Showing posts with label AIADMK Election Manifesto. Show all posts
Showing posts with label AIADMK Election Manifesto. Show all posts

Friday, May 6, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை (AIADMK ELECTION MANIFESTO - ELECTION 2016)



ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று(05.05.2016)வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்

  1. மகளிர் வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50% மானியம்.
  2. 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் இல்லை.
  3. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன்.
  4. அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு இலவச செட் டாப் பாக்ஸ்.
  5. தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தில்  காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
  6. தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தங்கம் 1 சவரன் ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  7. தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம்.
  8. அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.
  9. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  10. மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி.
  11. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.
  12. தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.
  13. வல்லுநர் குழு  அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
  14. மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறை  9 மாதங்களாக உயர்த்தப்படும்.
  15. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
  16. நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.
  17. கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.
  18. கச்சத்தீவை மீட்டெடுத்து பாரம்பரிய மீன்பிடி இடங்களில் மீன்பிடி உரிமையை நிலைநாட்டிட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  19. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
  20. விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
  21. உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும்.
  22. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  23. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும். வங்கிகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
 இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.