Wednesday, April 8, 2015

Dearness Allowance Hiked by 6%; to benefit over 1 crore Central Govt Employees



மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.


ஆறாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.  இதனால்  ஆண்டுக்கு ரூ. 6762.24 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பம் -தேர்வுத் துறை அறிவிப்பு

தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம் 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Tuesday, April 7, 2015

WHO: World Health Day 2015, Food Safety - the Global View

அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடங்கள்



பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை 

மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் RMSA திட்டத்தின் கீழ், தமிழக அரசு பள்ளிகளில், 25 வகை தொழிற்கல்வி படிப்புகள் துவங்கப்பட உள்ளன. மாணவர்கள் தொழிற்கல்வியினையும்   கற்க வேண்டும் என்பதற்காக, அந்தந்த பகுதிகள் சார்ந்துள்ள தொழில்களுக்கு ஏற்ப, பொது இயந்திரவியல், எலெக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், ஆடை உற்பத்தி, ஜுவல்லரி தயாரிப்பு உட்பட, 25 வகை தொழில் படிப்புகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


முதற்கட்டமாக, ஒன்பதாம் வகுப்பில் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிகளிலும், அந்த பகுதிகளில் நிலவும் தொழில் சார்ந்த இரண்டு படிப்புகள் துவங்கப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, April 5, 2015

சத்தமின்றி முத்தமிடு

dbd's RainTree Studio's Presents
 
How to fall in love with King Cobra
 
இப்படி பண்ணா நீங்களும் கூட பாம்புக்கு "இச்"  தரலாம்.


Saturday, April 4, 2015

'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல் பள்ளிக்கல்வித் துறை முடிவு

 'Online' ல் 12ம் வகுப்பு விடைத்தாள் நகல்

மார்ச் 2015ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, Online மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.
இந்த ஆண்டு முதல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியானதும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், மாணவ, மாணவியர் மதிப்பெண் சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. 
மேலும் கூடுதல் வசதியாக மாணவர்கள்,  மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக, விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
இதன்படி, இந்த ஆண்டு, Online மூலம், விடைத்தாள் நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Aloe Vera Face Packs to Remove Dark Spots, Acne Scars & Pimple Marks

How to Lighten Dark Underarms

Wednesday, April 1, 2015

தமிழன்டா.........

தமிழன்டா.........

(கதை, சம்பவங்கள் கற்பனையே, நகைச்சுவைக்காக மட்டுமே SunMicroSystems பெயரை பயன்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் - deccanbluediamonds)


உகண்டா ல இருக்குற SunMicroSystems கம்பெனில JavaOS ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ண உலகம் முழுசும் இருந்து Apply பண்ணலாம் னு விளம்பரம் பண்ணி இருந்தாங்க. ஒரே ஒரு Vacant  தான்.


நம்ம ஆளுக்கு வேலை தான் எதுவும் இல்லையே,"சரி இதுக்காச்சும் apply பண்ணலாம்"னு அப்ளிகேசன் போட்டாரு.
இண்டர்வியு நாள் வந்தது. நம்ம ஆள் ஆப்பிரிக்கா கெளம்பி போனாரு. உகாண்டா கேபிடல் Kampala வுல இறங்கி நேரா கம்பெனிக்கு போனாரு.
.

அங்கே இவரைப் போல 5000 பேர் இன்டர்வியு' க்கு வந்திருந்தாங்க.  

நெறைய பேர் இருந்ததால, ஆளுங்களை filter பண்ண கம்பெனி முடிவெடுத்தாங்க.
முதல்ல "எத்தனை பேருக்கு JAVA OS ல அனுபவம் இருக்கு" னு  கேட்டாங்க.

நம்மாளுக்கு இந்தோனேசியா ல  இருக்குற JAVA  தீவு தான் தெரியும். இருந்தாலும் "பாத்துக்கலாம் விட்றா" னு தைரியம் ஆகி "தெரியும்" னு  சொல்லிட்டாரு.
java  தெரியாததால 3000 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "அமெரிக்கன் இங்கிலீஷ் ல எத்தன பேரு fluent" னு கேட்டாங்க.

நம்மாளுக்கு  தமிங்கிலீஷ் தான்  கரெக்ட்டா தெரியும். இருந்தாலும் இது ரெண்டாவது பொய் தானேன்னு நெனைச்சி "தெரியும்" னு  சொல்லிட்டாரு.
English  தெரியாததால 1000 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "எத்தனை பேர் ஆப்ரிக்கன் country" னு  கேட்டாங்க.

"சரி அடிச்சி விடுவோம்" னு  நெனைச்சி நம்மாளும்  "நானும் ஆப்ரிக்கா  தேங் " னு சொல்லிட்டாரு.
ஆப்ரிக்கனா  இல்லாததால ஒரு 500 பேர் குறைஞ்சாங்க.

