Sunday, January 21, 2018

NEET தேர்வு நடப்பு ஆண்டிலும் CBSE பாடத் திட்டத்தின்படி நடைபெறும் :மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிக்கை

நடப்பாண்டிலும் CBSE பாடத்திட்ட படியே NEET மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

NEET நுழைவு தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. 


மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடப்பாண்டில் NEET பொது நுழைவு தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார்.

ஆனால் கடந்த ஆண்டில் பாடத்திட்டத்தின் படியே இந்த ஆண்டும் கேள்விகள் கேட்கப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம்(CBSE) அறிக்கை வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பது CBSE ன் நிலைப்பாடு ஆகும். 

மத்திய அரசு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதால் மாநில பாடத்திட்டத்தில் படித்துவரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments: