Wednesday, April 27, 2016

2017 ஜனவரி-1 முதல் மொபைல்போன்களில் அவசர உதவிக்கான 'பட்டன்' கட்டாயமாகிறது

மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது 

அவசர காலத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரும்  2017 ஜனவரி-1 முதல்  அவசர உதவி தேவைப்படும்போது எச்சரிக்கை செய்யும் வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் தயாரிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

அதாவது, மொபைலில் உள்ள 5 அல்லது 9 ஆகிய எண்களில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து அழுத்தும்போது, அந்த மொபைல் எண் உள்ளவருக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதைத் தவிர, தற்போது ஸ்மார்ட் போன்களில் மட்டும் உள்ள GPS வசதி,  2018 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து போன்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

No comments: