Thursday, February 26, 2015

Provisional Marksheet for +2 Students - +2 ரிசல்ட் வந்த 2 நாளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல்

+2 ரிசல்ட்  வந்த 2 நாளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் 

+2 தேர்வு மார்ச் 5ம்  தேதி துவங்கி மார்ச் 31ம்  தேதி முடிவடைகிறது. மே மாதம்  தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு தற்காலிக மார்க் சீட் வழங்கப் படும் என பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி D.சபீதா தெரிவித்துள்ளார். 

        நேற்று சென்னையில் தேர்வுகள் குறித்து நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு வீரமணி, பள்ளிக்கல்வி  செயலாளர் திருமதி D.சபீதா, தேர்வுத்துறை இயக்குனர் திரு தேவராஜன் , பள்ளிக்கல்வி இயக்குனர் திரு  கண்ணப்பன் மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.


     இக்கூட்டத்தில்  பள்ளிக்கல்வி செயலாளர் பேசுகையில் , மார்ச் 2015ல்  +2 தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்  படும் என தெரிவித்தார்.

               மேலும் தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் தெரிவிக்கையில் "தேர்வு முடிவுகள்  வெளியானதும்  http://www.tndge.in வலைத்தளத்தில்  தற்காலிக  மதிப்பெண் பட்டியலை(Provisional Mark sheet) டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  இம்மதிப்பெண் பட்டியலில், மாணவரின் போட்டோ, பதிவு எண், மதிப்பெண்கள், பள்ளியின் பெயர்ஆகிய விவரங்கள் இருக்கும். இந்த மதிப்பெண் பட்டியலை download செய்து அதில் தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெறவேண்டும். இம்மதிப்பெண் பட்டியல் 90 நாட்களுக்கு மட்டும் செல்லும். போலி மதிப்பெண் பட்டியல்கள் தயாரிப்பதை தவிர்க்க இதில் ரகசிய குறியீடுகள் இருக்கும்." என தெரிவித்துள்ளார்.

            Engineering  மற்றும்  Medical விண்ணப்ப படிவங்களை நிரப்பவும், கவுன்சலிங் போன்றவற்றில் கலந்து கொள்ளவும் இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப் படுகிறது. ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் தேர்வு முடிவுகள் வெளியான 30 நாட்களில் கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.