Saturday, March 14, 2015

Google Science Fair - 2015 ( Google அறிவியல் கண்காட்சி 2015)


 Google Science Fair 2015

( Read and Scroll Down for Details)

  It's your turn to change the world

Google நிறுவனம் 2011 முதல்   ஆண்டுதோறும்  Science Fair  திருவிழாவை நடத்துகிறது

13 வயது முதல் 18 வயதிற்குள் உள்ள மாணவர்கள் ஒரு குழுவாகவோ, அல்லது பெற்றோர் வழிகாட்டுதலில் தனியாகவோ பங்கேற்கலாம்.

உலகின் எந்த நாட்டிலுள்ள மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.

எந்த எந்த தலைப்புகளில் ஆய்வு செய்யலாம் என்பதை, உங்கள் ஆர்வத்தை பொறுத்து தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கு Google Science Fair  வழிகாட்டும்.

நீங்கள் தேர்வு செய்த தலைப்பில், ஆய்வுகள் செய்யவும், அந்த குறிப்பிட்ட பொருளில் உங்களுக்கு முழு அறிவை வழங்கவும் பேட்டிகள், வீடியோக்கள், புத்தகங்கள் அனைத்தும் Online ல் பெறலாம்.

  • முதலில் Register  செய்யவேண்டும்.
  •  தலைப்பை (Select a Topic)தேர்வு செய்யவேண்டும்.
  • கருதுகோள் (Make Hypothesis) தீர்மானிக்க வேண்டும் 
  • பின்னர் ஆய்வுகள் மேற்கொள்ள (Do Experiments or Make Models)வேண்டும். அல்லது மாதிரிகள் வடிவமைக்க வேண்டும்.
  • முடிவுகள் (Discover New Results or Invent New Product) பெறப்பட வேண்டும். அவை புதிய கண்டுபிடிப்பாகவோ, ஆலோசனையாகவோ இருக்கலாம் 
  •  உங்கள் படைப்பை (Last Date for Submission) அனுப்ப கடைசி தேதி  19.05.2015
  •  $100,000 அளவிற்கான பரிசுகள் வழங்கப்படும்.                                             

    Submission Deadline               : May 19, 2015
    Regional Finalists Announced: July 02, 2015
    Global Finalists Announced    : August 04, 2015
    Site


    Channel
    https://www.youtube.com/user/GoogleScienceFair 



    Videos
    https://www.youtube.com/user/GoogleScienceFair/videos 

     idea spring board

     
    Google Science Fair 2015 is a global online competition open to individuals or teams from 13 to 18 years old.

    What will you try?
 

Tujh Mein Rab Dikhta Hai - Rab Ne Bana Di Jodi (1080p HD Song)

உங்களுக்கு புரியுதோ இல்லையோ, ஆனா ஒரு தடவை இந்த Song ஐ அமைதியான சூழலில் கேட்டு பாருங்களேன்.
Song: Tujh Mein Rab Dikhta Hai (Blu-ray - Male)
Movie: Rab Ne Bana Di Jodi (2008) 
Singer: Roopkumar Rathod

Friday, March 13, 2015

தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட pdf கோப்புகளை உருவாக்குவது எப்படி? How to make a PDF file with selected pages.


How to make a  PDF file with selected pages


1. கீழே உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.

2.இந்த மென்பொருளை கணினியில் நிறுவவும்.

3. Printer and Faxes தேர்வை click  செய்து உங்கள் Printer Folder ல் PrimoPDF என உள்ளதா என்பதை உறுதி படுத்தவும். ( See Below)


4. தேவையான பக்கங்களை மட்டும் கொண்ட PDF கோப்பை உருவாக்க  முதலில் நீங்கள் தேர்வு செய்துள்ள PDF  கோப்பை Adobe Reader, Foxit Reader போன்ற ஏதேனும் ஒன்றில் திறந்து கொள்ளவும். (உதாரணமாக இந்த கோப்பில் 100 பக்கங்கள் இருப்பதாக கொள்வோம்)

5. தற்போது  உங்களுடைய PDF கோப்பு திறந்திருக்கும் நிலையில் , 

  • File -->Print  அல்லது Ctrl +P  கிளிக் செய்யவும். Print Dialogbox  தோன்றும். இதில்  Printer --> Name  என்னும் பகுதியில் PrimoPDF என்பதை தேர்வு செய்யவும்.
  • Print Range --> Pages  என்னும் பகுதியில்  உங்களுக்கு வேண்டிய பக்கங்களை மட்டும் கொடுத்து OK பட்டனை கிளிக் செய்யவும்.  உதாரணமாக, 1,4,6,15-20,31,50 etc (See Below for Example)


6. OK கொடுத்தவுடன் PrimoPDF உரையாடல் பெட்டி தோன்றும். இதில் கீழ்ப்பகுதியில் உள்ள Create  PDF பட்டனை கிளிக் செய்யவும்.


7. இப்போது தோன்றும்  Save As உரையாடல் பெட்டியில் உங்களுடைய கோப்பிற்கு புதிய பெயரை தட்டச்சு செய்து Save பட்டனை கிளிக் செய்யவும்.

8. பக்கங்கள் குறைக்கப்பட்ட உங்களுடைய புதிய PDF கோப்பு Adobe Reader  அல்லது Foxit Reader ல் திறக்கப்படும்.

Invigilator Handbook for SSLC Exam -March 2015

Click Below to Download the

Invigilator Handbook for 
SSLC Examination March 2015


Wednesday, March 11, 2015

மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ முடியும். Google says humans could live for 500 YEARS


மனிதர்கள் 500 ஆண்டுகள் உயிர் வாழ  முடியும் 

Google says humans could live for 500 YEARS - and is investing in firms hoping to extend our lives five-fold

மனிதர்கள் வாழ்நாளை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என google  நிறுவனம் தெரிவித்துள்ளது. google  நிறுவனத்தின் முதலீட்டுப் பிரிவு தலைவர் திரு பில் மாரிஸ் அவர்கள் பகிரும் தகவல்,

  "விஞ்ஞானிகள் உதவியோடு  இன்னும் 20 வருடங்களில் கீமோதெரபி மூலம் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.  மருத்துவ துறையின் நவீன வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும்  BioMechanics  மூலமாக இது சாத்தியமாகும்."  என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மரபணுவியல் துறையில் ஏற்கனவே இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன எனவும், அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 google  நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குனர் திரு Ray Kurzweil அவர்கள் , "2045ம்  ஆண்டிற்குள் இயந்திர மனிதனில் மனித மூளையை பொருத்த முடியும் " என தெரிவித்துள்ளார்.

  ஆனால், புகழ் பெற்ற நரம்பு உயிரியல் பேராசிரியர் திரு Sir Colin Blakemore அவர்கள் , "மனிதனின் அதிகபட்ச வாழ்நாள்  120 ஆண்டுகள் மட்டுமே " என தெரிவித்துள்ளார்.

our sincere thanks to




 

2012-2013 TRB SELECTED P.G.ASSISTANT'S REGULARISATION ORDER BY JD(HSS)


Click Below to download the Proceedings of  
JD(HSS), TN School Edn 
for 
2012-2013 TRB SELECTED P.G.ASSISTANT'S REGULARIZATION


Saturday, March 7, 2015

JACTTO சார்பில் வேலூர் மாவட்டத்தில் 08.03.2015 அன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


15 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி JACTTO சார்பில்  வேலூர் மாவட்டத்தில் 08.03.2015 அன்று  பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



TANCET - 2015 (Tamil Nadu Common Entrance Test) - ANNA UNIVERSITY NOTIFICATION


TANCET - 2015
 
 அண்ணா பல்கலைக் கழகம் முதுகலை இன்ஜி.,- எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' ஐ  ஆண்டுதோறும்  மே மாதத்தில் நடத்துகிறது .

விண்ணப்பங்கள் வரும் ஏப்.,1 முதல் 20ம் தேதி வரை வழங்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 

 விண்ணப்பங்கள் வழங்கும் நாட்கள்                       01.04.2015 to 20.04.2015
(Issuing Applications)

விண்ணப்பங்களை சமர்பிக்க  கடைசி நாள்       22.04.2015
(Last Date for Submission of  Filled App.)

தேர்வுகள் நடைபெறும் நாட்கள்                                16.05.2015, 17.05.2015
 (Entrance Exam Date's)


            MCA Entrance Exam       :  16.05.2015     10.00 to 12.00 
            MBA                                     :  16.05.2015     02.30 to 04.30
            ME/M.Tech/M.Arc              :  17.05.2015     10.00 to 12.00

 ஆன்லைன்  மற்றும்  நேரடி விண்ணப்பம் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
 
Anna University conducts the Tamil Nadu Common Entrance Test (TANCET) for admission to MBA, MCA, M.E./M.Tech/M.Arch/M.Plan programme of various Colleges and Universities of Tamil Nadu. 

Eligibility Criteria:



MBA     - Graduate in any discipline under the 10+2+3 pattern


MCA     - Bachelors degree with mathematics as a subject in 12th  or Maths/Stat as one of the 
                subjects at the degree level. 


M.E.     - Bachelors degree in Engineering/Technology in the relevant stream.


*Candidates who are appearing in the final year of the qualifying examination are also eligible to appear in the Tamil Nadu Common Entrance Test 2015. 

Fees:  Rs.500/- for General and  250/- for Reserved Candidates 

Wednesday, March 4, 2015

துறைத் தேர்வுகள் - மே 2015 - Deptl.Exam May'2015

துறைத் தேர்வுகள் - மே  2015

Name of the Examination          : Dept. Examination - May 2015
 
Date of Notification                    : 01.03.2015

Date & time of closing                : 31.03.2015 5.45 PM
 
Date of Examination                   : 24.05.2015 to 31.05.2015
 
Fee   : 
        
     Registration Fee Rs.30/- along with postal charge of Rs.12/- to be included  to the total amount of examination fee. ( Exam Fees for Each  paper  is Rs.50/-)

           Hall ticket can be downloaded from the Commission’s website from 17.05.2015 to 31.05.2015, by presenting the unique online Application No. and date of birth.

           Days and Dates of Written Examinations:- The Forenoon session will commence from 9.00 a.m. and the Afternoon session will commence from 2-30 p.m.
ஆன்லைனில் பதிவு செய்ய    http://tnpsconline.tn.nic.in/

XII MARCH 2015 THEORY EXAM FORMS

XII MARCH 2015 THEORY EXAM FORMS

Download Here

12ம் வகுப்பு பொதுத் தேர்வு-மார்ச் 2015 தேர்வு அறையில் நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு



12ம் வகுப்பு பொதுத் தேர்வு-மார்ச் 2015 
தேர்வு அறையில் நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
 
சென்னை: பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் 5ம் தேதி துவங்குகிறது.
மாணவர்களை விழிப்புடன் கண்காணிக்க, தேர்வு அறையில், கண்காணிப்பாளர் களுக்கு நாற்காலி போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
மூன்று மணி நேரம் நின்று கொண்டே இருப்பது இயலாத காரியம். சர்க்கரை நோய் பாதித்தோர் சில நிமிடங்களுக்கு மேல் நின்றால் மயங்கி விடுவர். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் வியர்த்து அழுத்தம் அதிகமாகும். இதயப் பிரச்னை உள்ளவர்களும் சோர்வாகி விடுவர் என தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் வேலூர் திரு.ஜனார்த்தனன் கூறும்போது, "நாற்காலி போடுவதா, வேண்டாமா என்பதை, ஆசிரியர்களின் வயது மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தேர்வு அறையில் தவறுகள் தெரிந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர் சிங்காரவேல் கூறும்போது, "உடல்நலப் பாதிப்பு குறித்த ஆசிரியர்களின் பிரச்னைகளை, தேர்வுத் துறைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். நின்று கொண்டே இருக்க முடியாதோருக்கு தேர்வுப் பணியில் இருந்து விலக்கு வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககத்தில் விசாரித்தபோது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, நாற்காலி தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாற்காலி போட வேண்டாம் என்பதை ஆசிரியர்களின் வயது, உடல்நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நாற்காலி தர வேண்டும் என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, February 28, 2015

HIGH SCHOOL HM PROMOTION COUNSELLING -உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

 HIGH SCHOOL HM PROMOTION COUNSELING - 01.03.2014
உயர்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

72 காலிப் பணியிடங்கள்  மற்றும் தரம் உயர்த்தப் பட்ட நடுநிலைப் பள்ளிகளின்  50 புதிய பணியிடங்கள்  என,  122 உயர்நிலைப்  பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு,  பட்டதாரி மற்றும்  பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள்,  உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை  (01.03.2015) காலை 09.00 மணிக்கு சென்னை பள்ளிக்கல்வி அலுவலக வளாகத்திலுள்ள SIEMAT கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

01.01.2014 நிலவரப் படியான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியலில், வரிசை எண் 576 முதல் 685 வரை உள்ள 110  ஆசிரியர்கள், 3 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட உள்ளது.

Thursday, February 26, 2015

Provisional Marksheet for +2 Students - +2 ரிசல்ட் வந்த 2 நாளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல்

+2 ரிசல்ட்  வந்த 2 நாளில் தற்காலிக மதிப்பெண் பட்டியல் 

+2 தேர்வு மார்ச் 5ம்  தேதி துவங்கி மார்ச் 31ம்  தேதி முடிவடைகிறது. மே மாதம்  தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகு மாணவர்களுக்கு தற்காலிக மார்க் சீட் வழங்கப் படும் என பள்ளிக்கல்வி துறை செயலாளர் திருமதி D.சபீதா தெரிவித்துள்ளார். 

        நேற்று சென்னையில் தேர்வுகள் குறித்து நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு வீரமணி, பள்ளிக்கல்வி  செயலாளர் திருமதி D.சபீதா, தேர்வுத்துறை இயக்குனர் திரு தேவராஜன் , பள்ளிக்கல்வி இயக்குனர் திரு  கண்ணப்பன் மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.


     இக்கூட்டத்தில்  பள்ளிக்கல்வி செயலாளர் பேசுகையில் , மார்ச் 2015ல்  +2 தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்கு பிறகு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்  படும் என தெரிவித்தார்.

               மேலும் தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் தெரிவிக்கையில் "தேர்வு முடிவுகள்  வெளியானதும்  http://www.tndge.in வலைத்தளத்தில்  தற்காலிக  மதிப்பெண் பட்டியலை(Provisional Mark sheet) டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  இம்மதிப்பெண் பட்டியலில், மாணவரின் போட்டோ, பதிவு எண், மதிப்பெண்கள், பள்ளியின் பெயர்ஆகிய விவரங்கள் இருக்கும். இந்த மதிப்பெண் பட்டியலை download செய்து அதில் தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெறவேண்டும். இம்மதிப்பெண் பட்டியல் 90 நாட்களுக்கு மட்டும் செல்லும். போலி மதிப்பெண் பட்டியல்கள் தயாரிப்பதை தவிர்க்க இதில் ரகசிய குறியீடுகள் இருக்கும்." என தெரிவித்துள்ளார்.

            Engineering  மற்றும்  Medical விண்ணப்ப படிவங்களை நிரப்பவும், கவுன்சலிங் போன்றவற்றில் கலந்து கொள்ளவும் இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப் படுகிறது. ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் தேர்வு முடிவுகள் வெளியான 30 நாட்களில் கிடைக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.


Tuesday, February 24, 2015

NPTEL (a joint initiative of the IITs and IISc) - Announces Online Courses and Certification

NPTEL

(National Programme on Technology Enhanced Learning)
 (The link is given at end of the post)
( NPTEL (National Programme on Technology Enhanced Learning) is a joint initiative of the IITs and IISc. Through this initiative, we offer online courses and certification in various topics. Online course: Free for all, Certification exam: For a nominal fee)

NPTEL என்பது IIT (Indian Institute of Technology)   மற்றும் IISc(Indian Institute of Science) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் மத்திய  மனிதவள மேம்பாட்டுத் துறை நிறுவனம் ஆகும் .

Online  மூலமாக மிகவும் பயனுள்ள பல்வேறு குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை இந்நிறுவனம் நடத்துகிறது.

இந்நிறுவனத்தின்  Online  படிப்புகளில் சேர்ந்து பயில கல்விக்  கட்டணம்  எதுவும் இல்லை. தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப் படும். பாடப் பொருட்களை Online ல் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

தேர்வில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்  படும்.

நடத்தப் படும் படிப்புகள்  

1. Particle Characterization

      By  Dr. R. Nagarajan, Professor, Department of Chemical Engineering, IIT Madras

2. Database Design
       By  Dr. S. Srinath, Prof. D. Janaki Ram, Professor, Computer Science and Engineering -
       IIT Madras

3. Numerical methods and programing
      By Prof. P.B. Sunil Kumar,  Professor, Department of Physics - IIT Madras

4. VLSI Technology
     By Prof. Nandita DasGupta, Professor, Department of Electrical Engineering, IIT Madras

5. Design and Optimization of Energy systems
     By Dr. C. Balaji, Department of Mechanical Engineering, IIT Madras
  
6. Film Appreciation
     By Prof. Aysha Iqbal Viswamohan, Department of Humanities and Social Sciences, IIT Madras
  
7.Computational Fluid Dynamics
    By Dr. Sreenivas Jayanti, Department of Chemical Engineering,  IIT Madras
8. Advanced Metallurgical Thermodynamics  
      By Prof. B.S. Murty, Department of Metallurgy and Material Science IIT Madras.

9. Special/Select Topics in Classical Mechanics
     By Prof. P.C. Deshmukh, Department of Physics - IIT Madras.
10.Special/Select Topics in Atomic Physics
       By Prof. P. C. Deshmukh, Department of Physics - IIT Madras.
11. Quantum Physics 
       By Prof. V. Balakrishnan,  Department of Physics, IIT Madras

12. Classical Physics
      By  Prof. V. Balakrishnan, Department of Physics - IIT Madras.
மேலும் விவரங்களுக்கு 

4 Days Bank Strike Averted as Deal Reached on Wage Hike, Holidays - வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


4 Days Bank Strike Averted as Deal Reached on Wage Hike, Holidays 
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
Ahead of the Budget, the Indian Banks' Association, which represents lenders, managed to avert a four-day strike starting February 25. Employees of state-run banks will get 15 per cent wage hike and alternate Saturdays off, according to the agreement.

The wage hike will be applicable from November 2012 and will be valid for five years. The bank unions were demanding a 19 per cent hike in wages and a five-day work week.
Unions reached the wage settlement after 18 rounds of negotiations over more than two years, Vishwas Utagi, a senior union official, said. The new salaries, applicable for more than 7 lakh bank workers, will be backdated to November 2012 and valid for five years, he said.

Mr Utagi said the estimated cost for banks as a result of the salary increase will be an annual Rs. 4,725 crore.


ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், 25.02.2015 முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.
ஒப்பந்தம்:
 மும்பையில் நேற்று(23.02.2015) இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், ஊதிய உடன்பாடு எட்டப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வுக்கு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம், வங்கிகளுக்கு ஆண்டுக்கு, 4,725 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதுவரை, வங்கிகள் சனிக்கிழமை, அரை நாள் இயங்கி வந்தன.இம்முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

 முழுநேரம் இயங்கும்:

   புதிய ஒப்பந்தப்படி, மாதத்தில் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை. முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில், வங்கிகள் முழுநேரம் இயங்கும்.


Friday, February 20, 2015

The Mission to Meet the Aliens

The Mission to Meet the Aliens


            பூமிக்கு வெளியே  அல்லது  பேரண்டத்தில் (Cosmos) வாழ்வதாக கருதப் படுகின்ற உயிர்களை  ஏலியன் என்கிறோம். ஏலியன்கள் சிறிய பாக்டீரியாக்கள் போன்றோ  அல்லது மனிதனை விட மேம்பட்ட தாகவோ கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

      சரியாக சொல்வதென்றால், நமது பூமியில் எப்படி எண்ணற்ற உயிரினங்கள் உள்ளனவோ, அதே போல,  நம்மால் முழுதும் புரிந்துகொள்ள முடியாத ,  சிக்கலான,  சென்று பார்க்க முடியாத இந்த அகன்ற பேரண்டத்தில், நம்மைப் போலவோ அல்லது நம்மை விட அறிவில் மேம்பட்டதாகவோ கூட உயிரினங்கள் இருக்க 100% வாய்ப்புகள் உள்ளன.

              ஏன் ?  நமக்கு அறிமுகப் படுத்தப் பட்ட நமது கடவுள்கள் கூட ஏலியன் களாக இருக்கலாம். இதுவும் கூட ஒரு கருதுகோள் தான்.