Tuesday, June 16, 2015

நொடியில் கணிதம் - Maths Made Easy


பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் கணிதம் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள்  ஏ.சி.பிரபு, சாமி சுரேஷ்குமார் ஆகிய இருவரும்.

பிரபு சென்னை லயோலா கல்லூரியில் கணிதவியலில் M.Sc.,M.Phil பட்டம் பெற்றவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் Ph.D செய்துக் கொண்டிருக்கிறார். சுரேஷ்குமார் B.Sc கணிதத்தில் கோல்டு மெடல் வாங்கியவர். 
 
இருவருமே நூற்றுக் கணக்கான அரசுப் பள்ளிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் கணிதத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். 


என்ன கற்பிக்கிறார்கள்? 
 
“பெருக்கல் வாய்ப்பாட்டை ரொம்ப எளிதாக மாணவர்கள் மனதில் பதிய வைக்கிறோம்! 2 முதல் 19 ஆம் வரையிலான ஒவ்வொரு பெருக்கல் வாய்ப்பாட்டுக் கணக்குக்கும் 2 நொடியில் போடக்கூடிய மனக்கணக்கு சூத்திரங்கள் இருக்கின்றன. அதைத்தான் சொல்லிக்கொடுக்கிறோம்!” என்கிறார்கள் இந்த இளைஞர்கள். 

இதற்காக Maths Made Easy என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார்கள். 

புதுக்கோட்டையில் எளிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் பிரபு (Cell: 9629483526). சென்னையில் வசித்தபோது காசிமேடு, வண்ணாரப் பேட்டையில் ஏழை எளிய மாணவர்களுக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்துள்ளார். 

பிறகு, அரசுப் பள்ளிகளைத் தேடிச்சென்று கணக்கு கற்றுக்கொடுக்க தொடங்கியிருக்கிறார். கோவையில் பி.எச்டி படிக்குபோதும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி கற்பிப்பதை விடவில்லை. அப்படி ஒரு டியூசன் சென்டரில் அறிமுகமாகி நண்பரானவர்தான் சுரேஷ்குமார். பிறகு, இருவரும் இணைந்து மாணவர்களைத் தேடிச் சென்று கணிதம் கற்பிக்க ஆரம்பித்துள்ளனர். 

நமது கல்வி முறையை இன்னமும் எளிதாக்காமல் கல்வித் தரத்தில் உலக அளவில் முதல் 10 இடங்களில் நம்மால் இடம்பிடிக்க முடியாது. அதற்கான சிறு முயற்சியையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்கின்றனர் இந்த இளைஞர்கள். 

சரி இதை ஏன் நாம இப்போ இங்க போஸ்ட் பண்ணியிருக்கோம்?  'கணித ஆசிரியர்கள்' இவங்களை யூஸ் பண்ணி உங்க மாணவர்களை ஊக்கப் படுத்துவீங்கன்னு தான்.

2015-16ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் விவரம்

Sunday, June 14, 2015

பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை! பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு(?)


'தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமலுக்கு வரும்' என்று Nakkeran, Dinamalar ஆகிய இணையத்தளங்களிலும், WhatsAppலும் நேற்று தகவல் பரவியது.

இத்தகவல் 'வதந்தி' என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளதாக தற்போது செய்தி அறியப்பட்டுள்ளது. இது நிஜமா? இல்லை வதந்தியா? என ஓரிரு நாட்களில் தெரியவரும் என்பதால் நண்பர்கள் யாரும் இப்போதைக்கு  சந்தோசப் படவோ  அல்லது துக்கப்படவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

+2 SPECIAL SUPPLIMENTARY EXAM , JUNE 2015 - HALL TICKET FROM 15.06.2015


பிளஸ் 2 -ஜூன் சிறப்புத் தேர்வுக்கு   15.06.2015 முதல் ஹால்டிக்கெட் 


ஜூன் 22 முதல் நடைபெற உள்ள பிளஸ் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் நாளை (15.06.2015) முதல் www.tndge.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என  அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

www.tndge.in இணையப் பக்கத்தில்  Higher Secondary Exam June/July 2015 - Private Candidate - Hall Ticket Print out  என்று தோன்றுவதை கிளிக் செய்து மார்ச் தேர்வு பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

Saturday, June 13, 2015

ஜூன் 24 முதல் பள்ளிகள் துவங்கும் நேரம்: காலை 9 மணி - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24-ந் தேதி முதல் காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. 
இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. 
ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பன்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Friday, June 12, 2015

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 19

 
முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

விண்ணப்பித்த அனைவருக்கும், ’ரேண்டம்’ எண் தரப்பட்டுள்ளது. www.tnhealth.org என்ற இணையதளத்தில்  பதிவு எண் , பிறந்த தேதியை பதிவு செய்தால், ’ரேண்டம்’ எண் விவரம் அறியலாம். 

இந்த ஆண்டில் 20வது அரசு மருத்துவக் கல்லூரியாக, 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்துள்ளது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,655 ஆக உயர்ந்துள்ளது.

இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதம், 2,557.

அரசு கல்லூரியில், 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில்  780 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,432 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. ஜூன் 15ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 19ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். முதற்கட்ட கலந்தாய்வில், சுய நிதி கல்லூரிகளின், பி.டி.எஸ்., இடங்கள் இடம்பெறாது என மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.

ஜூன் 15ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் பட்டியல் ஜூன் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மார்ச் 2015 பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 8,82,260.  

இதில் விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்தவர்கள் 1,00,566.

இவற்றில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் 2,835

மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள் 3,502 

மதிப்பெண் மறுகூட்டலில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 696. 

மறுமதிப்பீட்டில் மாற்றம் உள்ள தேர்வர்களின் எண்ணிக்கை 2,782.  

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற இணையதளத்தில் 15.06.2015 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும்.  இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.


மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் ஜூன் 16ம் தேதி காலை 10.00 மணி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.

Broadcom Ethernet Driver for Win Xp 32 Bit Lenovo System





Click the  link to Download the Driver file

Copy this to C:\    Drive then Extract it.


  1. Right Click the My Computer Icon on the Desktop
  2. Click Properties.
  3. Click Hardware Tab
  4. Click Device Manager.
  5. Expand Other Devices
  6. Right Click the Ethernet Controller and  click the Uninstall option.
  7. After Uninstalling the Yellow Question Mark icon, 

Right Click Other Devices option and select, Scan for Hardware Changes.


  1. Now Found New Hardware Wizard appears on the Screen.
  2. Select the second Radio Button and then Click Next.
  3. Click Browse,   then Browse for Folder.
  4. Select the folder in C:\ drive   that contain your Driver Files
  5. Click ok then click next
  6. Now the Ethernet Card is installed in your computer. 

World Day Against Child Labour 12 June

NO To Child Labour-YES To Quality Education 
(2015 Theme) 

The International Labour Organization (ILO) launched the World Day Against Child Labour in 2002 to focus attention on the global extent of child labour and the action and efforts needed to eliminate it.



Each year on 12 June, the World Day brings together governments, employers and workers organizations, civil society, as well as millions of people from around the world to highlight the plight of child labourers and what can be done to help them.


Around the world, large numbers of children are engaged in paid or unpaid domestic work in the home of a third party or employer. These children can be particularly vulnerable to exploitation.


Their work is often hidden from the public eye, they may be isolated, and they may be working far away from their family home. Stories of the abuse of children in domestic work are all too common.


World Day 2015 calls for:
  • free, compulsory and quality education for all children at least to the minimum age for admission to employment and action to reach those presently in child labour.
  • new efforts to ensure that national policies on child labour and education are consistent and effective;
  • policies that ensure access to quality education and investment in the teaching profession.

வறுமையில், அப்பாவோ , அம்மாவோ  இல்லாதவங்க, அப்பா சரியில்லாதவங்க, படிக்காத அப்பா,அம்மா இருக்குற பரம ஏழைக்குழந்தைங்க, சரியான வழிகாட்டுதல் இல்லாம, சமூகத்துல எப்படி போராடி ஜெயிக்கணும்'னு வகை தெரியாம.இருக்குற பெற்றோருக்கு பிறந்தவங்க, குடும்பமே வேலை செஞ்சாலும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே கூலி வாங்குற அடிமைத் தொழிலாளிங்களோட பசங்க   இப்படி எல்லாம் இருக்குற சின்னப் பசங்க வேலைக்கு போகாம என்ன பண்ணுவாங்க.

மக்கள்'னா  பெரிய பணக்காரன், பணக்காரன், நடுத்தரம், ஏழை, பரம ஏழை, கொத்தடிமைகள்'னு எல்லோரும் தான் நாட்டுல இருக்காங்கன்னு புரிஞ்சு, ஓட்டு வாங்கி ஆட்சி அமைக்குறவங்கதான், இப்படி சின்ன வயசுலேயே பசங்க படிக்காம, கொத்தடிமை வேலைக்கு போகுறதை  தடுக்கணும். தனி நபர்களும், சேவை அமைப்புகளும் எவ்வளவு பேரை காப்பாத்த முடியும்?

இவங்க வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை என்னன்னு கண்டறிஞ்சு, அவங்க பெற்றோரோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவி செஞ்சா அவங்களே படிக்கப் போவாங்க. அரசாங்கங்கள் இதைப் பத்தி கவலைப் படுமா?

அடுத்த வருஷம் இதே ஜூன் 12ல், குழந்தை தொழிலாளர்கள் எவ்வளவு பேர் குறைஞ்சு இருக்காங்கன்னு UN புள்ளி விவரம் தரும்போது தெரியும்.


ff

Thursday, June 11, 2015

மருத்துவ படிப்புகளுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, ’ரேண்டம் எண்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து, 20 அரசு மருத்துவ கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. 2,655 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. 

அகில இந்திய ஒதுக்கீடாக, 15 சதவீத இடங்கள் போக, மற்ற இடங்களுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், கலந்தாய்வு நடத்தி மாணவரை சேர்க்க உள்ளது. இதற்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ’ரேண்டம் எண்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பலர் ஒரே மாதிரியான, ’கட் - ஆப்’, பிறந்த தேதி, பாடவாரியாக மதிப்பெண் என, எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. 

அப்படியான சூழலில், அவர்களில், யாரை முன்னிலைப்படுத்துவது என்பதற்கான, ’ரேண்டம்’ எண், இன்று வெளியிடப்பட்டது. பிளஸ் 2 மறு கூட்டலுக்கான முடிவுகள் குறித்த, ’சிடி’ இன்று, பள்ளிக் கல்வித் துறை தர உள்ளது. இதைத் தொடர்ந்து, 14ம் தேதி, தர வரிசை பட்டியலை வெளியிடவும், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வை நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

‘ரேண்டம் எண்’ அறிந்துகொள்ள: http://www.tnhealth.org/

VANAVIL AVVAIYAR SOFTWARE FOR WINDOWS XP

 Click the link Below to download Vanavil .msi for Windows XP


https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dbWtoMGRScnJUcEU/view?usp=sharing



Click the link below to download  Vanavil .msi, Font, Settings- Installation Guide


https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dS3hyaVNiOUZ5R2s/view?usp=sharing  




உங்கள் கணினியில்  Office 2007, Office 2010 இல்லை என்றாலும்  .docx , .xlsx பைல்களை பார்வையிட முடியும்.

For Word Files Download it and install.  ( TMViewerSetup.exe , Freeware, 5.2 MB only)

https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dSE1rYkl5ZzJVZ0E/view?usp=sharing

For Excel files Download it and install   (  PMViewerSetup.exe ,  Freeware , 4.20 MB only)

https://drive.google.com/file/d/0B_yUxWsnFT1dakQyTFRDT01NTVE/view?usp=sharing

Wednesday, June 10, 2015

Kendriya Vidyalaya Sangathan Announces Direct Recruitment for Teaching and Non-Teaching posts

Kendriya Vidyalaya Sangathan
केÛġȣय ͪवɮयालय संगठन

Filling up the Officers Cadre, Teaching, Non Teaching  Post for the Year's  2014-15  AND 2015-16.

Adv.No: 10


Candidates are required to apply online through the KVS website www.kvsangathan.nic.in    or  https://jobapply.in/kvs/    at the link available on this site. No other means/mode of submission of applications will be accepted. The schedule of ONLINE registration is as follows



Commencement of Online Registration on KVS website  www.kvsangathan.nic.in  or  https://jobapply.in/kvs/
23.5.2015
Last Date for Online Registration
22.6.2015 


for more details, click                       http://jobapply.in/KVS2015/

for Advertisement Notice, Click    Adv-Eng.pdf


நர்ஸ் தகுதித் தேர்வு - 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

 

 அரசு மருத்துவமனைகளில்  தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள 451 ஆண் நர்ஸ்கள் உட்பட  7243 நர்ஸ்கள் பணியிடங்களுக்கு  40 ஆயிரம் பேர்  ’ஆன் லைன்’ மூலம் விண்ணப்பித் துள்ளனர்.  இதற்கான மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு ஜூன் 28ம் தேதி நடக்க உள்ளது.


