Wednesday, January 6, 2016

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு கட்டாயம்.

2006 ம் ஆண்டு ஜூன்  12 ம் தேதி, தமிழக அரசு கொண்டு வந்த தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், 2006ம் ஆண்டு  ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் அனைவரும் 2016ல் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை கட்டாயமாக எழுதவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வுத்தரவால், தமிழகத்தில் சிறுபான்மை மொழிகளாக உள்ள    உருது,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகியவற்றை தாய்மொழியாக பயின்று வரும் மாணவர்களும் இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தை முதன்மைத் தேர்வாக எழுதவேண்டும்.
 
இம்மாணவர்கள் மார்ச் 15,16ல்  தமிழ்  தேர்வுகளையும் , கூடுதலாக , ஏப்ரல் 13ல்  சிறுபான்மை மொழிப்பாடத் தேர்வினையும்    எழுதவேண்டும்.