Showing posts with label The World in 2025: 8 Predictions for the Next 10 Years. Show all posts
Showing posts with label The World in 2025: 8 Predictions for the Next 10 Years. Show all posts

Wednesday, April 27, 2016

மூர் விதிப்படி அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படப் போகும் 8 புதிய மாற்றங்கள்

Law 1: 

The number of transistors in a dense integrated circuit doubles approximately every two years. 
                                        -Gordon E. Moore, the co-founder of Intel and Fairchild Semiconductor 

மூர் விதிப்படி, அடுத்த 10 ஆண்டுகளில்,  சில துறைகளில் அபரிமிதமான மாற்றங்கள்  ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள துறைகளின் பட்டியலை இங்கே  காணலாம்.

  1. வரும் 2025ல்,  1000 டாலர் விலையில் ஒரு விநாடிக்கு 10 ஆயிரம் டிரில்லியன் சுற்று வேகத்தில் இயங்கும் கம்ப்யூட்டரை வாங்க முடியும். இந்த வேகம், மனித மூளையின் வேகத்திற்கு இணையானதாக இருக்கும்.

  2. Internet of Everything (IoE) - அதாவது அனைத்திலும் இணையதளம் முறையில் மனிதர்கள் - சாதனங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்பட்டு, படு வேகத்தில் தகவல்கள் பரிமாறப்படும். 10 ஆயிரம் கோடி இணைப்புகள் உலகெங்கும் இருக்கும். 

  3. துல்லியமான அறிவுத்திறனை நோக்கி நாம் முன்னேறி இருப்போம். பல்வேறு சென்சார்கள் மூலம் இது சாத்தியப்படும். இதன் மூலம் டிரைவர் இல்லாத கார், சாட்டிலைட் சிஸ்டம், ஆளில்லா விமானம், கேமிராக்கள் போன்றவை எளிதாக்கப்படும். 

  4. ஒரு நொடிக்கு ஒரு மெகாபைட் வேகத்தில்(தற்போதைய வேகத்தை விட 8 மடங்கு அதிக வேகம்)  இணையதள இணைப்புகளை தர பேஸ்புக், ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், வெர்ஜின் போன்ற நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.( தற்போது 1MBPS,2MBPS,3MBPS என குறிப்பிடுவது எல்லாம் Mega Bits Per Second என்பதன் விரிவாக்கமே  ஆகும். அதாவது 1 வினாடிக்கு  1 மெகா பிட்.  ஒரு Mega Byte என்பது   8 மெகா பிட். அதாவது  ஒரு வினாடிக்கு 8 மெகாபிட். அதாவது  தற்போதைய வேகத்தை விட 8 மடங்கு அதிக வேகம்). 

  5. ஆரோக்கியம் மற்றும் காப்பீடு துறைகளில் இப்போதுள்ள முறைகள் அழிந்து விடும். கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மூலம் புதிய முறைகள் வந்துவிடும். நோய்களின் மூல காரணத்தை நாமே கண்டுபிடிக்கும் முறைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அறுவை சிகிச்சைகளை இயந்திர மனிதர்களே துல்லியமாக செய்துவிடுவர். 

  6. இப்போது நாம் பயன்படுத்தும் மொபைல் போன், கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மறைந்து விடும். கூகுள் கண்ணாடி போன்றவையும் இருக்காது. கண்ணிலேயே பொருத்திக்கொள்ளும் சாதனம் வந்து, அதிலேயே அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். 

  7. செயற்கை அறிவுத்திறன் வளர்ந்து, மனிதர்களின் துணை இல்லாமல் பல வேலைகள் தானாகவே நடக்கும் நிலைமை வந்துவிடும். 

  8. பணம், ஒப்பந்தம், ஷேர்கள் போன்ற அனைத்துப் பணிகளும் டிஜிட்டல் முறையில், மனிதர்களின் உதவி இல்லாமல் தானாகவே நடக்கும் நிலை தோன்றிவிடும்.