தமிழன்டா.........
(கதை, சம்பவங்கள் கற்பனையே, நகைச்சுவைக்காக மட்டுமே SunMicroSystems பெயரை பயன்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - deccanbluediamonds)
உகண்டா ல இருக்குற SunMicroSystems கம்பெனில JavaOS ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ண உலகம் முழுசும் இருந்து Apply பண்ணலாம் னு விளம்பரம் பண்ணி இருந்தாங்க. ஒரே ஒரு Vacant தான்.
நம்ம ஆளுக்கு வேலை தான் எதுவும் இல்லையே,"சரி இதுக்காச்சும் apply பண்ணலாம்"னு அப்ளிகேசன் போட்டாரு.
இண்டர்வியு நாள் வந்தது. நம்ம ஆள் ஆப்பிரிக்கா கெளம்பி போனாரு. உகாண்டா கேபிடல் Kampala வுல இறங்கி நேரா கம்பெனிக்கு போனாரு.
.
அங்கே இவரைப் போல 5000 பேர் இன்டர்வியு' க்கு வந்திருந்தாங்க.
நெறைய பேர் இருந்ததால, ஆளுங்களை filter பண்ண கம்பெனி முடிவெடுத்தாங்க.
முதல்ல "எத்தனை பேருக்கு JAVA OS ல அனுபவம் இருக்கு" னு கேட்டாங்க.
நம்மாளுக்கு இந்தோனேசியா ல இருக்குற JAVA தீவு தான் தெரியும். இருந்தாலும் "பாத்துக்கலாம் விட்றா" னு தைரியம் ஆகி "தெரியும்" னு சொல்லிட்டாரு.
java தெரியாததால 3000 பேர் குறைஞ்சாங்க.
அப்புறம் "அமெரிக்கன் இங்கிலீஷ் ல எத்தன பேரு fluent" னு கேட்டாங்க.
நம்மாளுக்கு தமிங்கிலீஷ் தான் கரெக்ட்டா தெரியும். இருந்தாலும் இது ரெண்டாவது பொய் தானேன்னு நெனைச்சி "தெரியும்" னு சொல்லிட்டாரு.
English தெரியாததால 1000 பேர் குறைஞ்சாங்க.
அப்புறம் "எத்தனை பேர் ஆப்ரிக்கன் country" னு கேட்டாங்க.
"சரி அடிச்சி விடுவோம்" னு நெனைச்சி நம்மாளும் "நானும் ஆப்ரிக்கா தேங் " னு சொல்லிட்டாரு.
ஆப்ரிக்கனா இல்லாததால ஒரு 500 பேர் குறைஞ்சாங்க.
அப்புறம் "எத்தனை பேருக்கு HR ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு"னு கேட்டாங்க.நம்மாளுக்கும் அதுல ஒண்ணும் இல்லைதான். இருந்தாலும், டீ கடைல, பார்பர் ஷாப் ல பொது அறிவை வளர்ததுனால அவரு "இருக்கு" ன்னுட்டாரு.
HR எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம 400 பேர் குறைஞ்சாங்க. 100 பேர் தான் மிச்சம். அதுல நம்மாளு ஒருத்தர்.
கடைசியா, "எத்தனை பேருக்கு உகாண்டா மொழியான Bantu தெரியும்" னு கேட்டாங்க.
நம்மாளுக்கு தமிழே தகறாரு. இந்தி இம்சை, English னாவே இழுப்பு வந்திடும். இருந்தாலும் 'பத்தோட பதினொன்னு' னு நெனைச்சி "எனக்கு ரொம்ப நல்லா தெரியும்" னு சொல்லிட்டாரு.
Bantu மொழி தெரியாம 98 பேர் போயிட்டாங்க.
மிஞ்சி இருந்தது ரெண்டே பேர் தான். அதுல நம்மாளு ஒருத்தர். உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறல் எடுத்தாலும் நம்மாளு கொஞ்சம் கெத்தோட உக்காந்து இருந்தாரு.
Interview பண்றவங்க கடைசியா இருந்த ரெண்டு பேரையும் "உங்களோட Bantu மொழியில பேசிக்குங்க பாப்போம்"னு சொன்னங்க.
நம்மாளு எதிர்ல இருந்தவர் கிட்டே கேட்டாரு.
"தம்பிக்கு எந்த ஊரு?"
அதுக்கு அவன் சொன்னான்.
"அண்ணே நான் திருச்சி பக்கம். நீங்க?"