Friday, May 6, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை (AIADMK ELECTION MANIFESTO - ELECTION 2016)



ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று(05.05.2016)வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்

  1. மகளிர் வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50% மானியம்.
  2. 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் இல்லை.
  3. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன்.
  4. அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு இலவச செட் டாப் பாக்ஸ்.
  5. தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில்  காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
  6. தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தங்கம் 1 சவரன் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  7. தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம்.
  8. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.
  9. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  10. மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி.
  11. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.
  12. தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.
  13. வல்லுநர் குழு  அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
  14. மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறை  9 மாதங்களாக உயர்த்தப்படும்.
  15. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
  16. நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
  17. கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.
  18. கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  19. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
  20. விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
  21. உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும்.
  22. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  23. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
 இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 28, 2016

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு வழங்கும் சட்டமன்ற தொகுதிகள் விவரம் ( Voters Verifiable Paper Audit Trail System (VVPAT Assemby Constituencies in Tamilnadu Assembly Election, May 2016)



தமிழகத்தில் மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், வாக்கை பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு, அவர்கள் வாக்குப் பதிவு செய்த விவரங்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டினை (VVPAT) அளிக்கும் முறை சில சட்டமன்ற தொகுதிகளில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.

இம்முறையில் வாக்காளர், தங்கள் வாக்கினை, வாக்குப்பதிவு இயந்திரத்தில்(EVM)  பதிவு செய்தவுடன், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டு ,  EVM உடன் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர் மூலமாக, அச்சிடப்பட்டு வழங்கப்படும். ஆனால் அந்த சீட்டினை வாக்காளர் வெளியே கொண்டுசெல்ல அனுமதி இல்லை. தங்கள் வாக்கை சரிபார்த்தவுடன்,  வாக்குப்பதிவு மையத்திலேயே அமைந்துள்ள பெட்டியில் அதனை போட்டுவிட வேண்டும்.

மே 16ல் நடைபெற உள்ள தேர்தலில், வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு வழங்கவுள்ள சட்டமன்ற தொகுதிகள் விவரம் பின்வருமாறு:

S.No
Assembly Constituencies
No of Poling Stations (PS) using VVPAT
1
Anna Nagar, Chennai
255
2
Vellore
244
3
Krishnagiri
297
4
Salem North
284
5
Erode West
285
6
Tiruppur North
327
7
Coimbattore North
285
8
Dindigul
268
9
Tiruchirappalli West
271
10
Cuddalore
228
11
Thanjavur
276
12
Kancheepuram
316
13
Viluppuram
281
14
Madurai East
302
15
Thoothukudi
271
16
Tirunelveli
305
17
Kanniyakumari
300
Total No of PS Using VVPAT
4795
 
Source :Elections.tn.gov.in


திருச்சி மாவட்டத்தில், முதல் கட்ட தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29.4.16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்

Wednesday, April 27, 2016

மூர் விதிப்படி அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படப் போகும் 8 புதிய மாற்றங்கள்

Law 1: 

The number of transistors in a dense integrated circuit doubles approximately every two years. 
                                        -Gordon E. Moore, the co-founder of Intel and Fairchild Semiconductor 

மூர் விதிப்படி, அடுத்த 10 ஆண்டுகளில்,  சில துறைகளில் அபரிமிதமான மாற்றங்கள்  ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள துறைகளின் பட்டியலை இங்கே  காணலாம்.

  1. வரும் 2025ல்,  1000 டாலர் விலையில் ஒரு விநாடிக்கு 10 ஆயிரம் டிரில்லியன் சுற்று வேகத்தில் இயங்கும் கம்ப்யூட்டரை வாங்க முடியும். இந்த வேகம், மனித மூளையின் வேகத்திற்கு இணையானதாக இருக்கும்.

  2. Internet of Everything (IoE) - அதாவது அனைத்திலும் இணையதளம் முறையில் மனிதர்கள் - சாதனங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்பட்டு, படு வேகத்தில் தகவல்கள் பரிமாறப்படும். 10 ஆயிரம் கோடி இணைப்புகள் உலகெங்கும் இருக்கும். 

  3. துல்லியமான அறிவுத்திறனை நோக்கி நாம் முன்னேறி இருப்போம். பல்வேறு சென்சார்கள் மூலம் இது சாத்தியப்படும். இதன் மூலம் டிரைவர் இல்லாத கார், சாட்டிலைட் சிஸ்டம், ஆளில்லா விமானம், கேமிராக்கள் போன்றவை எளிதாக்கப்படும். 

  4. ஒரு நொடிக்கு ஒரு மெகாபைட் வேகத்தில்(தற்போதைய வேகத்தை விட 8 மடங்கு அதிக வேகம்)  இணையதள இணைப்புகளை தர பேஸ்புக், ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், வெர்ஜின் போன்ற நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.( தற்போது 1MBPS,2MBPS,3MBPS என குறிப்பிடுவது எல்லாம் Mega Bits Per Second என்பதன் விரிவாக்கமே  ஆகும். அதாவது 1 வினாடிக்கு  1 மெகா பிட்.  ஒரு Mega Byte என்பது   8 மெகா பிட். அதாவது  ஒரு வினாடிக்கு 8 மெகாபிட். அதாவது  தற்போதைய வேகத்தை விட 8 மடங்கு அதிக வேகம்). 

  5. ஆரோக்கியம் மற்றும் காப்பீடு துறைகளில் இப்போதுள்ள முறைகள் அழிந்து விடும். கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மூலம் புதிய முறைகள் வந்துவிடும். நோய்களின் மூல காரணத்தை நாமே கண்டுபிடிக்கும் முறைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அறுவை சிகிச்சைகளை இயந்திர மனிதர்களே துல்லியமாக செய்துவிடுவர். 

  6. இப்போது நாம் பயன்படுத்தும் மொபைல் போன், கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மறைந்து விடும். கூகுள் கண்ணாடி போன்றவையும் இருக்காது. கண்ணிலேயே பொருத்திக்கொள்ளும் சாதனம் வந்து, அதிலேயே அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 

  7. செயற்கை அறிவுத்திறன் வளர்ந்து, மனிதர்களின் துணை இல்லாமல் பல வேலைகள் தானாகவே நடக்கும் நிலைமை வந்துவிடும். 

  8. பணம், ஒப்பந்தம், ஷேர்கள் போன்ற அனைத்துப் பணிகளும் டிஜிட்டல் முறையில், மனிதர்களின் உதவி இல்லாமல் தானாகவே நடக்கும் நிலை தோன்றிவிடும்.

2017 ஜனவரி-1 முதல் மொபைல்போன்களில் அவசர உதவிக்கான 'பட்டன்' கட்டாயமாகிறது

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது 

அவசர காலத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரும்  2017 ஜனவரி-1 முதல்  அவசர உதவி தேவைப்படும்போது எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

அதாவது, மொபைலில் உள்ள 5 அல்லது 9 ஆகிய எண்களில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து அழுத்தும்போது, அந்த மொபைல் எண் உள்ளவருக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதைத் தவிர, தற்போது ஸ்மார்ட் போன்களில் மட்டும் உள்ள GPS வசதி,  2018 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து போன்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

Tuesday, April 26, 2016

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. 

இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, ரேங்க் எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். 

இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Friday, April 22, 2016

புத்தக சுமையை குறைக்க CBSE புது உத்தரவு

மாணவர்களின்  புத்தகச் சுமையை குறைக்க  CBSE வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்.
  • மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.
  • கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டான புத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
  • பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்
  • வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது
  • பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்.
  • பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்
  • புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
  • வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.

இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகள்


 
தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகளை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.

அதன் விவரம்: 

நவம்பர் 8,2015  குரூப் 1 தேர்வு

காலிப் பணியிடங்கள்: 74
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  117,696
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:  4,033
முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  29.07.2016, 30.07.2016 மற்றும்  31.07.2016

ஜூலை 11,2015  புள்ளியல் அதிகாரி தேர்வு

காலிப் பணியிடங்கள்: 270
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  19,130
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்:  54
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  06.05.2016

ஆகஸ்ட் 1,2015  நுாலகர் தேர்வு

காலிப் பணியிடங்கள்: 29
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை:  2,352
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு  தேர்வு செய்யப்பட்டவர்கள்: 71
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்:  09.05.2016 மற்றும் 10.05.2016


தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in வலைதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, April 21, 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

 
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
தற்போதைய அகவிலைப்படி 119 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தி, 1.1.2016 முதல்  முன்தேதியிட்டு வழங்கப்படும்.

அரசாணையை பெற இங்கே கிளிக் செய்யவும்.

 
 

Tuesday, April 19, 2016

எச்.டி., தரத்தில் சினிமா : fastfilmz ‘ஆப்’ அறி­முகம்

‘fastfilmz’ நிறு­வனம், சினிமா படங்­களை பதி­வி­றக்கம் செய்­வ­தற்­காக, மொபைல் App  ஒன்றை அறி­முகம் செய்­துள்­ளது. ‘StartUp’ நிறு­வ­ன­மான fastfilmz, பெங்­க­ளூரு, லண்டன் ஆகிய இடங்­களை தலைமை அலு­வ­ல­கங்­க­ளாகக் கொண்டு செயல்­ப­டு­கி­றது. சமீப கால­மாக மொபைல் மூல­மாக சினிமா பார்ப்­பது அதி­க­ரித்து வரு­கி­றது. 

இப்­போது அடுத்­த­கட்­ட­மாக, HD தரத்தில் மொபைல் போன் மூலம், சினிமா பார்ப்­ப­தற்­காக, fastfilmz  App ஒன்றை அறி­முகம் செய்­துள்­ளது. 

இந்த, செய­லியின் மூலம் தற்­போது, 150க்கும் மேற்­பட்ட தமிழ் படங்­ளைப் பார்க்­கலாம். இதற்கு, ஒரு நாளைக்கு, ஒரு ரூபாய் என, மாதத்­திற்கு, 30 ரூபாய் கட்­டணம் வசூ­லிக்­கப்­படும்.

புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு

இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வேயில் 13,26, 437 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 3 வருடங்களாக பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை.  வருமான வரி, சுங்கத்துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கையும் 47 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. உள்துறை அமைச்சகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சகத்தில், 301 ஊழியர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு 900 ஊழியர்களாக இருந்த இத்துறையில், 2017 மார்ச்1ல் 1201 ஊழியர்கள் பணிபுரிவார்கள். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கடந்த இரண்டு வருடத்தில், 2200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களை நிர்வகிக்கும் தனித்திறன் அமைச்சகத்தில், 1800 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் 6 ஆயிரம் பேரும், நிலக்கரி அமைச்சகத்தில் 4,399 பேரும், விண்வெளி துறையில் ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

Friday, April 15, 2016

பா.ம.க. தேர்தல் அறிக்கை - முழு வடிவில் (2016 சட்டமன்ற தேர்தல்)

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பா.ம.க.வின் 22 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 323  வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 
To Download PMK Election Manifesto  click here
தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: