Monday, May 25, 2015

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஆட்குறைப்பு: காலிப் பணியிடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு


தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில், ஆசிரியர் எண்ணிக்கையை, பள்ளிக்கல்வித் துறை ஒழுங்குபடுத்தி வருகிறது.இதனால், ஒன்று முதல் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு வரையுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை முதற்கட்ட மாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பல பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில் மொத்தத்தில், 30 முதல் 50 மாணவர்கள் மட்டுமே இருப்பது தெரிய வந்து உள்ளது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை இப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி, மொத்த மாணவர்களுக்கும், 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர்களை நிர்ணயித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக, தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், கூடுதலாக உள்ள ஆசிரியர் இடங்களை, சரண் செய்யும்படி, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் இன்றி, ஆசிரியர்களை அதிகம் வைத்திருப்பதால், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு தேவையின்றி கூடுதல் மானியம் வழங்க வேண்டி உள்ளது; அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அந்த இடங்களை திரும்பப் பெற்று, தேவையுள்ள அல்லது காலியான இடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால், அரசுக்கு செலவு குறையும்' என்றனர்.

Friday, May 22, 2015

நாளை (23.05.2015) முதல்வர் பதவியேற்பு விழா - 28 அமைச்சர்கள் பட்டியல்


அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்  மே 23 (சனிக்கிழமை) அன்று  முதல்வராக பதவியேற்கிறார். 5-வது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்கும் அவருடன் பட்டியலில் உள்ள  28 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.



வ.
எண்
பெயர்
துறை
1
செல்வி ஜெ. ஜெயலலிதா
முதல்வர் | காவல், உள்துறை
2
ஓ.பன்னீர்செல்வம்
நிதி, பொதுப்பணித் து
3
நத்தம் ஆர்.விஸ்வநாதன்
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4
ஆர்.வைத்திலிங்கம்
வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டுவசதி
5
எடப்பாடி கே.பழனிச்சாமி
நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
6
ப.மோகன்
தொழிலாளர் நலன், ஊரகத் தொழில்
7
ப.வளர்மதி
சமூல நலத்துறை, சத்துணவு
8
பி.பழனியப்பன்
உயர் கல்வித்துறை
9
செல்லூர் கே.ராஜூ
கூட்டுறவுத்துறை
10
ஆர்.காம
உணவு, இந்து சமய அறநிலைத்துறை
11
பி.தங்கமணி
தொழிற்துறை
12
வி.செந்தில் பாலாஜி
போக்குவரத்துத்துறை
13
எம்.சி.சம்பத்
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை
14
எஸ்.பி.வேலுமணி
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டத்துறை
15
டி.கே.எம். சின்னை
கால்நடை பராமரிப்புத் துறை
16
எஸ்.கோகுல இந்திரா
 கைத்தறி மற்றும் துணிநூல்
17
எஸ்.சுந்தரராஜ்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
18
எஸ்.பி.சண்முகநாதன்
சுற்றுலாத்துறை
19
என்.சுப்பிரமணியன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
20
கே.எ.ஜெயபால்
மீன்வளத்துறை
21
முக்கூர் என்.சுப்பிரமணியன்
தகவல் தொழில்நுட்பம்
22
ஆர்.பி.உதயகுமார்
வருவாய்த்துறை
23
கே.டி.ராஜேந்திர பாலாஜி
செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கம்
24
பி.வி.ரமணா
பால்வளத்துறை
25
கே.சி.வீரமணி
பள்ளிக் கல்வித்துறை
26
தோப்பு என்.டி.வெங்கடாசலம்
சுற்றுச்சூழல்துறை
27
டி.பி.பூனாச்சி
காதி, கிராமத் தொழில்
28
எஸ்.அப்துல் ரஹிம்
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்
29
சி.விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை

TNPSC GROUP IV தேர்வு முடிவுகள் வெளியீடு - ( GROUP IV RESULT ANNOUNCED )

 TNPSC GROUP IV RESULT 

கடந்த டிசம்பர் 2014ல்  (21.12.2014)  நடைபெற்ற GROUP IV தேர்வுகளுக்கான முடிவுகளை  தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.


GROUP IV தேர்வுகளுக்கான முடிவுகளை பார்க்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

Wednesday, May 20, 2015

14 சதவீதம் ஆகிறது: சேவை வரி உயர்வு, ஜூன் 1–ந் தேதி அமல் மத்திய அரசு அறிவிப்பு


 

தற்போது, கல்வி வரியையும் சேர்த்து, சேவை வரி 12.36 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

இந்த 14 சதவீத சேவை வரி, ஜூன் 1–ந்தேதி அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்மூலம், உணவகங்களில் சாப்பிடுதல், காப்பீடு, டெலிபோன் பில், விளம்பரம் செய்தல், விமான பயணம், சிலவகை கட்டுமானங்கள், கிரெடிட் கார்டு, நிகழ்ச்சி ஏற்பாடு, சுற்றுலா ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டு, கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் மே முதல் வாரத்தில் வெளியாகிவிடும். அதைத்தொடர்ந்து, மே மாதம் இறுதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் புதிய பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துவிடுவர். ஆனால், இந்த ஆண்டு என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இன்னும் அரசாணையே வெளியிடவில்லை

இடமாறுதலைப் பொருத்தவரையில், முதலில் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடும். அந்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு இட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் முறைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவர். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும். 

 பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஏதும் இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

நாளை 10ம் வகுப்பு Result ; சிறப்பு துணைத் தேர்வு பதிவு ,மறுகூட்டல் மே 22 முதல் 27; மதிப்பெண் சான்றிதழ் மே 29

SSLC RESULT


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை   இணையதளத்தில் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 29ம் தேதி முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, ஜூன் 4ம் தேதி முதல் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்

விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டல் 

விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம். 

1
மொழிப்பாடங்கள் ( Tamil, English)
ரூ.305 (ஒரு பாடத்திற்கு)
2
கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
ரூ.205  (ஒரு பாடத்திற்கு)

விண்ணப்பிக்கும் பள்ளியில் கட்டணத்தை பணமாக செலுத்தி, ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். ஒப்புகைச் சீட்டின் விண்ணப்ப எண் அடிப்படையிலேயே, மறு கூட்டல் முடிவுகளை அறியலாம்


சிறப்பு உடனடித் துணைத் தேர்வு


பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் பங்கேற்காதவர் களுக்கான சிறப்பு உடனடித் துணைத் தேர்வுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

Tuesday, May 19, 2015

Dongata Movie | ‪Yaandiro Song Making‬ | Adivi Sesh | Manchu Lakshmi

ஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை கெடு


மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய கடிதம் குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக் இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. டெட் தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில்  நூற்றுக் கணக்கானோர் மட்டுமே உள்ளனர்.ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்துவிட்டு, 2011க்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஆசிரியராகத் தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் டெட் தேர்வை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு படி, டெட் தேர்வுக்கு 10 வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்து ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை, ஒரே ஒரு டெட் தேர்வை நடத்திவிட்டு மவுனமாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது டெட் தேர்வு நடத்த வேண்டும், என்றார்.

 

Monday, May 18, 2015

'Chittiyaan Kalaiyaan' VIDEO SONG | Roy | Meet Bros Anjjan, Kanika Kapoo...

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யும் வசதி

+2 Provisional Mark sheet
Direct Download Facility Introduced

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவர்கள் இன்று முதல் http://www.dge.tn.nic.in/ வலைத்தளத்தில் Reg.No, Date of Birth அளித்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

நிரந்தர மதிப்பெண் சான்றிதழ், மறுமதிப்பீடுக்கு பின் கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Saturday, May 16, 2015

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 18.05.2015 முதல் விண்ணப்பம்

GOVT POLYTECHNIC APPLICATION SALES 
FROM 18.05.2015 
TNDTE Announced

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், மே 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் மே  18ம் தேதி முதல் ஜூன்  5ம் தேதி வரை விற்கப்படும்.

விண்ணப்பத்தின் விலை 150 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., இனத்தவருக்கு, இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பத்தை, www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், அந்தந்த பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, ஜூன்  5ம் தேதிக்குள் வந்தடைய வேண்டும்.

தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி திட்டம்: இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகம்

Anna University
Introducing 
Direct Field Experience  for Engineering Students 

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்றவாறு  பாடத் திட்டங்களை நவீனப்படுத்த, AICTE (All India Council for Technical Education) உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில்  வரும் கல்வி ஆண்டில், தொழிற்சாலைகளுடன் இணைந்த பயிற்சி திட்டங்கள் அறிமுகமா கின்றன.

முக்கிய அம்சங்கள்:


முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூட்டமைப்புகளுடன் அண்ணா பல்கலைக்கழகம்  ஒப்பந்தம் மேற்கொள்ளும்.
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் நேரடி பயிற்சி தரப்படும்.

தொழிற்சாலைகளுடன் இணைந்து மாணவர்களுக்கு புதிய செயல் திட்டம் வழங்கப்பட்டு தொழிற்சாலைகளை மாணவர்கள் நேரடியாக பார்வையிடலாம். படித்து முடித்த பின், அவர் பயிற்சி எடுத்த தொழிற்சாலையிலேயே வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

தொழிற்சாலைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கேற்ப தொழிற்சாலையின் தேவைக்கேற்ப புதிய படிப்பு மற்றும் பாடங்கள் கொண்டு வரப்படும்.

புதிய தொழில்நுட்ப பாடங்கள் உடனே தேவைப்பட்டால் தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழக வல்லுனர் குழு ஆலோசித்து, தேவையான மாற்றங்களை பாடத்திட்டத்தில் உடனே கொண்டு வரும்.

தொழிற்சாலை இன்ஜினியர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலை மாணவர்களை இணைத்து சிறப்பு பயிலரங்கம் நடத்தப்படும்.

மே 15 முதல் இத்திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்பும் தொழிற்சாலைகளுக்கான பதிவுகள் துவங்கியுள்ளன. வரும் ஜூன் 8ம் தேதி வரை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, பின், இரு தரப்பிலும் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான தொழில்நுட்ப அறிவு பலமடங்கு மேம்படவும், வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கவும் வழி பிறக்கும்.

 

Wednesday, May 13, 2015

+2 மாணவர்களுக்கு நாளை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Provisional Mark Sheet விநியோகம் 
பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு  நாளை(14.05.2015) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Sheet) மற்றும் மாற்றுச்சான்றிதழ் (TC)  வழங்கப்படுகிறது.   தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

இம்மாதம் 7ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு, தற்காலிக சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. பள்ளிகளில், நாளை (14ம் தேதி) முதல்  பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன்  வழங்கப்பட உள்ளது. இது  90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதை பயன்படுத்தி  மாணவ, மாணவியர் உயர்கல்விக்கு  விண்ணப்பிக்கலாம். நாளை முதல் 18ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளில் இச்சான்றிதழ் வழங்கப்படும்; அதன்பின், dge.tn.nic.in இணையதள முகவரியில் சென்று மாணவ, மாணவியரே இச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Monday, May 11, 2015

பள்ளிகள் தயார்நிலை - மே 14 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம்

 தற்காலிக மதிப்பெண் பட்டியல்
 (Provisional Marksheet)


மார்ச் 2015ல் நடைபெற்று முடிந்த 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு  07.05.2015 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டது.  இதில் அரசு பள்ளிகள் 84.26 சதவீதம், தனியார் மெட்ரிக் பள்ளிகள்  97.67,  அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் 93.42 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 


இந்நிலையில்  மாணவர்கள்  இன்ஜினியரிங், மருத்துவப் படிப்பு, கலைப்படிப்புகள்  உள்ளிட்ட உயர்கல்விகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகிக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் சுற்றறிக்கை வழிகாட்டுதல்களின்படி, தற்போது அனைத்துப் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் பட்டியல் (Provisional Mark Sheet)  பதிவிறக்கம் செய்து சரிபார்க்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது.

எனவே 14.05.2015 முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு விரைந்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Sunday, May 10, 2015

அன்னையர் தினம் - இது நன்றி உணரும் தருணம் ( HAPPY MOTHER'S DAY WISHES TO ALL )


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை.
(ஈழப் போரில் தன் தாய் இறந்தது தெரியாமல் பால்  அருந்தும் பச்சிளம் குழந்தை)

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்


மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
(இவன் தாயல்ல. இது தாய்மை)

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
பாரதி, கண்ணதாசன் போல் எண்ணற்ற மேதைகள் சொல்லிய அன்னையின் பெருமைகளை , அவர்களைப் போல பிறருக்கு எடுத்துச் சொல்லும் தகுதி நமக்கு இல்லாததால்,  அகத்தியர் திரைபடத்தில், வயலின் மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையில் உயர்திரு பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுதிய பாடல் மேலே எடுத்தாளப் பட்டுள்ளது.

Friday, May 8, 2015

Papanasam Official Theatrical Trailer 1 | Kamal Haasan | Gautami | Jeeth...

இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ 0.75% விர்...; மெடிக்கல் ‘கட்-ஆப்’ 0.5% சர்....

இன்ஜினியரிங் ‘கட்-ஆப்’ உயர்வு 
மெடிக்கல்  ‘கட்-ஆப்’ குறைவு 
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு ’சென்டம்’ எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ’கட் - ஆப்’ அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்புகளுக்கான  ’கட் - ஆப்’ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர் ’சென்டம்’ எடுத்துள்ளனர். இதேபோல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் இந்த ஆண்டு இன்ஜினியரிங்   ’கட் - ஆப்’ மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால்  கடந்த ஆண்டு ’கட் - ஆப்’ மதிப்பெண்ணை விட அதிகம் இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜினியரிங்   கல்லூரிகளில் சேர முடியும்.

இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் ’சென்டம்’ எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு ’கட் - ஆப்’ மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று தற்போது தேவைப்படும்  ’கட் - ஆப்’ வைத்திருப்பவர்கள்  சுமார்  800 பேர் வரை உள்ளனர். இவர்கள் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகிறார்களா  என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு ’சீட்’ கிடைக்கும். இந்த ஆண்டு  இயற்பியலில்  ’சென்டம்’ எண்ணிக்கை குறைந்துள்ளதால்  இயற்பியல் பாடமே  மதிப்பெண் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என  கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.