தமிழக வெள்ள நிவாரண நிதியாக, அரசு ஊழியர்கள் டிசம்பர் மாதத்தின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க தமிழக அரசு பணியாளர்(ம) நிர்வாக சீர்திருத்தத்துறை (P&AR) ஆணை பிறப்பித்துள்ளது.
Tamilnadu, Education, Employment, TNPSC, Tech, Solutions, News, Health, Science, and Tamil Culture
SCHOOL EDUCATION
(103)
TEACHERS NEWS
(87)
General News
(77)
Entertainment
(42)
NEWS FOR SOCIETY
(36)
RECRUITMENT'S
(26)
EXAM
(23)
HIGHER EDUCATION
(20)
TNPSC
(18)
FORMS/GO'S/PROCEEDINGS
(17)
THE LEGEND'S
(17)
Computer Instructor
(16)
Govt Jobs
(13)
HOW TO SOLVE?
(11)
SOFTWARE'S
(11)
GPF/CPS
(9)
SCIENCE & TECH
(9)
7th Pay Commission G.O
(8)
INTERNATIONAL DAY'S
(8)
RESULT
(8)
TECHNOLOGY
(8)
TRANSFER & COUNSELLING
(8)
PROMOTION / PANEL
(7)
PAY / PAYROLL
(6)
SBI
(5)
BEAUTY
(4)
DEVOTION
(4)
Rain Holidays in Tamilnadu
(4)
Art
(3)
FORMS/GO'S/United India Health Insurance/ PROCEEDINGS
(3)
YOGA
(2)
Genuineness Certificate
(1)
Rainy Day Safety Activities
(1)
Monday, December 14, 2015
Friday, December 11, 2015
Wednesday, December 9, 2015
10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்
மார்ச் 2016ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு,
தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
- மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள்.
- 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள்.
- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் (இ.எஸ்.எல்.சி.) தேர்ச்சிப் பெற்றவர்கள்.
- திறந்தநிலைப் பள்ளியில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்கள்
ஆகியோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் 01.04.2016 -ஆம் தேதி
பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பத்தை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று
பதிவு செய்துகொள்ள வேண்டும். மையங்கள் குறித்த விவரங்கள் www.tndge.in என்ற
இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Monday, December 7, 2015
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்ச்சி வழங்க வேண்டும்(???): டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர்
ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
மாணவ, மாணவியர்கள் தங்களது உடைமைகள், ஆடைகள், பாட நூல்கள் ஆகியவற்றை
இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே , தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு
வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும்
என்றும், அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும்
ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
Saturday, December 5, 2015
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும்
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) டிசம்பர் 28-ஆம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு 2016 பிப்ரவரி
21-ல் காலை 9.30 முதல் 12 மணி வரை தாள்-2 தேர்வும், பிற்பகல் 2
முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல்
தாளையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய
விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.
இரண்டு நிலைகளிலும்
பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில்
டிசம்பர் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வறை அனுமதிச்
சீட்டை ஜனவரி 25-ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
கல்வித் தகுதி
5-ஆம் வகுப்பு வரியிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற
விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 2
ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
8-ஆம்
வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன் 2
ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது
பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஒரு தாள் மட்டும் எழுதும்
ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, இரு தாள்களையும் எழுத விரும்புவோர்
ரூ.1000-த்தையும் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.
300-ஐயும், இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500-ம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
Wednesday, December 2, 2015
RECRUITMENT: SPECIALIST CADRE OFFICERS IN SBI GROUP : 40 Vacancies for B.L.,M.L And 145 Vacancies for B.E.,B.Tech.,M.Sc.,MCA Computer Science Graduates
Advertisement No. CRPD/SCO/2015-16/7
1.
Online Registration of Application starts from: 26.11.2015
2.
Last date for Online Registration of Application: 12.12.2015
3.
Payment of Fee Online: 26.11.2015 to 12.12.2015
4.
Downloading of call letter for Online Test: After: 05.01.2016
5.
Date of Online Test : 17.01.2016
For Notification and Online Apply, Click Here
டிச., 5 வரை கனமழை: இன்று வட கடலோர மாவட்டங்களில் 25 செ.மீ மழை கொட்டும் என BBC அறிக்கை
லண்டன் BBC செய்தி நிறுவனம், நேற்று வெளியிட்ட
அறிக்கையில், டிசம்பர் 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த இரண்டு
நாட்களில் மட்டும் 50 செ.மீ. மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப்
பகுதிகளில் பதிவாகும்' என தெரிவித்திருந்தது.
இதற்கேற்ப சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று(01-12-15) காலை 8.30 மணி முதல்
தற்போது வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும்
சராசரியாக நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவானது. சென்னை
நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
118 மி.மீ., மழையும், மீனம்பாக்கத்தில் 175 மி.மீ., மழையும்
பதிவாகியுள்ளது.
எனவே இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சராசரியாக 25 செ.மீ மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை
சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், திருவண்ணாமலை,வேலுார் ஆகிய 9
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
SSA (G.O.175), RMSA BT,PG, PET, Upgraded School PG's, All Non Teaching(RMSA, General) - Pay Authorization Letter for Nov 2015
Tuesday, December 1, 2015
2016ல் இரண்டு அரையாண்டுத் தேர்வுகள்
தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, 2016 ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Saturday, November 28, 2015
கணினியை பயன்படுத்த கற்றுக்கொள்ள தமிழ் வழி கையேடு ( Learning Computer's- A Guide in Tamil Language for Beginners)
ஏற்கனவே கணினியை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், கணினி படித்தவர்களுக்கே கூட இப்புத்தகம் நன்கு பயன்படும். கணினியை புதிதாக கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இப்புத்தகம் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
அழகிய தமிழில், வண்ண வண்ண விளக்கப்படங்களுடன், தெளிவான வழிமுறைகளுடன் கூடிய இப்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
+2 தனித் தேர்வர்கள் March-2016 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4 வரை கால அவகாசம்
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு
அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க
நவம்பர் 16 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக தனித் தேர்வர்கள்,
தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனைக்
கருத்தில் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர்
4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக இணையவழியில்
விண்ணப்பிக்க வேண்டும். இந்த மையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற
இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வருமான வரி செலுத்தும் 30 லட்சம் பேருக்கு Gas மானியம் ரத்து
இந்தியா முழுவதும் 16 கோடி Gas சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். இதில் 5 கோடி பேர் ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.
ஆனால் தற்போது, 36 லட்சம் பேர் மட்டும் தான் காஸ் மானியத்தை விட்டு
கொடுத்துள்ளனர்.
வசதியானவர்கள் விட்டு கொடுக்கும் மானியத்தை பயன்படுத்தி,
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக(?) சிலிண்டர் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 30 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் 1
சதவீதம் பேர் கூட மானியத்தை விட்டு கொடுக்கவில்லை.
எனவே வருமான வரி
செலுத்துவோருக்கு, மானிய சிலிண்டரை நிறுத்த மத்திய அரசு முடிவு
செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
JEE MAIN Offline,Online Examinations & JEE Advance (Joint Entrance Examination - May 2016) Exam Date's Announced for +2 (XII) Students
IIT(Indian Institute of Technology), IIM(Indian Institute of Management),IISc(Indian Institute of Science) போன்ற கல்விநிலையங்களில் B.Tech,B.Arch, B.Pharm, B.S ஆகிய படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் JEE Main 2016 (Offline), JEE Advance (Joint Entrance Examination) தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Offline examination] :03.04.2016
JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Online examination ] : 09,10 April, 2016
JEE(Main)- Paper-2 (B.Arch./B.Planning) [Offline examination] :03.04.2016
JEE Advance Examination : 22.05.2016
JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Offline examination] :03.04.2016
JEE(Main)- Paper-1 (B.E./B. Tech.) [Online examination ] : 09,10 April, 2016
JEE(Main)- Paper-2 (B.Arch./B.Planning) [Offline examination] :03.04.2016
JEE Advance Examination : 22.05.2016
Apply online through :
Online Application process Stats From : 01.12.2015
Last Date of Online Applcation Registration : 31.12.2015
தேர்வு தொடர்பான முக்கிய நாட்களை அறிய http://www.jeeadv.ac.in/scr/important-dates.php தொடர்பை கிளிக் செய்யவும்.
மேலும் விவரங்களை அறிய http://www.jeeadv.ac.in/index.php என்ற இணையதளத்தை அணுகவும்.
Friday, November 27, 2015
Wi-Fi தெரியும். Li-Fi தெரியுமா? தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த மைல்கல் Li-fi technology
’’Wi-Fi’’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட ”Li-Fi ” தொழில்நுட்பத்தை லண்டன் எடின்பர்க்(University of Edinburgh) பேராசிரியர் Prof. Harald Haas என்பவர் 2011ஆம் ஆண்டு உருவாக்கினார்.
Li-Fi என்பது இருவழி தகவல் பரிமாற்றம்(Bi Directional) நடத்தும் திறனுள்ள, அதி வேகமான தகவல் தொடர்பு தொழில்நுட்பமாகும். இது அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் புறஊதாக் கதிர்களை பயன்படுத்தும் ஒளி வழி தகவல் பரிமாற்ற (visible light communication / Optical wireless communications) தொழில்நுட்பமாகும்.
Li-Fi தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டால் , உங்கள் அறையிலுள்ள மின்விளக்கு, உங்கள் காரின் ஹெட்லைட், தெருவிளக்குகள், சுரங்கப்பாதையில் உள்ள விளக்குகள், உங்கள் செல்போனின் ப்ளாஷ்லைட் என அனைத்தின் வழியாகவும் நீங்கள் அதிவேக இணையத் தொடர்பை பெறலாம்.
ஒரு வினாடிக்கு 224 GB வேகம் கொண்ட Li-Fi இதுவரை ஆய்வுக் கூடத்தில்
மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, இந்த தொழில்நுட்பம்
முதன்முறையாக அலுவலகம் மற்றும் தொழிற் கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 1 GB வேகத்தில் டேட்டா
உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்ற இயலும் என்று அறிவியலாள்ர்கள்
கூறுகின்றனர். இது, சாதாரண Li-Fi வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது.
Li-Fi இயங்கும் முறை:
ஒரு முனையில் LED போன்ற ஒளிமூலமும்(light source) , மறுமுனையில் போட்டோ உணர்வி (Light Sensor) பொருத்தப்பட்ட சாதனங்களும் இருந்தால், விளக்கு ஒளிரும்போது 1 என்ற பைனரி எண்ணையும், விளக்கு அணையும்போது 0 என்ற பைனரி எண்ணையும் அளிக்கிறது. (நமது வீடுகள் உட்பட உள்ள அனைத்து ஒளிமூலங்களும் தொடர்ந்து எரிந்து
கொண்டிருப்பது போல இருந்தாலும், உண்மையில் மிகக் குறுகிய நேரத்தில் விட்டு
விட்டு ஒளிர்கிறது என்பதே உண்மை.) இவ்வாறான பைனரி தகவல் பரிமாற்றத்தின் மூலமாக உலகில் உள்ள அனைத்து ஒளி மூலங்களையும் நாம் இணைய வழி தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தலாம்.
ஒளியின் வேகம் அதிகமாக உள்ளதால் (299792458 1080 meters per second or 1080 million kilometers per hour ) இதில் டேட்டா பரிமாற்றம்
அதிவேகமாக இருக்கும்.
Li-Fi பயன்படுத்துவதால் ஏற்படும் பலன்கள்
ஆப்டிகல் பைபர் கேபிள்களை அமைக்க முடியாத இடங்களில் Li-Fi தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
உங்கள் அறையிலுள்ள அனைத்து விளக்குகளையும் வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைக்க முடியும்.
கார், பஸ் போன்ற வாகனங்களின் முன்விளக்குகளில் LED பயன்படுத்துவதன் மூலம்போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியும்.
’’Wi-Fi’’யை விட விட நூறு மடங்கு வேகமானது. ஒளி சுவற்றில் ஊடுருவாது என்பதால் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும் Li-Fi உதவும். ஒரு வினாடியில் 50 GB தகவல்களை அல்லது 20 திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அளவிற்கு வேகமானது.
அடுத்த சில ஆண்டுகளில் Li-Fi இணைய சேவையில் புரட்சியை உருவாக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.
For more details:
Thursday, November 26, 2015
இந்தியாவின் முதல் அரசியல் சாசன தினம் இன்று(26.11.2015) கடைபிடிப்பு
அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இன்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது.
1949ம் ஆண்டு இதேநாளில் அரசியலமைப்பு சட்டம்
கொண்டுவரப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்று வர்ணிக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோம் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிந்திருந்தார்.
இதையடுத்து நாட்டில் முதல் அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்று வர்ணிக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோம் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிந்திருந்தார்.
இதையடுத்து நாட்டில் முதல் அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
Tuesday, November 24, 2015
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும்: பள்ளிக் கல்வித்துறை முடிவு
வட கிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலுார்,விழுப்புரம்,கடலுார் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அதனால், பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
முந்தைய
அறிவிப்புப்படி, 10ம் வகுப்புக்கு டிசம்பர் 9 மற்றும் 12ம் வகுப்புக்கு டிசம்பர் 7ல் அரையாண்டுத் தேர்வு துவங்கி, டிசம்பர் 22ல் முடிய வேண்டும். ஆனால், மழை விடுமுறையால், ஆறு மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டுத் தேர்வை, ஜனவரி முதல் வாரத்தில் நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Sunday, November 22, 2015
வட மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் : சென்னை வானிலை மையம்
இன்று காலை முதல் வடமாவட்டங்களில்
விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல்
பகுதியில் நீடிப்பதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில்
விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள
Subscribe to:
Posts (Atom)