Wednesday, January 17, 2018

பள்ளி மாணவர்களுக்காக வட்டார வள மையங்களில் (BRC) ஆதார் மையம்



பள்ளி மாணவர்களுக்காக அனைத்து வட்டார வள  மையங்களிலும்(BRC)  விரைவில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.


EMIS திட்டத்தில்  பள்ளி மாணவர்களின் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.இதனால், தற்போது ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கும், அதேபோல, ஆண்டுதோறும் ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்க வேண்டியுள்ளது.


 
இதனால், அனைவருக்கும் கல்வி இயக்கம்(SSA) சார்பில் வட்டார வள  மைய அளவில் ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஆதார் பதிவு குறித்து வட்டார வள மைய கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு ஜனவரி 18 முதல் ஜனவரி  24 வரை நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலுார், வேலுார், சென்னை ஆகிய ஏழு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியின் முடிவில் ஆதார் ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறும் ஆப்பரேட்டர்களால் ஆதார் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த மையங்களில் தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கட்டணம்  ஏதுமின்றி புதிய ஆதார் எண்ணை பெறவோ அல்லது ஏற்கனவே உள்ள ஆதார் பதிவில் திருத்தங்கள் செய்துகொள்ளவோ இயலும்.


No comments: