Monday, October 9, 2017

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளதுஇதுதொடர்பான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார்

லாபம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீத போனஸும் கருணைத் தொகையும்நஷ்டமடைந்துள்ள நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் கருணைத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

பாடநூல் கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பபட்டுள்ளது

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதமும் இழப்பை சந்திக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் தொகையையும் கருணைத்தொகையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

போனஸ் தொகையாக நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ. 8400 முதல் 16 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரப்பர் தோட்ட கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

குடிநீர் வடிகால் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அரசு பொதுத்துறை மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 3.69 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: