Monday, April 11, 2016

திமுக தேர்தல் அறிக்கை - முழு வடிவில் (2016 சட்டமன்ற தேர்தல்)

தி.மு.க.வின் 144 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 123 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


Click Here to download  DMK Election Manifesto.pdf.(59 MB)



தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 
  1. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் - டாஸ்மாக் நிறுவனம் கலைப்பு - டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி. 
  2. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.  

  1. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் 

  1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்
  2. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
  3. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
  4. அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.
  5. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும் .
  6. நெல் கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  1. நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
  2. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
  3. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்  
  4. ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.


  1. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் 
  2. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை.
  3. மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்.


  1. ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.
  2. வெள்ள சேதங்களை தடுக்க  5000 கோடியில் திட்டம்  

  1. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும் .
  2. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும் 
  3.  வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.  
  4. மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி  
  5. முதியோர் உதவித்தொகை ரூ.1300 ஆக உயர்த்தப்படும்.
  6. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை 

  1.  மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
  2. மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்  
  3. விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும் 


  1. மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும் 
  2. தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.  

  1. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும் 
  2. பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்  
  3. பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
  4. தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.
  5. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை  

  1. பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.
  2. அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.
  3. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் .
  4. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
  5. அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.


  1. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை.
  2. தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் 16 லட்சம் மாணவர்களுக்கு 3ஜி,4ஜி தொழில்நுட்பத்தில் மாதம் 10 ஜிபி பதிவிறக்கம் செய்யும் வசதி கொண்ட இணைய இணைப்புக்கான டாங்கிளுடன் லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.
  3. மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை.
  4. படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை  
  5. பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.  

  1. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்.
  2. மதுரை முதல் தூத்துகுடி வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்.  
  3. சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.
  4. நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

  1. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  2. கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.
  3. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும்.
  4. மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்.

No comments: