Saturday, January 9, 2016

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனம்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்க்கான எழுத்துத்தேர்வு 31.05.2015 அன்று நடைபெற்றது.

'எழுத்துத்தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே (???), நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் நடக்கும்' என அரசு அறிவித்தால், சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'எழுத்துத்தேர்வு மதிப்பெண்-150, வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கு  -10, உயர்கல்விதகுதிக்கு-5, ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவத்திற்கு-2 என மதிப்பெண்களை ஒதுக்கி தேர்வு செய்யலாம்'  என உத்தரவிட்டது.

தற்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், ஆய்வக உதவியாளர் பணி நியமனங்களுக்கான ஏற்பாடுகள் இருக்கும்  என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.