Sunday, January 28, 2018

தமிழக அரசு பேருந்து கட்டணங்கள் கி.மீ.க்கு 5 முதல் 10 பைசா வரை குறைப்பு.


தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இந்த நிலையில் பேருந்து கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.

தற்போது பேருந்து கட்டணங்கள் ஒரு கிலோமீட்டருக்கு 5 பைசா முதல் 10 பைசா என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும். 

சென்னை நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ஆக இருந்த நிலையில் ரூ.4-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-லிருந்து ரூ.22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் மாவட்டங்களில் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ18 -ஆக குறைக்கப்பட்டுள்ளது.

No comments: