Thursday, January 18, 2018

வருமான வரி செலுத்துவோருக்கு '80C' பிரிவின் கீழ் உச்சவரம்பு 2 லட்சமாக உயர வாய்ப்பு.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில்வருமான வரிசெலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில்,அறிவிப்புகள் இருக்கும் எனமத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80C யின் கீழ்தற்போது  வழங்கப்படும் வரிச்சலுகையை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சமாக  உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய பட்ஜெட்டில்முறையாக வரிசெலுத்துவோருக்கு சலுகை அளிக்கவும்பொதுமக்களின் சேமிப்பை அதிகரிக்கவும்சில அறிவிப்புகளை  வெளியிடமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


Wednesday, January 17, 2018

பள்ளி மாணவர்களுக்காக வட்டார வள மையங்களில் (BRC) ஆதார் மையம்



பள்ளி மாணவர்களுக்காக அனைத்து வட்டார வள  மையங்களிலும்(BRC)  விரைவில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.


EMIS திட்டத்தில்  பள்ளி மாணவர்களின் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.இதனால், தற்போது ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கும், அதேபோல, ஆண்டுதோறும் ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்க வேண்டியுள்ளது.


Wednesday, January 10, 2018

12.01.2018 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சிறப்பு விடுமுறை - தமிழக அரசு


பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில்  உள்ள பள்ளிகள் மற்றும்  உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகள். பல்கலைக்கழகங்கள் , பல்கலைகழகங்களுக்கு கீழ் இயங்கும் உறுப்புக்கல்லூரிகள் என அனைத்து  கல்வி நிறுவனங்களுக்கும் சிறப்பு நிகழ்வாக வருகிற 12.01.18 வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


தமிழக அரசு C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, January 1, 2018

HAPPY NEW YEAR 2018

அன்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.




Tuesday, October 31, 2017

தமிழகத்தில் கன மழை - சென்னை(பள்ளி மற்றும் கல்லூரிகள்), காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை


கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூரில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஊதியக்குழு 2017 - ஊதிய மறுசீரமைப்பு - அரசு பொதுத்துறை நிறுவனங்கள் / வாரியங்கள் - அரசாணை எண் 319 (Revision of Pay, Allowances etc., to Govt Employees of State Public Sector Undertakings / Statutory Boards - Go.Ms.No. 319)

TN Pay Commission 2017 - Official Committee, 2017 on Revision of Pay, Allowances etc., to Govt Employees of State Public Sector Undertakings / Statutory Boards - Orders.

fin_e_319_2017.pdf


Wednesday, October 25, 2017

ஊதியக்குழு - பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் அரசாணை 311 ( TN PAY COMMISSION 2017 - NEW Fixation of Pay on Promotion- G.O.Ms.No. 311)

OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 – Fixation of Pay on Promotion in the revised pay structure - Orders - Issued.

ஊதியக்குழு - புதிய பயணப்படி (TA) அரசாணை ( TN PAY COMMISSION 2017 - NEW TA ORDER ISSUED)

OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Traveling Allowance - Orders - Issued. 

 

 

ஊதியக்குழு - புதிய ஓய்வூதியம் மற்றும் படிகள் - அரசாணைகள் ( TN PAY COMMISSION 2017 - NEW PENSION AND RELATED BENEFITS ORDERS)


OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Issued. 


fine_e_306_2017

ஊதியக்குழு - புதிய HRA , CCA அரசாணைகள் ( TN PAY COMMISSION 2017 - NEW HRA CCA ORDERS ISSUED)

OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders

fin_e_305_2017

ஊதியக்குழு - புதிய ஓய்வூதியம் மற்றும் படிகள் - அரசாணை 304 ( TN PAY COMMISSION 2017 - G.O. 304 PENSION AND RELATED BENEFITS ORDERS)


OFFICIAL COMMITTEE, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – G.O.Ms No. 304 -  Enhancement of Special Pay – Orders.

 

7வது ஊதியக்குழு அரசாணை வெளியீடு - (TN GOVT PUBLISHED 7TH PAY COMMISION G.O.)

Click Here to Download the 7th Pay Commission G.O.

Monday, October 9, 2017

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளதுஇதுதொடர்பான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார்

லாபம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீத போனஸும் கருணைத் தொகையும்நஷ்டமடைந்துள்ள நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் கருணைத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

பாடநூல் கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பபட்டுள்ளது

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதமும் இழப்பை சந்திக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் தொகையையும் கருணைத்தொகையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

போனஸ் தொகையாக நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ. 8400 முதல் 16 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரப்பர் தோட்ட கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

குடிநீர் வடிகால் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அரசு பொதுத்துறை மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 3.69 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.