Tuesday, February 24, 2015

4 Days Bank Strike Averted as Deal Reached on Wage Hike, Holidays - வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


4 Days Bank Strike Averted as Deal Reached on Wage Hike, Holidays 
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
Ahead of the Budget, the Indian Banks' Association, which represents lenders, managed to avert a four-day strike starting February 25. Employees of state-run banks will get 15 per cent wage hike and alternate Saturdays off, according to the agreement.

The wage hike will be applicable from November 2012 and will be valid for five years. The bank unions were demanding a 19 per cent hike in wages and a five-day work week.
Unions reached the wage settlement after 18 rounds of negotiations over more than two years, Vishwas Utagi, a senior union official, said. The new salaries, applicable for more than 7 lakh bank workers, will be backdated to November 2012 and valid for five years, he said.

Mr Utagi said the estimated cost for banks as a result of the salary increase will be an annual Rs. 4,725 crore.


ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், 25.02.2015 முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.
ஒப்பந்தம்:
 மும்பையில் நேற்று(23.02.2015) இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், ஊதிய உடன்பாடு எட்டப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், வங்கிகளுக்கு ஆண்டுக்கு, 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, வங்கிகள் சனிக்கிழமை, அரை நாள் இயங்கி வந்தன.இம்முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

 முழுநேரம் இயங்கும்:

   புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.