Thursday, January 18, 2018

வருமான வரி செலுத்துவோருக்கு '80C' பிரிவின் கீழ் உச்சவரம்பு 2 லட்சமாக உயர வாய்ப்பு.

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில்வருமான வரிசெலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில்,அறிவிப்புகள் இருக்கும் எனமத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80C யின் கீழ்தற்போது  வழங்கப்படும் வரிச்சலுகையை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சமாக  உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய பட்ஜெட்டில்முறையாக வரிசெலுத்துவோருக்கு சலுகை அளிக்கவும்பொதுமக்களின் சேமிப்பை அதிகரிக்கவும்சில அறிவிப்புகளை  வெளியிடமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



மாத சம்பளம் பெறுவோர்சிறு தொழில்முனைவோர்பெண்கள்மூத்த குடிமக்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்தோர், முறையாக வரி செலுத்தி வருகின்றனர்இவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இவர்களின்  சேமிப்பை  அதிகரிக்கும் வகையிலும்வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80C யின் கீழ்தற்போது  வழங்கப்படும்  வரிச்சலுகையை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சமாக  உயர்த்த மத்தியஅரசு  திட்டமிட்டுள்ளது.


இதன் மூலம்தனி நபர் சேமிப்பு உயர்வதுடன்,வங்கிகளில் குவியும் டிபாசிட் தொகையும் பெருமளவு உயரும்இது குறித்தஅறிவிப்புவரும் பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானால்அதுமாத சம்பளம்  பெறும்மத்திய தர வகுப்புமக்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைபெறும்.

No comments: