Monday, January 4, 2016

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு - G.O. விரைவில்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
எனது தலைமையிலான தமிழக அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் இன்றியமையாப் பணியினை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கள் பணிகளை செம்மையாக செய்திட  ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.


அந்த வகையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ் மற்றும் சிறப்பு மிகை ஊதியம், அதாவது சிறப்பு போனஸ் மற்றும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு ஆகியவை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி,

1. 2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாடீநு என்ற உச்சவரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.

2. ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்,

கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

3. உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

4. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்  பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய்  பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

இதனால் அரசுக்கு 326 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இ- சேவை மையங்களில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா, உள்பிரிவு பட்டா மாற்றம் செய்ய வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமலேயே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல் பணிகளை வருவாய், நில அளவைத் துறைப் பணியாளர்களால் வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் பலரது சொத்துக்கள் தங்கள் மூதாதையர்கள் பெயரிலேயே இருப்பதால், அவர்களால் அரசு வழங்கக் கூடிய விவசாயக் கடன், சலுகைகளைப் பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 
இதனால், சொத்துக்கள் உரிமையாளர்கள் பெயரில்தான் இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து கைகளால் எழுதப்பட்ட பட்டா, நிலப் பதிவேடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, கணினி வழி பட்டா வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த நிலையில், பட்டா மாறுதலுக்கு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மேம்படுத்தி பட்டா மாறுதல்கள் இணைய வழியில் வழங்கும் வகையில், பட்டா மாறுதலுக்கான தமிழ் நிலம் மென்பொருள் என்ற இணையதள வசதியுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியைக் கொண்டு பட்டா மாறுதல் கோரும் பொதுமக்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.

விண்ணப்பிப்போரின் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்களை இம் மையத்தில் அளித்து அவை இ-சேவை மையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, மீண்டும் மனுதாரருக்கு ஒப்படைக்கப்படும். விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு இ-சேவை மையத்தால் மனுதாரருக்கு வழங்கப்படும். இம் மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

பட்டா மாற்றப்பட்ட பின்னர் அதன் உத்தரவை பொது இ-சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக் கொள்ளலாம். இப் பட்டாவுக்கு வட்டாட்சியர் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம், பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமலேயே பட்டா மாறுதல் உத்தரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

Sunday, January 3, 2016

CBSE - 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

CBSE  - March 2016 Public Exam Date's Announced for 10th & 12th


10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு மார்ச்1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.




மின் வாரியத்தில் உதவி மின் பொறியாளா் (TNEB - Recruitment for AE in Electrical/Machanical/Civil) பணியிடங்களுக்கு ஜனவரி 11 வரை விண்ணப்பிக்கலாம்.

Re post
 

375 உதவி மின்பொறியாளர் ( Electrical, Mechanical, Civil )பணியிடங்களுக்கு ஜனவரி 11 வரை onlineல்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

ஊதிய விகிதம்
:
Rs. 10,100 - 34,800 + 5100 GP 
வயது வரம்பு
:
OC பிரிவிற்கு  மட்டும் 30 வயது வரை.
மற்ற அனைவருக்கும் வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி  
:
AE(Electrical) :  BE (EEE / ECE / EIE / CSE /IT)
AE(Mech)      : BE Mech/Production Engg/ Manufac.Engee  / AMIE A&B
AE (Civil)       : BE Civil / AMIE A&B

online பதிவிற்கு கடைசி தேதி
:
11.01.2016
தேர்வு நடைபெறும் நாள்       
:
: 31.01.2016 (Sun),
Centre  for  Entrance  Examination, Anna University, Chennai-25    

For Applying Online : ONLINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL

 

 Notification -1.pdf 

Syllabus.pdf 1.pdf 

Community list.pdf 

Schema of Exam - 1.pdf 

GUIDELINES TO FILLING UP APPLICATION - 1.pdf 

Guidelines to upload Images - 1.pdf 

Wednesday, December 30, 2015

மகப்பேறு விடுமுறை இனி 26 வாரங்கள் : மத்திய அரசு அறிவிப்பு விரைவில்.....

 
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்  மேனகாகாந்தி  நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம் குழந்தைகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு 26 வார காலம் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென  தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்.

Friday, December 25, 2015

நண்பர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ( MERRY CHRISTMAS WISHES TO ALL FRIENDS)



  “For to us a child is born, to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace.”


                                                                                                                                           Isaiah 9:6


 

Thursday, December 24, 2015

2016 - தமிழக அரசு விடுமுறை நாட்கள் ( PUBLIC HOLIDAYS 2016 )

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 
9 அரசு விடுமுறை தினங்கள் 


2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். 

2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி,  ஏப்ரல் 1-வங்கிக்கணக்கு முடிப்பு நாள்,  ஏப்ரல் 8-தெலுங்கு வருடப்பிறப்பு ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும். 

ஆகஸ்ட் 15- சுதந்திரதினம், செப்-5 விநாயகர் சதுர்த்தி, டிசம்பர் 12- மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். 

ஜனவரி 16 -திருவள்ளுவர் தினம், ஜனவரி 17- உழவர் திருநாள், மே 1- உழைப்பாளர்  தினம், அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி, அக்டோபர் 29 -தீபாவளி,  டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.


தந்தை பெரியார் நினைவஞ்சலி

 
ஈ.வெ.இராமசாமி 
(17.09.1879 -  24.12.1973) 
 
"புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி"   - UNESCO


பகுத்தறிவு 

சாணியைக் கொண்டு போய் வைத்து, "இது ஒரு அருமையான உணவாகும்" என்று சொல்லிச் சாப்பிடச் சொன்னால் யாராவது சாப்பிடுவார்களா? பார்த்தவுடனேயே "இது சாணி, அசிங்கம்" என்று சொல்லிவிடுவார்களே! ஆனால் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து இது சாமி என்று சொன்னால் தலையில் குட்டுப் போட்டுக் கொண்டு விழுந்து கும்பிடுகிறார்கள்.

ஏனென்றால், கடவுள் சங்கதி என்று சொன்னால் நம் மக்கள் அதைப் பற்றிச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாய் நம்ப வேண்டும். அது விசயத்தில் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை. இந்த முட்டாள் தனம் அதாவது அறிவுக்குப் பூரணச் சுதந்திர மற்ற அடிமைத் தன்மை ஒழிந்து பகுத்தறிவு வளர வேண்டும்.


கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? 

நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக் கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு இந்த ஒலி பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பது மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை? என்று கவனிக்க வேண்டும். 

பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொது அறிவு வளரவும் விசய ஞானம் உண்டாகவும் உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்பட வேண்டும்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்,  கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகு காலமாக நடந்து வருவதாக்த் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

மதம் 

ஓரிரு கோடி ரூபாய்ப் பணமும், ஓரிரு ஆயிரம் ஆண்களும்,   ஐந்து - ஆறு மொழிகளில் பத்திரிக்கைகளும் வைத்துக் கொண்டு,  ஒரு ஈன முகத்துக்கும் தெய்வப் பிறவித்தன்மை கற்பித்து, அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால், ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம். எதிர்ப்பவரைத் தூக்கிலிடத்தக்க ஆதரவும் கிடைத்துவிடும். இதுதான் மதத்தின் லட்சணம்.

  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. 
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

Wednesday, December 23, 2015

பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை

மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன; இந்தச் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் டிசம்பர் 24, 25, 27 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மட்டும் நடத்தக் கூடாது என்றும் மற்ற நாள்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பள்ளிகளில் டிசம்பர் 26 முதல் 31 வரையிலான விடுமுறை நாள்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

வகுப்பறைகளிலும், வகுப்பறைகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடரைத் தெளித்தும், தேவைப்பட்டால் தினக்கூலி பணியாளர்களை அமர்த்தியும் பள்ளிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Saturday, December 19, 2015

10th ,12th HALF YEARLY EXAMINATION JAN 2015 – TIME TABLE

10,12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகள் - கால அட்டவணை 

Click Here to Download the Timetable in Ms Word
Click Here to Download the Director Proceedings with Time Table in pdf

Date
Day
12th
10th
Subjects
Subjects
11.01.2016
Mon
Language 1st Paper
(Tamil and other Minority Languages)
Tamil 1st Paper
12.01.2016
Tue
Language 2nd Paper
---
13.01.2016
Wed
English 1st Paper
Tamil 2nd Paper
14.01.2016
Thur
English 2nd Paper
---
18.01.2016
Mon
Commerce, Home Science, Geography
English 1st Paper
19.01.2016
Tue
Mathematics, Zoology,

Agriculture Practice, Accounts & Auditing(A&A), Political Science, Micro-Biology,  Nutrition and Dietetics, Food Management & Child Care, Textiles Designing, Nursing(Vocational), Nursing(General)
---
20.01.2016
Wed
---
English 2nd Paper
21.01.2016
Thur
Physics, Economics,

General Machinist(GM),
Electrical Machines and Appliances(EMA),
Electronics Equipment(EE), Draughtsman Civil(DC), Auto Mechanic(AM), Textile Technology(TT), Office Management(OM)

22.01.2016
Fri
----
Mathematics
23.01.2016
Sat
Chemistry, Accountancy
---
25.01.2016
Mon
Biology, Botany, History, Business Mathematics
Science
27.01.2016
Wed
Computer Science,
Statistics, Bio Chemistry, Indian Culture, Communicative English, Advanced Language(Tamil)
Social Science
 

Wednesday, December 16, 2015

Bajirao Mastani Official Trailer with Subtitles | Ranveer Singh, Deepika...

Pinga | Official Video Song | Bajirao Mastani | Deepika Padukone, Priyan...

வங்கிக் கணக்குகளை தொடங்க இனி பான்கார்டு எண் கட்டாயம்

 
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான, அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளுக்கும், PAN(Permanent Account No) எனப்படும்  நிரந்தர கணக்கு எண் விரைவில் கட்டாயமாகிறது.
இதுதொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளைத் தவிர, மற்ற வங்கிக் கணக்குகள் அனைத்திற்கும் PAN எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கப்படும் வெளிநாட்டு பயண டிக்கெட்டிற்கும், ஹோட்டல் பில் கட்டுவதற்கும் பான் எண் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் அசையா சொத்துகளுக்கும் பான் எண் கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, December 14, 2015

விஏஓ தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TNPSC நடத்தும் VAO தேர்விற்குவிண்ணப்பிக்க டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்த ஜனவரி 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ONE DAY SALARY CONTRIBUTION BY GOVT EMPLOYEES FOR CM PUBLIC RELIEF FUND G.O ISSUED

தமிழக வெள்ள நிவாரண நிதியாக, அரசு ஊழியர்கள் டிசம்பர் மாதத்தின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க தமிழக அரசு பணியாளர்(ம) நிர்வாக சீர்திருத்தத்துறை (P&AR) ஆணை பிறப்பித்துள்ளது.

Go.Ms.No 117(P&AR) Dt. 13.12.2015

Click Here to Download the G.O.

 

TNPSC DEPARTMENTAL EXAMINATION TIME TABLE FOR DEC 2015


Wednesday, December 9, 2015

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 2016ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?
  1. மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள்.
  2. 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள்.
  3. தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் (இ.எஸ்.எல்.சி.) தேர்ச்சிப் பெற்றவர்கள்.
  4. திறந்தநிலைப் பள்ளியில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்கள் 
 
ஆகியோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்போர் 01.04.2016 -ஆம் தேதி பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பத்தை  மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். மையங்கள் குறித்த விவரங்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் ஊதியம் வழங்க முடிவு


தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு  டி.ஜி.பி., முதல் காவலர்  வரை, 99,896 பேர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

Monday, December 7, 2015

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்ச்சி வழங்க வேண்டும்(???): டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது உடைமைகள், ஆடைகள், பாட நூல்கள் ஆகியவற்றை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே , தமிழ்நாட்டில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 12ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் பொதுத்தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும்,  அரையாண்டுத் தேர்வுகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, December 5, 2015

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (CTET) டிசம்பர்  28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான தேர்வு  2016 பிப்ரவரி 21-ல் காலை 9.30 முதல் 12 மணி வரை தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.
 இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும். 
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் டிசம்பர்  28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 
தேர்வறை அனுமதிச் சீட்டை ஜனவரி 25-ஆம் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 
கல்வித் தகுதி 
5-ஆம் வகுப்பு வரியிலான ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப் படிப்புடன் 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
ஒரு தாள் மட்டும் எழுதும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, இரு தாள்களையும் எழுத விரும்புவோர் ரூ.1000-த்தையும் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ. 300-ஐயும், இரண்டு தாள்களையும் எழுத ரூ. 500-ம் செலுத்த வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு 

Wednesday, December 2, 2015

RECRUITMENT: SPECIALIST CADRE OFFICERS IN SBI GROUP : 40 Vacancies for B.L.,M.L And 145 Vacancies for B.E.,B.Tech.,M.Sc.,MCA Computer Science Graduates

Advertisement No. CRPD/SCO/2015-16/7
 
1. Online Registration of Application starts from: 26.11.2015
2. Last date for Online Registration of Application: 12.12.2015
3. Payment of Fee Online: 26.11.2015 to 12.12.2015
4. Downloading of call letter for Online Test: After: 05.01.2016
5. Date of Online Test : 17.01.2016

For Notification and Online Apply, Click Here

டிச., 5 வரை கனமழை: இன்று வட கடலோர மாவட்டங்களில் 25 செ.மீ மழை கொட்டும் என BBC அறிக்கை


லண்டன் BBC  செய்தி நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 50 செ.மீ. மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவித்திருந்தது.

இதற்கேற்ப  சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று(01-12-15) காலை 8.30 மணி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் சராசரியாக நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 118 மி.மீ., மழையும், மீனம்பாக்கத்தில் 175 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

எனவே இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சராசரியாக 25 செ.மீ  மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை,  திருவாரூர், திருவண்ணாமலை,வேலுார் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SSA (G.O.175), RMSA BT,PG, PET, Upgraded School PG's, All Non Teaching(RMSA, General) - Pay Authorization Letter for Nov 2015

Tuesday, December 1, 2015

2016ல் இரண்டு அரையாண்டுத் தேர்வுகள்

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, 2016 ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.