Thursday, August 20, 2015

கல்விக்கடன் பெற புதிய இணையதளம் துவக்கம் - மத்திய அரசு (NEW WEBSITE FOR EDUCATIONAL LOAN)


மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் 2015 பட்ஜெட் கூட்டத் தொடரில்  கல்வி கடன் பெறும் மாணவர்களின் வசதிக்காக  புதிய இணைதளம் துவக்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தார்.

தற்போது இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த இணையத்தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். 

இணையதள முகவரி

Tuesday, August 18, 2015

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 1101 வேலைவாய்ப்புகள்




  • கால் நடை ஆய்வாளர் நிலை2  - 294
  • கதிரியக்கர்(ரேடியோகிராபர்) 24
  • ஆய்வக உடனாள் 17
  • ஆய்வுக்கூட தொழில் நுட்பர் 02
  • மின்னாளர் 03
  • அலுவலக உதவியாளர் 36
  • கால் நடை பராமரிப்பு உதவியாளர் 725

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 15.09.2015

கல்வித்தகுதி:  8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு,12ம் வகுப்பு 
              தேர்ச்சி/தோல்வி

மேலும் விவரங்கள் மற்றும் படிவங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

Sunday, August 16, 2015

, 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமனம்


உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும்  இந்தியர்கள்  



தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின்  முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, Google தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) 10.08.2015 அன்று சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

Google நிறுவனர் மற்றும்  தலைமை நிர்வாக அதிகாரி  Larry Page, கூகுள் மற்றும் அதன் துணை நிறுவனங்களை மறுசீரமைக்கும் பிரதான நிறுவனமாக 'Alphabet' (https://abc.xyz/) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக  தன்னை நியமித்துக் கொண்ட லாரி பேஜ், 'கூகுள்' தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்க வாழ் தமிழரான சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அவர்களை நியமித்துள்ளார்.

அன்பின் தலைவன்


கலாமின் செயலாளராக இருந்த பி.எம்.நாயர், IAS  எழுதிய புத்தகத்தில் இருந்து: 

  • ஜனாதிபதிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அந்நாட்டு தலைவர்களாலும், முக்கிய நபர்களாலும் அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டார். அவர் அந்த பரிசுகளை புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடுவார். அதன் பிறகு தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை அவர் பார்த்தது கூட கிடையாது.
     
  • தனது பதவி காலம் முடிந்து ராஷ்டிரபதிபவனை விட்டு செல்லும் போது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு பென்சிலை கூட அவர் எடுத்துச் செல்லவில்லை

Saturday, August 15, 2015

OYO Rooms Independence Day - JAI HIND - #Azaadi4Me

HAPPY INDEPENDENCE DAY - AUG 15

69th INDEPENDENCE DAY CELEBRATION



 தியாகங்களை மதிப்போம் 


உழைப்பை விரும்புவோம் 


இலவசங்களை வெறுப்போம் 


Captain Lakshmi Sahgal (1914 - 2012)


பெண்களை போற்றுவோம்


நேர்மையை நேசிப்போம் 
தூய்மையை துதிப்போம் 
 

ஒருங்கிணைந்த, நேர்மையான, சரியான  சிந்தனைகளை பெறுவோம்

Friday, August 14, 2015

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் 22 பேர் தேர்வு

தமிழகத்தில் இருந்து தேசிய நல்லா சிரியர் விருதுக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 15 ஆசிரியர்களும், உயர், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 7 ஆசிரியர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். 

தமிழக அளவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றோர் விவரம் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 
 
  1. ஆர்.தாஸ் (தலக்கஞ்சேரி, திருவள்ளூர்), 
  2. எஸ்.சுவர்ணபாய் (மீஞ்சூர்), 
  3. வி.கணேசன் (பொன் டூர்), 
  4. சி.ஏகாம்பரம் (கீழமணக்குடி), 
  5. என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர்), 
  6. கே.சிற்றம்பலம் (இடையப்பட்டி), 
  7. எஸ்.காளிமுத்து (வில்வதம்பட்டி, ), 
  8. பி.தனராஜ், (பொன்னம்பாளையம்). 
 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 
 
  1. ஆர்.விஜயலலிதா (நரிக்கட் டியூர்), 
  2. டீ.ராணி சிவகாமி, (சூண்டி). 

அரசு உதவிபெறும், தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 
 
  1. எஸ்.அமலோற்பவம் (செயின்ட் ஜான்ஸ், ராயப் பேட்டை, சென்னை), 
  2. ஏ.ஜோசப்பின் செல்வமேரி (ராஜா பரமேஸ்வரி, அண்ணா நகர் மதுரை) 
  3. டி.எஸ்.அன்புஹெப்சிபாய் (டீ.என்.டி.டீ.ஏ. ராஜமானியபுரம், தூத்துக்குடி)
  4.  எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டன், பாளையங்கோட்டை), 
  5. எம்.செல்வ குமார் (சென்னை ராயபுரம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா தொடக்கப் பள்ளி). 

அரசு, அரசு உதவிபெறும், தனியார், மெட்ரிக். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 
 
  1. வி.ஹரிமூர்த்தி (த.ஆசிரியர், அ.மே.நி.ப, திருத்துறையூர், கடலூர்),
  2. என்.ராமசந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அஆ.மே.நி. ப, கள்ளக்குறிச்சி  
  3. சி.தனபால் (மு.க.ஆ, அ.மே.நி.ப, குமலன்குட்டை, ஈரோடு)
  4.  எ.பிரான்சிஸ் சேவியர் (த.ஆ, ஜோசப் கல்லூரி மே.நி.பள்ளி, திருச்சி) 
  5. பி.ஜார்ஜ் பால் (உ.த.ஆசிரியர், டான்பாஸ்கோ மெட்.மே.நி.ப, சென்னை) 
  6. தங்கபிரகாஷ் (முதல்வர், சன்பீம் மெ.மே.நி.பள்ளி, மேட்டுகுளம், வேலூர்)
  7.  வி.பழனியப்பன் (முதல்வர்,சேரன் மெட்.மே.நி.ப,வெண்ணெய்மலை, கரூர்).

Thursday, August 13, 2015

SL.No 1 to 650 PG, HIGH SCHOOL HM TO HSS HM COMBINED PROMOTION PANEL (12.08.2015)



மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் 

 (வரிசை எண். 1 முதல் 650 வரை)

Click Here to Download

 

HS HM AND PG TO HSS HM COMBINED PROMOTION PANEL.pdf 

Wednesday, August 12, 2015

PASSPORT INSTRUCTION AND ADDITIONAL FORM FOR GOVT SERVANTS



அரசு ஊழியர்கள், அதிகாரிகள் PASSPORT பெற விதிகளில் தளர்வு - அரசாணை 

Re post

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Click here to download the P&AR Department G.O.

இடமாறுதல் கவுன்சிலிங் - ஜூன் to ஜூன் கல்வியாண்டு கணக்கெடுப்பின் படி நடக்கும்

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், ஜூன் மாதம் முதலே கல்வி ஆண்டு கணக்கில் எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த 8ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை, கல்வி ஆண்டாக எடுத்துக் கொண்டு, இட மாறுதல் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 
தங்களுக்கும் அதேபோல கவுன்சிலிங் நடத்த வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், தமிழக அரசிடம் மனு அளித்தனர். சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதாவை சந்தித்தும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆனால், 'அரசாணையில் உள்ளபடி, ஜூன் மாதமே கணக்கில் எடுக்கப்படும்' என பள்ளிக்கல்வி செயலர் சபிதா அவர்கள் அறிவித்துள்ளார்.  மேலும், தொடக்க கல்வியிலும் ஜூன் மாதத்தை  கணக்கில் எடுத்து கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் இன்று(12.08.2015) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. உடற்கல்வி மற்றும் கலை ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, இடமாறுதல் பெற்று ஓர் ஆண்டு பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. 
கடந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் கவுன்சிலிங் நடந்ததால், அப்போது இடமாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. ஆனால், ஆகஸ்ட் மாத கணக்குப்படி நடத்தினால், கடந்த ஆண்டு இடமாறுதல் வாங்கியவர்கள், மீண்டும் இந்த ஆண்டு இடமாறுதல் பெற முடியும்.

 

Tuesday, August 11, 2015

HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2015 (New)

2015-2016ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய தேர்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் 



PG / GOVT/MUNI HIGH SCHOOL HM TO HIGHER SECONDARY HM PANEL AS ON 02.06.2015

முதுகலை ஆசிரியர் / அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் 



2015-2016 GENERAL COUNSELING AND TRANSPER SCHEDULE : Aug 12 - Aug 29



ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை

Schedule
Date
Govt/Municipal Hr Sec HM Transfer
( Within Dist / Inter Dist)
12.08.2015
Govt/Municipal Hr Sec HM Promotion
14.08.2015
Govt/Municipal High School’s HM Transfer ( Within Dist / Inter Dist)
16.08.2015
Govt/Municipal High School’s HM Promotion
18.08.2015
Govt/Municipal PG  Transfer  ( Within Dist)
22.08.2015
Govt/Municipal PG  Transfer  ( Inter Dist)
23.08.2015
Govt/Municipal PG  Promotion,  PG Direct Appointment (65 post)
24.08.2015
BT Deployment Counselling
26.08.2015
to
29.08.2015
PET, Special Teachers   Transfer  (Within Dist)
12.08.2015
PET, Special Teachers   Transfer  (Inter Dist)
16.08.2015

Monday, August 10, 2015

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில்



அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
 

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கத்தில் மாவட்ட அளவி லான பதிவுமூப்பும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பும் பின்பற்றப்பட்டன.
 

கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பணியிடங்களில் 782 காலியிடங் களை மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8.5.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான தற்காலிக தெரிவு பட்டியலும் தயாரான நிலையில், வெறும் பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களை நியமிக் கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த 9.6.2014 அன்று உத்தரவிட்டது.
 

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, சிறப் பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 17.11.2014 அன்று ஓர் அரசாணையை வெளி யிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 100 மதிப்பெண்ணில் 95 மதிப் பெண்ணுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எஞ்சிய 5 மதிப் பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம், என்சிசி, என்எஸ்எஸ் செயல்பாடு போன்ற வற்றுக்கு ஒதுக்கப்படும்.
 

இந்த நிலையில், 440 உடற்கல்வி ஆசிரியர்களையும், 196 ஓவிய ஆசிரியர்களையும், 137 தையல் ஆசிரியர்களையும், 9 இசை ஆசிரியர்களையும் (மொத்தம் 782 காலியிடங்கள்) மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வுசெய்யும் வகையில் கடந்த 8.5.2013 அன்று வெளியிட்ட அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு திரும்பப்பெற்றுள்ளது. சிறப்பாசிரியர்களை போட்டித்தேர்வு மூலம் நியமனம் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 

ரத்துசெய்யப்பட்ட அந்த அறிவிப்பின் மூலம் நியமிக்கப்பட இருந்த 782 காலியிடங்களும் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலியிடங்கள் ஆகும். தற்போது, 2013-14, 2014-15, 2015-16 ஆகிய 3 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து கணிசமான காலியிடங்கள் வந் துள்ளன.
 

இந்த 3 கல்வி ஆண்டு களுக்கான புதிய காலியிடங்கள் மற்றும் முந்தைய பழைய 782 காலியிடங்களைச் சேர்ந்து ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர் பணியிடங்களை ஒரே போட்டித்தேர்வு மூலமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார்.

புகைப்பழக்கம் தடுக்கும் சூப்பர் பாக்டீரியா கண்டுபிடிப்பு



அமெரிக்காவின் ஸ்கிரிப் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். அதன் பெயர் சூடோமோனாஸ் புடிடா. இது புகையிலை விளையக் கூடிய மண்ணிலிருந்தே பெறப்படுகிறது.
 

இந்த பாக்டீரியா மற்ற பாக்டீரியாவிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இவை புகைப்பிடிப்பதால் மனிதனின் ரத்தத்தில் கலக்கும் நிகோடினையே உண்டு வாழக் கூடியவை. ரத்தத்தில் கலந்த நிகோடின் மூளையை சென்றடையும் முன்பே இந்த பாக்டீரியாக்கள் நிகோடினை தின்று விடும். அதனால், புகைப்பிடிககும் பழக்கத்திற்கு மூளை அடிமையாக்கப்படுவது குறையும். இந்த வகை பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய நிகோடினையும் கட்டுப்படுத்துவதையும் கண்டு பிடித்தனர்.



இதை நிரூபிக்க ஒரு எலியின் ரத்த மாதிரியில், ஒரு சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடினை கலந்தனர். தொடர்ச்சியாக இந்த பாக்ட்டீரியாக்களைச் சேர்த்ததில் ரத்தத்தில் இருந்த நிகோட்டினை 10 நிமிடங்களிலேயே காலி செய்தது.



சிகரெட் பிடிப்பவர்கள் தங்கள் மனோ பலத்தால் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்தாலும். இவ்வகை பாக்டீரியாக்கள் மிக உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Friday, August 7, 2015

கொங்கு தேர் வாழ்க்கை



                       கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

          காமம் செப்பாது, கண்டது மொழிமோ

          பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

          செறி எயிற்று, அரிவை கூந்தலின்

          நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

                                                                                - இறையனார், குறிஞ்சித்தினை
  
 

மயிலைப் போல மென்மையானவள், 
அழகிய முத்துப் பற்களை உடையவள்,
என் இதயத்தில் பொருந்தி, 
என்மீது நட்பும் உரிமையும் கொண்டவள்
என் உயிரைக் கவர்ந்த,
என்னவளின் கூந்தலிலே வீசுகின்ற மணத்தைப் போல
நீ அறிந்த மலர்களிலே மணமுடைய மலர்களும் உள்ளனவா?