Showing posts with label Maternity Leave Extended upto 26 Weeks. Show all posts
Showing posts with label Maternity Leave Extended upto 26 Weeks. Show all posts

Wednesday, December 30, 2015

மகப்பேறு விடுமுறை இனி 26 வாரங்கள் : மத்திய அரசு அறிவிப்பு விரைவில்.....

 
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்  மேனகாகாந்தி  நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம் குழந்தைகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு 26 வார காலம் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென  தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்.