Monday, August 10, 2015

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில்



அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
 

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.
 

கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது.
 

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும்.
 

இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன.
 

இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார்.

புகைப்பழக்கம் தடுக்கும் சூப்பர் பாக்டீரியா கண்டுபிடிப்பு



அமெரிக்காவின் ஸ்கிரிப் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். அதன் பெயர் சூடோமோனாஸ் புடிடா. இது புகையிலை விளையக் கூடிய மண்ணிலிருந்தே பெறப்படுகிறது.
 

இந்த பாக்டீரியா மற்ற பாக்டீரியாவிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இவை புகைப்பிடிப்பதால் மனிதனின் ரத்தத்தில் கலக்கும் நிகோடினையே உண்டு வாழக் கூடியவை. ரத்தத்தில் கலந்த நிகோடின் மூளையை சென்றடையும் முன்பே இந்த பாக்டீரியாக்கள் நிகோடினை தின்று விடும். அதனால், புகைப்பிடிககும் பழக்கத்திற்கு மூளை அடிமையாக்கப்படுவது குறையும். இந்த வகை பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய நிகோடினையும் கட்டுப்படுத்துவதையும் கண்டு பிடித்தனர்.



இதை நிரூபிக்க ஒரு எலியின் ரத்த மாதிரியில், ஒரு சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடினை கலந்தனர். தொடர்ச்சியாக இந்த பாக்ட்டீரியாக்களைச் சேர்த்ததில் ரத்தத்தில் இருந்த நிகோட்டினை 10 நிமிடங்களிலேயே காலி செய்தது.



சிகரெட் பிடிப்பவர்கள் தங்கள் மனோ பலத்தால் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்தாலும். இவ்வகை பாக்டீரியாக்கள் மிக உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Friday, August 7, 2015

கொங்கு தேர் வாழ்க்கை



                       கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

          காமம் செப்பாது, கண்டது மொழிமோ

          பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

          செறி எயிற்று, அரிவை கூந்தலின்

          நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

                                                                                - இறையனார், குறிஞ்சித்தினை
  
 

மயிலைப் போல மென்மையானவள், 
அழகிய முத்துப் பற்களை உடையவள்,
என் இதயத்தில் பொருந்தி, 
என்மீது நட்பும் உரிமையும் கொண்டவள்
என் உயிரைக் கவர்ந்த,
என்னவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல
நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?
 

TNPSC: Maternal and Child Health Officer - பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

குழந்தைகள் சுகாதாரத்துறை அதிகாரி (Maternal and Child Health Officer) உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கான பணியிடங்களை TNPSC நியமனம் செய்யவுள்ளது.



மொத்த காலியிடங்கள்
89
கல்வித்தகுதி
B.Sc Nursing or B.Sc Public Health Nurse
வயது வரம்பு
SC/ST/MBC/BC/BCM: வயது வரம்பு இல்லை
மற்றவர்களுக்கு 30 வயது 
ஊதிய விகிதம்
Rs.9300 - 34800 + 4700 GP
விண்ணப்ப கட்டணம்
ரூ.175/-
தேர்வு முறை
Paper 1: 300 Marks
Paper 2: 200 Marks
Interview:  70 Marks
விண்ணப்பிக்க கடைசி நாள்
20.08.2015
தேர்வு நாள்
20.09.2015 FN & AN



மேலும் விவரங்களுக்கு
http://www.tnpsc.gov.in/notifications/11_2015_not_eng_mcho.pdf

Thursday, August 6, 2015

Zen Parables


 Zen  Parables 
 
அற்புதம் 


ஜென் குரு பாங்கெய் அவர்கள்  ஆலயத்தில் மக்களுக்கு அருளுரைகளை வழங்கி வந்தார்.

அவரைக் காண வந்த  ஷின்ஷு போதகர் ஒருவர்,  ஜென் குருவின் அருளுரைகளைக் கேட்கத் திரளாக மக்கள் வந்து கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார்.
 
ஜென் குருவிடம் வாதம் செய்து அவரைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பது அவரது எண்ணம்.

ஜென் குரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஷின்ஷு போதகர் பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஜென் குரு தனது பேச்சை நிறுத்தி  அவரிடம்  "உங்களுக்கு என்ன பிரச்சினை என நான் தெரிந்து கொள்ளலாமா ?" எனகேட்டார்.

ஷின்ஷு போதகர் குருவை நோக்கி, "முன்பொரு நாள், எங்கள் குருவானவர் ஒரு கரையிலும், அவரது சீடர் எதிர்க் கரையிலும் நின்றபோது ஓர் அற்புதம் புரிந்தார். 

கையில் ஒரு எழுதுகோலுடன் எங்கள் குரு இக்கரையில் இருக்க , அவரது சீடர்  எதிர்க்கரையில் தாளினை வைத்திருந்தார்.

அப்போது எங்கள் குருவானவர் "அமிதா" என்ற புனித நாமத்தை வானத்தின் வழியே எழுதி அனுப்பினார். அது அக்கரையில் சீடரின்  கையில் இருந்த தாளில் எழுதப்பட்டது.

இது போன்ற  அற்புதங்களை நிகழ்த்த உங்களால் முடியுமா?" என்று கேட்டார்.

ஜென் குரு இப்படி பதில் கூறினார்.

"ஒருவேளை உனது நரி அப்படிப்பட்ட வித்தையைச் செய்து காட்டி இருக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் ஜென் இல்லை!

நான் நிகழ்த்தும் அற்புதம் என்னவென்றால் எனக்குப் பசி ஏற்படும்போது சாப்பிடுவேன். எனக்குத் தாகம் எடுக்கும்போது தண்ணீரைக் குடிப்பேன்."

 





ஞானம்
 

ஜென் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தத்துவ ஞானி ஒருவர் நெடுங்காலம் ஜென் நூல்களை நன்கு பயின்று வந்தார். 

ஒரு நாள், திடீரென்று அவருக்கு உயரிய ஞானம் கிடைத்தது.

உடனே அவர் தனது எல்லாப் புத்தகங்களையும் கொல்லைப் பக்கம் கொண்டு சென்று குவித்தார். 

அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்.
 

ஒரு சித்திரம் - ஒரு சிந்தனை

our sincere thanks to : http://tamil.thehindu.com/ , Dinamalar,Vellore        
 


இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை

தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது. 
தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையமும் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள், 50 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு பொது இ-சேவை மையமும், மதுரை மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு மையமும் என மொத்தம் 333 மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.


ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைத்தவர்கள் பொது இ-சேவை மையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம். 


ஆதார் அட்டை பெறுவதற்கு கண்விழி-கைரேகை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையத்துக்கு சென்று ரூ.40 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.


Tuesday, August 4, 2015

இன்ஜி. கவுன்சிலிங் 1.07 லட்சம் இடங்கள் நிரம்பின

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 536 இன்ஜி. கல்லூரிகளில் பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கு கடந்த ஒரு மாதமாக நடந்த கவுன்சிலிங் நேற்று நிறைவடைந்தது. இதில் 1,07,969 இடங்கள் நிரம்பியுள்ளன. 94,453 இடங்கள் காலியாக உள்ளன. 


Wednesday, July 29, 2015

மக்கள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் -இறுதி யாத்திரையை நோக்கி...



மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. 

முழு அரசு மரியாதையுடன் நாளை(30.07.2015) காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம், தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 27.07.2015 அன்று காலமானார். 

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் IIM கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.


மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. 

கலாம் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முப்படைத் தளபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,   டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராகுல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.



பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை  ஆலோசனைக்கு பிறகு  ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று(29.07.2015) காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. 

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.


அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது.


நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது.

அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.


அங்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் உடலை எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர்க் கடலில் ஆழ்ந்துள்ளது.





அப்துல் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால், நாளை வியாழக் கிழமை அன்று (30-07-2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அலுவலகங்கள் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னால் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை (ஜூலை 30) கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.

அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, கடலுக்குச் செல்வதில்லை என்று ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Tuesday, July 28, 2015

Dr. A.P.J.Abdul Kalam - The Living History



 

காலக்கோடு (Time Line of Dr. A.P.J.Abdul Kalam )

  • இளைஞர்களின் வழிகாட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 15.10.1931ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

  •  ராமநாதபுரத்தில் உள்ள Schwartz உயர்நிலைப் பள்ளியில் தமிழைப்  பாடமொழியாகக் கொண்டு பயின்றார். 

  • 1951ல்  திருச்சி St.Joseph கல்லூரியில்  B.Sc இயற்பியல் படிப்பை முடித்தார்.

  • 1955ல் சென்னை  MIT ல் Aerospace Engineering  பட்டம் பெற்றார். 

  • 1960ல் தலைமை விஞ்ஞானியாக DRDO வில் சேர்ந்தார்.

  • 1962ல் ISRO திட்ட இயக்குநராகச் சேர்ந்தார்

  • 1982ல் ஐதராபாத்தில் உள்ள DRDL இயக்குநரானார்.

  • 1992ல் பிரதமரின் தலைமை பாதுகாப்பு ஆலோசராக சேர்ந்தார்.

  • 1992-1999 வரை DRDO செயலர் ஆனார்.

  • 1997ல் நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா'' விருது பெற்றார்.

  • 1998ல் பொக்ரான் அணுஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார்.

  • 2002ல் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

  • 27.07.2015ல்  அப்துல்கலாம் மறைந்தார்.



பிடித்த திருக்குறள் 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள் :  பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். 



பெற்ற விருதுகள் 
 

எண்ணற்ற விருதுகளுடன்,
1981ல் பத்மபூஷன் விருது, 
1996ல் பத்மவிபூஷன் விருது 
1997ல் பாரத ரத்னா விருதையும் பெற்றார். 


எழுதிய நூல்கள்

இந்தியா 2020  (India 2020)
அக்னிச் சிறகுகள் (Wings of  Fire)

கடந்த நிலை  - (வெளியிடப்பட்ட நாள்: 25.07.2015) 

ஆர்வம்


  • ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கக்கூடியவர் 
  • தமிழ்  இலக்கியத்தில்   ஈடுபாடுடையவர்
  • வீணை மீட்டுவதில் வல்லவர் 
  • சைவ உணவுப் பழக்கம் கொண்ட பிரம்மச்சாரி. 
சாதனைகள் 

  1. எஸ்.எல்.வி.3 (SLV 3) ராக்கெட்,
  2. தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் திரிசூல்,
  3. தரையிலிருந்து தரையைத் தாக்கும் பிருத்வி,  
  4. நடுத்தர வேக ஆகாஷ்,
  5. பீரங்கியை எதிர்த்துத் தாக்கும் நாக் ஆகியவை மேம்படுத்தப்பட்டன. 
  6. 1989ல் அக்னி ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


அப்துல் கலாம் பல்வேறு தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்தினார். 

3000 C வெப்ப நிலையிலும் உருகாத உலோகப் பொருட்களை காம்ப்ரோக் என்னும் மையம் உருவாக்கியது. இது ஏவுகணைகள் தீப்பிடித்து எரிந்து விடாமல் இருக்க பயன்பட்டது.

DRDO தலைமை இயக்குநராக பதவி வகித்த போது 2வது முறையாக ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் அணுகுண்டுச் சோதனையை நிகழ்த்தியது. 

அப்துல் கலாம் மந்திரம் 

 

"கனவு காணுங்கள்"
  
கனவு என்பது 
நீங்கள் தூங்கும்போது வருவதல்ல.
உங்களை தூங்க விடாமல் செய்வது.