Thursday, January 18, 2018

தனிநபர் வருமான வரியை முற்றிலுமாக நீக்க மத்திய அரசு ஆலோசனை



நாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய அமைத்த மோடி அரசு, தற்போது 50 வருடப் பழமையான வருமான வரிச் சட்டத்தை இன்றைய நடைமுறைக்கு மாற்றும் பணியில் இறங்கியுள்ளது. 


தனிநபர் வருமான வரி நீக்கம் அல்லது ஒற்றை வரி விதிப்பு முறை ஆகியவற்றுக்குக் குறித்து முடிவுகள் 5 மாத ஆய்வுகளின் முடிவுகளை வைத்தே முடிவு செய்யப்பட உள்ளது. 


எப்படி இருப்பினும், 2018-19ஆம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.



தனிநபர் வருமான வரியை இழப்பதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய் இழப்பு ஏற்படும், ஆனாலும் மக்களின் கையில் பணம் புழக்கம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து நாட்டின் தேவையும் வளர்ச்சியும் அதிகரிக்கும் எனப் பலர் விவாதம் செய்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் சேமிப்பின் அளவும் அதிகரிக்கும்.


இதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இப்படி உருவாகும் வேலைவாய்ப்புகளுக்குச் சம்பளம் குறைவாக இருந்தாலும், நிறுவனங்கள் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தும் முயற்சியில் இறக்கும்.


வரி இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் தங்களது பணத்தை வங்கியிலேயே வைக்கும் காரணத்தினால் வங்கிகளின் நிலை மற்றும் வருமானம் மேலும் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் வைப்பு மற்றும் கடன் அளிப்பு அளவுகளும் அதிமாக இருக்கும்.



தனிநபருக்கான வருமான வரியை முழுமையாக நீக்கம் பற்றிய அறிவிப்பு மோடி அரசால் அறிவிக்கப்பட்டால், கண்டிப்பாக 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

No comments: