Thursday, September 24, 2015

கொஞ்சம் சிரிக்க, கொஞ்சம் சிந்திக்க


Source: Google+ , Facebook ,twitter.
Composed by: deccanbluediamonds.



*********

எல்கேஜி பையன்
:  
ஹலோ டீச்சர் இன்னிக்கு என் பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான் ,அவனுக்கு    உடம்பு சரியில்லை
டீச்சர்
:
நீங்க யார் பேசறது ?
பையன்
:
எங்க அப்பா பேசறேன்

*********


*********
புருசன்
:  
ஆமா ,என்னடி இவ்வளவு நேரமா காலெண்டரை பார்த்துக்கிட்டு இருக்க
மனைவி
:
பல்லி விழும் பலன் பத்தி பார்த்துக்கிட்டு இருக்கேன்

புருசன்
:
கொண்டா நான் பார்க்கிறேன்,ஆமா பல்லி எங்க விழுந்தது ?

மனைவி
:
நீங்க சாப்பிட்ட சாம்பார்ல!!

*********





                              *********


ஒருதடவை மிஸ்டர் எக்ஸும் அவர் மனைவியும் ஆட்டோல போய்க்கொண்டிருந்தார்கள்.  ஓட்டுனர் கண்ணாடியை சரி செய்து கொண்டிருந்தார்.
 மிஸ்டர் எக்ஸ்  கோபமாக:
"ஏய், நீ என் மனைவியைக் கண்ணாடில பாத்துட்டிருக்க.  நீ வந்து பின்னாடி உட்காரு.  நான் ஆட்டோ ஓட்டறேன்."

*********

*********



ஒருதடவை மிஸ்டர் எக்ஸ்   இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார்.  அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத  குறைதான்.   

அவர் கேட்டது   'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.


 *********



கோபுர தரிசனம் கோடி புண்ணியம்            


 


''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''

 


 ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''

 

  *********






மிஸ்டர் எக்ஸ், மிஸ்டர் ஒய்  ரெண்டுபேரும் சொர்க்கத்திற்கு லொகேஷன் பாக்க போனாங்க.  அங்கே  காந்தியும் பிபாஷா பாசுவும்  நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாங்க.

மிஸ்டர் ஒய்   : காந்திக்கு இவ்ளோ மஜாவான தண்டனையா?

மிஸ்டர் எக்ஸ் : தண்டனை காந்திக்கு இல்ல, பிபாஷாவுக்கு.




  *********



அந்த ஜெராக்ஸ் கடைக்காரர் உன்கிட்டே காசே தர வேண்டாம்னு ஏன் சொன்னார் ?''

''  ஒரிஜினல், ஜெராக்ஸ்  இரண்டையும் படிச்சு , ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இருக்கான்னு செக் பண்ணிட்டு காசு தர்றேன்னு சொன்னேன் ,தப்பா ?''



  *********

 

போதும்.   இப்போ சிந்திக்க...

 




*********

 

 

*********

 


விடுமுறை நாட்களிலும் கட்டாயப்பணி : பள்ளி கல்வித் துறை அலுவலக ஊழியர்கள் சங்கம்



அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி கல்வித் துறையில் 20க்கும் மேற்பட்ட இயக்குனரக மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மத்திய அரசின் கல்வி திட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிலும், பள்ளிகளிலும், 15 ஆயிரம் நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.இந்த அலுவலகங்களில், சில ஆண்டுகளாக, ஓய்வு பெறுவோர், பணி மாறுதல் பெறுவோர், விருப்ப ஓய்வு பெறுவோர் மற்றும் ஏற்கனவே உள்ள காலியிடங்களில் தேவையான  ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தேக்கமடைந்த பணிகளைக் கவனிக்க, அரசு விடுமுறை, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஊழியர்களை அலுவலகத்துக்கு வரச் சொல்லி, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் பல ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளிடம் கூட ஒன்றாக இருக்க முடியாமல், மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையில், இன்று (24.09.2015) பள்ளி கல்வி நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட மாநாடு, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் நடக்கிறது.

இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் A.S.ராஜேந்திர பிரசாத், பொதுச் செயலர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: 

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆவணம் சேகரித்தல், பள்ளி வாரியாக புள்ளிவிவரம் சேகரித்தல் உள்ளிட்ட பல பணிகள், ஊழியர்கள் மீது கூடுதலாக சுமத்தப்படுகின்றன. 

எனவே, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை கூடுதலாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விடுமுறை நாட்களில் ஊழியர்கள் அலுவலகம் வர நிர்ப்பந்திக்ககூடாது. அலுவலக பணியாளர்களின் குறைகளைத் தீர்க்க, மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை உயரதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். நிர்வாக மாறுதல் என்ற பெயரில் அலுவலக பணியாளர்களை விசாரணையின்றி, போதிய காரணங்களின்றி ஆணைகள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும். 

இதுகுறித்து மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசு அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, September 23, 2015

IBPS CWE PO/MT Call Letter 2015 - Date of Examination : 04 October 2015

Institute of Banking Personnel Selection (IBPS)

 
 CALL LETTER FOR THE PRELIMINARY ONLINE EXAMINATION(CWE) FOR RECRUITMENT OF PROBATIONARY OFFICER / MANAGERMENT TRAINEES IN PARTICIPATING ORGANIZATIONS.

DATE:  04.10.2015     TIME :  08.00 AM

The Institute of Banking Personnel Selection (IBPS) will be conducting an online examination (Preliminary and Main) for the next common recruitment process for selection of personnel for Probationary Officer (PO)/ Management Trainee (MT) posts.

Click Here to download the Call letter for Preliminary online Examination

பள்ளிக்கல்வித்துறை - விதி எண்.110ன் கீழ் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்

பள்ளிக்கல்வித்துறை - தமிழக சட்டப்பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்

23.09.2015 நாளிட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை,சென்னை-9

 Click Here to Download the pdf file.

pr230915_tnla_010.pdf

வாட்ஸ் அப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு விதிக்கும் வரைவுக் கொள்கை உடனடியாக வாபஸ் - மத்திய அரசு



Govt U turn on Encryption Policy
வாட்ஸ் அப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை 90 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மீறினால், கைதாகவும் வாய்ப்பு உள்ளது' என்ற வரைவு செயல் திட்டத்திற்கு, பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மத்திய அரசு அதை வாபஸ் பெற்றுள்ளது.அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றது.


பொதுமக்கள் மட்டுமன்றி வணிக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள நிறுவனங்களும் இந்த கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வரைவு கொள்கையில் கூறப்பட்டிருந்தது.



இந்தத் தகவலை டெல்லியில் நேற்று  செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தகவல் பரிமாற்றங்களை நாட்கள் அழிக்கக்கூடாது என்று வெளியிடப்பட்ட குறியீட்டுக் கொள்கை வெறும் மாதிரி அறிக்கை மட்டுமே. இது அரசின் கருத்து அல்ல. வாட்ஸ் ஆப்90 , பேஸ்புக் மற்றும் இதர சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பொதுமக்களை கட்டுப்படுத்துவது குறியீட்டுக் கொள்கையின் நோக்கம் அல்ல. சில விஷயங்கள் தவறான புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. எனவே வரைவு கொள்கை வாபஸ் பெறப்படுகிறது. 

 


மத்திய அரசை பொறுத்தவரை சுதந்திரமான சமூக இணையதள வசதியை ஆதரிக்கிறோம். எனினும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்த குறியீட்டுக் கொள்கை வரையறுக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வரைவு கொள்கை தயாரிக்கப்பட்டு மக்களின் கருத்துகள் கோரப்படும்" என்றார் அவர்.
 
Social Media Reflects





" i guess kabutar yug will be back soon #ModiDontReadMyWhatsapp" MAG poked fun at the Encryption policy"

#EncryptionPolicy is like giving you a car, a bungalow, a beautiful wife and you are not allowed to enjoy anything!"

"This Govt wants to control everything, how you using net, what u doing in Whatsapp and next they gonna ask who u sleeping with" - Amit kumar

now will the govt. ask us to tell them what we had for breakfast? policy


This is very "Durbhagyapurna". How long will you keep on taking U-turns. Whose resignation should we ask for?



the IT Minister who referred to it as an "encryption policy" would appear to disagree with you :)

Tuesday, September 22, 2015

Whats App மெசேஜ்களை 3 மாதங்களுக்கு அழிக்கக்கூடாது: புதிய சட்டம் அறிவிப்பு - இணையத்தில் கருத்து கேட்பு

 

Whatsapp, Apple imessage  உள்ளிட்டவற்றின் மெசேஜ்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது, இந்த கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 
Whatsapp போன்ற சமூக ஊடகங்களில் வருகின்ற தகவல்கள் அனுப்பப்படும் இடத்திலிருந்து  செர்வர்களுக்கு சென்று Encrypt செய்யப்பட்டு  குறியீட்டுச் சொற் களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம். உதாரணமாக வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாவே குறியீட்டுச் சொற்களாக(Encryption) மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதனை பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பிய தகவலை படிக்க முடியும். 
இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவு சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல் படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்ட வற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். (The Draft National Encryption Policy wants users to store all encrypted communication for at least 90 days and make it available to security agencies, if required, in text form.) அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்
இந்த புதிய சட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மே 2015 துறைத் தேர்வு முடிவுகள் - Results of Departmental Examinations - MAY 2015


மே 2015ல் நடைபெற்ற துறைத்தேர்வுகளுக்கான முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
Click Here to View and download the TN Dept Exam May 2015 Results.


Monday, September 21, 2015

அக்டோபர் 8ல் பள்ளிகளை மூடி போராட்டம் - ஜாக்டோ , பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

பங்களிப்பு பென்ஷன் திட்டம்(CPS) ரத்து உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அக்டோபர் 8ம் தேதி   தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் ஏ.மாயவன் தெரிவித்தார்.

சிவகங்கையில், அவர் கூறியதாவது: 

முதல்வர் ஜெ., சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார். இன்று வரை ரத்தாகவில்லை. எனவே பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆசிரியர்கள், பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என அவர் கூறினார்.

வலையில் சிக்கிய மீன்கள் (Fishing on the net)

Thanks to: my Google+ friends.












Saturday, September 19, 2015

ஒரு சித்திரம் ஒரு சிந்தனை







கோஸ்ட்டா ரிகா(costa-rica) வர்ணமேகங்கள்



வானவில் போன்று வண்ணமயமாக காட்சியளித்த மேகம், கோஸ்ட்டா ரிக்கா (Costa Rica) நாட்டு மக்களை ஆச்சர்யத்திலும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள இயற்கை அழகு மிக்க குடியரசு நாடான கோஸ்ட்டா ரிக்காவில் அண்மையில் வண்ண மயமான மேகங்கள் ஒன்று திரண்டு காட்சியளித்து அங்குள்ள மக்களை ஆச்சர்யப்படுத்தியது


அந்நாட்டு மக்கள் அந்த மேகத்தை அபோகாலிப்டிக் மேகங்கள் என்றும், கடைசி காலத்தை பிரதிபலிக்கும் மேகங்கள் என்றும் கூறிவருகின்றனர்.



இந்த வண்ணமயமான மேகத்தை கோஸ்ட்டா ரிக்காவின் பல்வேறு நகரங்களில் தோன்றியது. மக்கள் இதனை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

பலர் இந்த மேகத்தை கடவுளின் சாயல் என்றும் கூறி வருகின்றனர்.  


Friday, September 18, 2015

அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாள் தொடர் 'லீவு


அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது. 

அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌ்ளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள். ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து நாட்களுமே அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால், சொந்த வேலையாக அங்கு செல்ல வேண்டியவர்கள் செல்லத் தேவையில்லை.

சுற்றுலா: பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை என்பதால், குழந்தைகளும் விடுமுறையில் இருப்பர். எனவே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோரும் இப்போதே திட்டமிட்டால், பயணம் மகிழ்ச்சியானதாக அமையும்.

வங்கிகள்: வங்கிகளுக்கும் இதே கதை தான். நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை என்பதால், அவர்களுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்றால் வர்த்தகர்களும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, 24ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து வங்கிகள் இனிமேல் தான் அறிவிக்கும்.

தொடர் விடுமுறை என்றால் ஏடிஎம்-களிலும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, அதற்கேற்றாற்போல் பொதுமக்கள் திட்டமிடுவது நல்லது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் B.Ed படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (18.09.2015)  வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், B.Ed மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் செப்- 28ம் தேதி நடக்கிறது. லேடி வெலிங்டன் கல்லுாரி மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. 

மொத்தமுள்ள 1800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 

தரவரிசை பட்டியல் இன்று(18.09.2015)  மதியம் அல்லது மாலை 4.00 மணியளவில் http://www.ladywillingdoniase.com மற்றும் http://www.tnteu.in/ இணையதளங்களில் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

Wednesday, September 16, 2015

+2 தனித்தேர்வு செப் -18 முதல் Hall Ticket ( XII PRIVATE EXAMINATION SEP-2015 HALL TICKET)

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு,  28.09.2015 அன்று துவங்கி, அக்டோபர் 6ல் முடிவடைகிறது. 
+2 தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை 18.09.2015  முதல்  www.tndge.in   இணையதளத்தில் செய்துக்கொள்ளலாம் என தேர்வுத்துறை தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

Tuesday, September 15, 2015

அறிஞர் அண்ணா ( C. N. Annadurai )


(15.09.1909 - 03.02.1969)
 
செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, 
அது கொண்டவனையும் அழித்துவிடும், 
சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்.
 பணம் பெட்டியிலே தூங்குகிறது...
 பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்...
 ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், 
இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்?”

***

திருமண வீட்டிலே கொடுக்கின்ற சந்தனமானாலும், உடலிலே பூசி, அது நன்றாக உலர்ந்து, கொஞ்சம் அரிப்பு எடுக்க ஆரம்பித்தால் வீட்டிலே வந்து கழுவுகிறோமே, அது சந்தனம்-மணமிருக்கின்றது. அன்போடு கொடுத்தார்கள். உபசாரத்திற்காகக் கொடுத்தார்கள் என்றாலும் பூசி உலர்ந்து விட்டால் மறுபடியும் துடைத்து விடுகின்றோமே சந்தனத்தையே துடைக்கின்றோம் என்றால், வெள்ளைக்காரன் பூசிவைத்த அந்தச் சேற்றிலே இன்றைய தினம் நின்று கொண்டு “இது எவ்வளவு வாசனை தெரியுமா, இதிலேதான் எனக்குச் சமதர்ம மணம் கிடைக்கின்றது” என்று என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் சொன்னால், நான் அவர்களுடைய நாசிக் குற்றத்தைப் பற்றிப் பரிதாபப்படுவதா, அல்லது அவர்களுக்குத் திடீரென்று சேற்றிலே தோன்றி விட்ட காதலைப்பற்றிப் பச்சாதாபப்படுவதா!

 ***
நாட்டு மக்களுக்கு என்னுடைய பாஷை புரிந்து விட்டது அதை இனி யாராலும் அணைக்க முடியாது.

நாட்டு
மக்கள் அந்தப் பகுதியிலே திரும்புகின்றார்கள் என்ற உடனே, கை தட்டி, கம்யூனிஸ்டுகள்அங்கே போகாதே அது ஆபத்தான பாதை, என் பின்னோடு வா, என் பின்னோடு வாஎன்று அழைக்கின்றார்கள். எங்கே ஐயா? என்று கேட்டால் டெல்லி வரையிலே போகலாம் என்கிறார்கள். நான் தமிழ்நாட்டு மக்களை, கொல்லிமலையைப் பாருங்கள், குடகு மலையைப் பாருங்கள், கொச்சி மலையைப் பாருங்கள், பாலாற்றைப் பாருங்கள், காவேரியைப் பாருங்கள், வைகையைப் பாருங்கள், தாமிரபணியைப் பாருங்கள் என்கிறேன். காங்கிரஸ்காரர்களே, தேவலோகத்திலே ஓடுகின்ற ஆற்றைப் பாருங்கள் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகளோ கங்கைக்கரைக்கே வா என்று அழைக்கின்றார்கள். காலிலே வலிவு இருக்கின்றதா? கருத்து அதற்கு இடம் தருமா?

ஆகையினால்தான்
பழந்தமிழகம் எப்படி டெல்லியின் பிடிக்குக் கட்டுப்படாமல், எந்த ஆதிகத்திற்கும் உட்படாமல், யாரையும் ஆதிக்கத்திற்குக் கொண்டு வராமல், மற்றவர்களை மதித்து மற்றவர்களாலே மதிக்கப்பட்டு, மற்றவர்களை நண்பர்களாகப் பெற்று, மற்றவர்களுக்கு அறிவை ஊட்டி, மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டு, மற்றவர்களிடத்திலே வியாபாரம் நடத்த இடம் கொடுத்து, எப்படி உரிமை மிக்க நாடாக வாழ்ந்ததோ, அதைப்போல வாழ்வதற்கு வழி இருக்கிறது, வகை இருக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது.

 ***