Friday, February 6, 2015

Bob Marley

Robert Nesta "Bob" Marley
(The God of REGGAE Music)

( 6 February 1945 – 11 May 1981)

You say you love rain,
but you use an umbrella to walk under it.


 

You say you love sun,
but you seek shelter when

 it is shining.

 



 


You say you love wind,
but when it comes you close your windows. 

 



So that's why I'm scared
when you say
 you love me





"என்னைக் காதலிப்பதாக கூறியதால்
எனக்குப் பயமாக இருக்கிறது"

நீ மழையை நேசிப்பதாகக் கூறினாய்..
ஆனால், மழை பொழிந்த பொழுதில்
உனது குடையை நீ விரித்துக் கொண்டாய்...

நீ சூரியனை நேசிப்பதாகக் கூறினாய்..
ஆனால், சூரிய ஒளி பிரகாசித்தபோது
நீ நிழலுக்காக பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றாய்...

நீ தென்றல் காற்றை நேசிப்பதாகக் கூறினாய்,
ஆனால், தென்றல் வீசிய பொழுது
நீ உனது சாளரங்களை மூடிக்கொண்டாய்...

நான் பயப்படுவது இதனால் தான்..
ஏனெனில், நீ கூறினாய்
நீ என்னை மிகவும் நேசிப்பதாக....
                            

 எழுந்து நில்லுங்கள்

உங்களது உரிமைகளுக்காக…
வானத்திலிருந்து கடவுள் வந்து
அனைத்து துக்கங்களையும் எடுத்துக்கொண்டு
சந்தோஷத்தை வழங்குவாரென்று
நீங்கள் அனைவரும் நினைப்பீர்கள்…
ஆனால், வாழ்க்கையின் பெறுமதியை
புரிந்துகொண்டீர்களானால்
உங்களது வாழ்க்கையை இந்த பூமியில்தான் தேடுவீர்கள்…
அப்போது நீங்கள் வெளிச்சத்தைக் காண்பீர்கள்…
அதனால் எழுந்து நில்லுங்கள்…  

  • இவர் பிறந்த தினமான பிப்ரவரி 06 ஜமைக்காவில் தேசிய விடுமுறை தினம். 

  • இவர் பிறந்த வீடு அரசு அருங்காட்சியகம்.

  • இவர் இறக்கும் வரை 4000 குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை நிறைவேற்றியவர். 

  • 1980ல் சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வேயின் முதல் சுதந்திர நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி ஏற்படுத்தியவர்.

  • 2011ஆம் ஆண்டு BBC நடத்திய வாக்களிப்பில் உலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் மூன்றாவது நபர்.   

யார் இந்த பாப் மார்லி?  
ஏன் மார்லியை உலகம் கொண்டாடுகிறது.  
உலகின் அனைத்து இளைஞர்களின் டிஷர்ட்களில் இடம் பெறும் 
 அளவுக்கு இவர் என்ன செய்தார் ?

அவரது பாடல்களில் புதைந்திருக்கும் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கையே அதற்கான காரணங்களாகும். சாதாரண தொழிலாளர்களில் இருந்து பணக்கார முதலாளிகள் வரை அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். அவரது பாடல்கள் எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடியவை.இசையால் ஒரு இனத்தின், ஒரு தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டவர்.இவரது இசையில் நாம் கடவுளைக் காணலாம்.  

Catch A Fire, Live, Rastaman Vibration, Babylon By Bus, Uprising,Rebel Music,Redemption Song, No Woman No Cry ஆகியவை இவரது புகழ் பெற்ற ஆல்பங்கள்.


அவருடைய ரசிகர்களுக்கு அவர் தன்னம்பிக்கை. வழிகாட்டி. கடவுள். வறுமையில் தள்ளப்பட்ட லட்சக்கணக்கான ஏழைகளுக்கு நம்பிக்கை ஊட்டியவர்.

அறிவுரையாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் விஷயங்களை, பாடல்களின் மூலம் சொல்லி இளைஞர்களை ஏற்றுக்கொள்ள வைத்தவர்.