Wednesday, December 16, 2015

வங்கிக் கணக்குகளை தொடங்க இனி பான்கார்டு எண் கட்டாயம்

 
கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான, அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளுக்கும், PAN(Permanent Account No) எனப்படும்  நிரந்தர கணக்கு எண் விரைவில் கட்டாயமாகிறது.
இதுதொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளைத் தவிர, மற்ற வங்கிக் கணக்குகள் அனைத்திற்கும் PAN எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வாங்கப்படும் வெளிநாட்டு பயண டிக்கெட்டிற்கும், ஹோட்டல் பில் கட்டுவதற்கும் பான் எண் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் அசையா சொத்துகளுக்கும் பான் எண் கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.