஏற்படுத்தி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன்.
- எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் ஐந்து நொடிகளுக்கு, கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளி போதுமானது.
7. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சரியான முறையில் Lane
Change செய்யுங்கள்.
8. வளைவுகளில் திரும்பும் போதும், வண்டியை சாலையிலேயே நிறுத்த
நேரிட்டாலும் Indicatorகளை பயன்படுத்துங்கள்.
9. கண்ட இடங்களில் வண்டியை பார்க் செய்ய வேண்டாம். அதே போல நாம்
எதிர்பாராத இடங்களிலும் வண்டிகள் பார்க் செய்யப் பட்டிருக்கும்
என்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள். சாலையோரம் நிறுத்தப்
பட்டிருக்கும் லாரி அல்லது பிற வாகனங்களின் மீது மோதிய
விபத்துக்களை நாம் பார்த்திருக்கிறோம்.
10. உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஒட்ட வேண்டாம்.
11. கோபம் அல்லது குழப்பத்துடன் வண்டியை ஓட்டுவதை தவிர்க்கவும் .
12. வண்டியை ஓட்டும் போது பின்னால் இருக்கும் நண்பர்களுடன்
பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவதை தவிர்க்கவும்.
13. தூங்காமல் வண்டியை ஓட்டுவது, நீண்ட தூரம் தொடர்ச்சியாக
வண்டியை ஓட்டுவது கூடாது.
14. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரையும், மதிய உணவிற்கு பின்
மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் கவனத்துடன் வண்டியை
ஒட்டவும் .
செய்யக் கூடாதவை (Dont's)
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம்
- புகை பிடித்துக் கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம்
- நழுவும் அல்லது கீழே விழும் பொருட்களை வைத்திருக்கவேண்டாம். (பாதுகாப்பாக வைக்கவும் )
- முன்னே செல்லும் வாகனத்தை ஒட்டியபடியே (Tailgate) செல்ல வேண்டாம். குறைந்தபட்சம் முன்னே செல்லும் வாகனத்தின் பின்புற டயர்கள் தெரியும் அளவுக்காவது செல்லவும்.
- Blind Spot களில் வேகமாக செல்ல வேண்டாம்
- பெரிய Truckகளை முந்திச் செல்ல அவசரப் படவேண்டாம்.
- Signalகளை கவனிக்காமல் செல்ல வேண்டாம்.
- அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு பயணிக்க வேண்டாம்.
- Helmet அணியாமல் செல்லவேண்டாம்.
- உங்களுக்கு அறிமுகம் இல்லாத எந்த சாலையிலும் வேகம் வேண்டாம்.
சாலைவிதிகளை மீறி வாகனம் ஒட்டுபவர்களுக்கான சட்டத்தின் தண்டனைகள்
- டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
- வாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினால், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
- சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டினால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
- ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.
- வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
- மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்காது.
- வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.