இதற்கான பணிகளில்  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக  நர்ஸ் பணிக்கு  அரசு தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Tuesday, June 9, 2015

ஜூலை 1 முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்


தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஜூலை 1 முதல், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உட்பட ஆவணங்களை முடக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிதாக, ஹெல்மெட் வாங்கி, ரசீதுடன் தாக்கல் செய்தால் தான், ஆவணங்களை திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணியாததால், விலை மதிக்க முடியாத, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிய வேண்டும் என, சட்டம் மற்றும் தீர்ப்புகள் இருந்தும், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. சாலைகளில் பார்க்கும் போது, ஹெல்மெட் அணியாமல், வாகனங்களில் செல்வதை பார்க்க முடிகிறது.கடந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில், 6,419 பேர், ஹெல்மெட் அணியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினசரி என கணக்கிட்டால்,17 பேர் இறக்கின்றனர்.


  1. 'ஜூலை, 1ம் தேதி முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட, வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, வரும், 18ம் தேதிக்கு முன், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  2. இந்திய தர நிறுவனம் சான்றளித்த ஹெல்மெட்டை ரசீதுடன் தாக்கல் செய்தால், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.

  3. இந்த உத்தரவை, தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வில்லை என்றால், வரும், 19ம் தேதி, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

  4. ஹெல்மெட் அணிந்து செல்கின்றனரா என்பதை கண்காணிக்க, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, உள்துறை மற்றும், டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

  5. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, விசாரணைக்குப் பின், உரிமத்தை ரத்து செய்யலாம்.

  6. பக்கவாட்டில் பார்க்கும் வகையில், ஹெல்மெட் வடிவமைப்பது குறித்து, மத்திய அரசு கவனிக்க வேண்டும்.

  7. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, எவ்வளவு வழக்குகள் தாக்கல் ஆகிஉள்ளன என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

  8. ஹெல்மெட் கண்டிப்பாக அணிவதை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

  9. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

How to Avoid Road Accident while Driving

கனவுகளை நொடிப்பொழுதில்  தகர்க்கும்  
 சாலை விபத்துகளை தவிப்பது எப்படி? 
(How to Avoid Road Accident) 
Re-published

நேரம் நள்ளிரவை  நெருங்கிய பிறகும்   அன்பிற்குரிய கணவரோ, அப்பாவோ, அண்ணனோ , தம்பியோ  வீடு திரும்பாத போது, அவர்களின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் number you have called is not reachable என்று வந்தால் மனசு எப்படி பதறி துடிக்கும்?

 பள்ளிக்கு சென்ற அக்கா, தங்கை, தம்பி வீடு திரும்ப நேரம் ஆனாலும், வெளியூருக்கு சென்ற அப்பா, அம்மாவை  தொடர்பு கொள்ள இயலாதபோதும், வேலைக்கு சென்ற மகன் அல்லது மகள் உரிய நேரத்தில் திரும்பி வராத போதும் ஒருவரது மனம் எவ்வளவு பாடுபடும்?

பதற்றமும், பயமுமாய் நாம்  அவர்களை தொடர்பு கொண்டு பேச முயன்றுக்  கொண்டே இருப்போம்.  ஏன்?

Accident  என்னும்  வார்த்தையின் தாக்கத்தை நாம் தினந்தோறும்  செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள் மூலமாகவும், சில நேரங்களில் நேரில் பார்த்தும் அனுபவித்து இருக்கிறோம்.
  • பாதுகாப்பில்லாத  சாலை போக்குவரத்தின் கசப்பான உண்மைகள் என்ன? 
  • விபத்துக்கான காரணிகள் யாவை?
  • பாதுகாப்பான பயணத்திற்கு நம் எதை செய்ய வேண்டும் ?
  • எதை செய்யக் கூடாது?
பார்ப்போம் வாருங்கள்.

2014ம்  ஆண்டில்  தமிழ்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 17,000 பேர்  இறந்துள்ளனர். 

இருசக்கர வாகன விபத்துகளில் இறந்தவர்கள்  :   4500 பேர் 
கார் , தனியார் பஸ்களால் இறந்தவர்கள்               :   3700 பேர் 
லாரி மோதி  இறந்தவர்கள்                                           :   3000 பேர் 
அரசு பஸ் மோதி இறந்தவர்கள்                                  :   1200 பேர் 
பிற வாகனங்கள், ரயில், பிற விபத்துகளில்         :    4600 பேர் 

 விபத்துக்கான காரணிகள் 

  1. வாகனம் ஓட்டுபவர்களின்  கவனக் குறைவு (அ ) கவனச் சிதறல்  40%
  2. அசுர வேகம் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுதல்   30%
  3. செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுதல்  20%
  4. குறுகலான சாலை 
  5. மழையால் ஓரங்கள் அரிக்கப்பட்டு பள்ளமான சாலைகள் 
  6. ஆபத்தான வளைவுகள் 
  7. வேகத்தடையை  கவனிக்காமல் செல்வது 
  8. சாலையோர ஆக்ரமிப்புகள் 
  9. கண்ட இடங்களில் வண்டிகளை Park செய்து  Blind Spot களை  உருவாக்குதல்
  10. சாலையின் குறுக்கே மாடுகள், நாய்கள் வருவது
  11. ஹெல்மெட் அணியாமல் ஒட்டுவது 
  12. சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுதல்
  13. பராமரிப்பில்லாத வாகனங்களை ஓட்டுதல் 
  14. ஓய்வில்லாத நீண்ட தூரப் பயணம் 
  15. சாலை விதிகளை மதிக்காமல் நடப்பது.
 விபத்தை தவிர்க்க  செய்யவேண்டியவை  (Do's)


  1. வாகனத்தை  எடுக்கும் போது  ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா? பிரேக் சரியாக இருக்கிறதா? டயர் சரியாக உள்ளதா? லைட் சரியாக எரிகிறதா என்பதை கவனியுங்கள்.
  2. சாலை விபத்துக்களில் ஆண்கள் தான்  சிக்குகிறார்கள். அல்லது  ஆண்களால் தான்  விபத்துக்கள் ஏற்படுகின்றன. உங்களை  ஒருவர் முந்திச் செல்வது  உங்களை Tease செய்வது போல் இருக்கிறதா?  ஆனாலும் நீங்கள்  ஆக்சிலரேட்டரை வேகமாக அழுத்த வேண்டாம். நான் தான் முன் செல்ல வேண்டும் என்ற வேக உணர்வை அப்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.                            
  3. நீங்கள் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது உங்கள் முன்னே இருக்கும் சாலையை Scan செய்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு முன்னாலும், பக்கவாட்டிலும், உங்களுக்கு பின்னாலும். Blind Spot எனப்படும் சாலையின் மறைக்கப் பட்ட பகுதிகளில் அதிக கவனத்துடன் இருங்கள் .
  4. சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் வேகத்தை குறைக்க வேண்டியிருப்பின் உடனடியாக Flashers அல்லது Signal Indicatorகளை  ON  செய்யுங்கள். 
  5. மழையில் வாகனம் ஓட்டுகிறீர்களா? அப்படியெனில் வாகனங்களில் இருந்து கசியும் எண்ணெய் படலத்துடன் மழை நீர் கலந்து வழுக்கும் தன்மையுடைய (Slippery Surface from water & Oil contact) பரப்புகளை உருவாக்கி இருக்கும். எனவே வேகத்தை குறையுங்கள். கவனமாக செல்லுங்கள்.
  6.  வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள். முக்கியமாக Hands Free Set களையும் பயன்படுத்த வேண்டாம். அதிக அளவில் விபத்து ஏற்படுவதற்கு வாகனம் ஓட்டும் நேரத்தில் ஏற்படும் கவனச்சிதறலே முக்கிய காரணம்.கவனச் சிதறல் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் செல்போன் உள்ளது.. 
  • வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது (ஹேண்ட்ஸ் ஃப்ரீ போட்டிருந்தாலும்) அல்லது எஸ்.எம்.எஸ். டைப் செய்வது போன்றவை கவனத்தைத் திசைதிருப்புகின்றன.

  •  கவனச்சிதறல் ஏற்படுத்தி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன்.
  •  எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் ஐந்து நொடிகளுக்கு, கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளி போதுமானது.
    7. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சரியான முறையில் Lane  
        Change செய்யுங்கள்.

    8. வளைவுகளில் திரும்பும் போதும், வண்டியை சாலையிலேயே நிறுத்த  
        நேரிட்டாலும் Indicatorகளை  பயன்படுத்துங்கள்.

    9. கண்ட இடங்களில் வண்டியை பார்க் செய்ய வேண்டாம். அதே போல நாம் 
        எதிர்பாராத இடங்களிலும் வண்டிகள்  பார்க் செய்யப் பட்டிருக்கும் 
        என்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள்.  சாலையோரம் நிறுத்தப் 
        பட்டிருக்கும் லாரி அல்லது பிற வாகனங்களின் மீது மோதிய
        விபத்துக்களை நாம் பார்த்திருக்கிறோம்.

   10. உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஒட்ட வேண்டாம்.

   11. கோபம் அல்லது  குழப்பத்துடன் வண்டியை ஓட்டுவதை தவிர்க்கவும் .

   12. வண்டியை ஓட்டும் போது பின்னால் இருக்கும் நண்பர்களுடன் 
         பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவதை தவிர்க்கவும்.

   13. தூங்காமல் வண்டியை ஓட்டுவது, நீண்ட  தூரம் தொடர்ச்சியாக 
         வண்டியை ஓட்டுவது  கூடாது.
  
   14. அதிகாலை  2 மணி முதல் 6 மணி  வரையும், மதிய உணவிற்கு பின் 
         மாலை 2 மணி முதல் 4 மணி வரையும்  கவனத்துடன்  வண்டியை 
         ஒட்டவும் .

  செய்யக் கூடாதவை (Dont's)
  1.  குடித்துவிட்டு  வாகனம் ஓட்டவேண்டாம் 
  2.  புகை பிடித்துக் கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம் 
  3.  நழுவும் அல்லது கீழே விழும் பொருட்களை வைத்திருக்கவேண்டாம். (பாதுகாப்பாக வைக்கவும் )
  4. முன்னே செல்லும் வாகனத்தை ஒட்டியபடியே (Tailgate) செல்ல வேண்டாம். குறைந்தபட்சம் முன்னே செல்லும் வாகனத்தின் பின்புற டயர்கள் தெரியும் அளவுக்காவது செல்லவும்.
  5. Blind Spot களில் வேகமாக செல்ல வேண்டாம் 
  6. பெரிய Truckகளை  முந்திச் செல்ல அவசரப் படவேண்டாம்.
  7. Signalகளை  கவனிக்காமல் செல்ல வேண்டாம்.
  8. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு பயணிக்க வேண்டாம்.
  9. Helmet அணியாமல் செல்லவேண்டாம்.
  10. உங்களுக்கு அறிமுகம் இல்லாத எந்த சாலையிலும் வேகம் வேண்டாம்.
சாலைவிதிகளை மீறி வாகனம் ஒட்டுபவர்களுக்கான சட்டத்தின் தண்டனைகள் 


  •  டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ரூ.500 அல்லது மூன்று மாதங்கள் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.  
  • வாகனக் காப்பீடு இன்றி வாகனம் ஓட்டினால், ரூ.1000 அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும்.
  • சிறுவர்கள் மோட்டார் வாகனம் ஓட்டினால், ரூ.500 அல்லது மூன்று மாதம் சிறை அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
  • ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.100 அபராதம்.
  •  வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்.
  •  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ரூ.2,000 அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
  •  மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தினால், காப்பீடு பலன் எதுவும் கிடைக்காது.
  •  வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால், ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும்.                                        
                                                                                                                            - Admin

How To Make Correction's in Your AADHAAR ID ?

How To Make Corrections Like Your 
Name, Date of Birth, Address, Phone No of Your AADHAAR ID? How to print your Updated AADHAAR ID?
Re-Published


உங்களோட AADHAAR ID ல் 
  பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண் 
இப்படி ஏதாவது  திருத்தம் செய்யனுமா?

Online ல திருத்தம் செய்யணும்னா இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க 
(For online update click the line below)


Postal மூலமா திருத்தம் செய்யனும்னா கீழே இருக்குற இந்த படிவங்களை டவுன்லோட் பண்ணுங்க. படிங்க. fill பண்ணுங்க. அனுப்புங்க.
(For update through post, download the form and instruction. Read, Fill and Send it.) 



நீங்க successful  ஆ update பண்ணின பிறகு ( either online or postal ) உங்களோட Registered மொபைல் நம்பர்ல உங்களுக்கு  
Acknowledgement வரும். 
(After Successful Updation, You Get The Acknowledgement on your Registered  Mobile Number)


Acknowledgement  வந்த பிறகு நீங்க https://eaadhaar.uidai.gov.in/eaadhaar/ லிங்க் ல போயிட்டு உங்களோட updated  ஆதார் ID ஐ டவுன்லோட் செய்யலாம். Download செய்யப்பட்ட PDF File ஐ Open பண்ண Pincode ஐ  Password Field ல கொடுத்து பிரிண்ட் பண்ணுங்க.
(After Receiving the Acknowledgement, Go to the above link now you get the following screen. give the proper details, get the OTP password to your phone-enter the OTP-download- open the pdf with your pincode. thats all)