Showing posts with label CBSE Circular for Reducing School Children's Book burden. Show all posts
Showing posts with label CBSE Circular for Reducing School Children's Book burden. Show all posts

Friday, April 22, 2016

புத்தக சுமையை குறைக்க CBSE புது உத்தரவு

மாணவர்களின்  புத்தகச் சுமையை குறைக்க  CBSE வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்.
  • மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.
  • கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டான புத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
  • பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்
  • வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது
  • பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்.
  • பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்
  • புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
  • வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.

இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.