அப்புறம் "எத்தனை பேருக்கு HR  ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு"னு கேட்டாங்க.நம்மாளுக்கும் அதுல ஒண்ணும் இல்லைதான். இருந்தாலும், டீ  கடைல, பார்பர் ஷாப் ல பொது அறிவை வளர்ததுனால அவரு "இருக்கு" ன்னுட்டாரு.
HR எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம 400 பேர் குறைஞ்சாங்க. 100 பேர் தான்  மிச்சம். அதுல நம்மாளு ஒருத்தர்.

கடைசியா, "எத்தனை பேருக்கு உகாண்டா மொழியான Bantu தெரியும்" னு கேட்டாங்க.

நம்மாளுக்கு தமிழே தகறாரு. இந்தி இம்சை, English  னாவே இழுப்பு வந்திடும். இருந்தாலும் 'பத்தோட பதினொன்னு' னு  நெனைச்சி "எனக்கு ரொம்ப நல்லா தெரியும்" னு சொல்லிட்டாரு.
Bantu மொழி தெரியாம 98 பேர் போயிட்டாங்க. 

மிஞ்சி இருந்தது ரெண்டே பேர் தான். அதுல நம்மாளு ஒருத்தர். உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறல் எடுத்தாலும் நம்மாளு கொஞ்சம் கெத்தோட உக்காந்து இருந்தாரு.
Interview பண்றவங்க கடைசியா இருந்த ரெண்டு பேரையும் "உங்களோட Bantu மொழியில பேசிக்குங்க பாப்போம்"னு சொன்னங்க.

நம்மாளு எதிர்ல இருந்தவர் கிட்டே கேட்டாரு.

"தம்பிக்கு எந்த ஊரு?"
அதுக்கு அவன் சொன்னான்.

"அண்ணே நான் திருச்சி பக்கம். நீங்க?"

Tuesday, March 31, 2015

12 ம் வகுப்பு AGRI தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 12 மதிப்பெண்கள் போனஸ்



 12 ம் வகுப்பு AGRI தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு 12 மதிப்பெண் வழங்க கல்வித்துறை  உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச் 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங், இஎம்ஏ, ஜிஎம், வேளாண் செயல்முறைகள் ஆகிய  தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது.


தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.


தோட்டக்கால் பயிர் குறித்து இடம்பெற்ற, 47வது வினா குழப்பமானதாக இருந்ததால், மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். இது குறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.  

வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம், கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட அந்த  வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில்47வது வினா, 3,4 வது 1 மதிப்பெண் வினா ஆகியவற்றுக்கு மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - பள்ளிக்கல்வி இயக்குனர் தேதி அறிவிப்பு



பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

வேலூர்: "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே கடைசி வாரத்திலும் வெளியாகும்என, தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும்,

  • ஏப்ரல் முதல் வாரத்திலேயே 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கப்படும்.
  • ஜூன் மாதத்தில் , 6 லட்சம் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள்ளும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, மே கடைசி வாரத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். 

 எனவும், அரக்கோணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Monday, March 30, 2015

வெளிமாநிலத்தில் 10,12ம் வகுப்பு படித்த தமிழக அரசு பணியாளர்களுக்கான 2ம்,3ம் நிலை மொழித் தேர்வு முடிவுகள் TNPSC வெளியீடு

SECOND CLASS LANGUAGE TEST  & 3RD CLASS LANGUAGE TEST - RESULT ANNOUNCED BY TNPSC (EXAM HELD ON 13,16,17,18,19,20 MARCH 2015 )


மார்ச் மாதத்தில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற TNPSC 2ம் நிலை ,3ம் நிலை மொழித் தேர்வு (VIVA VOICE) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன  

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்களின் பெயர்ப் பட்டியலை http://www.tnpsc.gov.in/Resultget-dec2k14.html என்னும் வலைத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

முடிவுகளை DOWNLOAD செய்ய கீழே கிளிக் செய்யவும்.

RAMNAD DISTRICT - NOON MEAL COOKING ASSISTANT RECRUITMENT -சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடம்

  RAMNAD DISTRICT 

NOON MEAL PROGRAM - COOKING ASSISTANT RECRUITMENT

ராமநாதபுரம்  

சத்துணவு மையங்களில் 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன. 

பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 219 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய, பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மண்டபம் - 27, ஆர்.எஸ்.மங்கலம் -18, திருவாடானை - 26, முதுகுளத்தூர் - 15, கமுதி - 22, கடலாடி - 26, பரமக்குடி - 17, போகலூர் - 14, நயினார்கோவில் - 11, திருப்புல்லாணி - 22, ராமநாதபுரம் - 17, ராமநாதபுரம் நகராட்சி - 1, பரமக்குடி நகராட்சி - 3, என மொத்தம் 219 பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி
  1. ஐந்தாம் வகுப்பு படித்து, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
  2. ஆதி திராவிடர் 1.1.2015 அன்று 21 வயது நிரம்பியவராகவும், பழங்குடியினர் 18 வயது நிரம்பியவராகவும், இருதரப்பினரும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
  3. விண்ணப்பதாரர் காலி இடம் உள்ள மையம் அமைந்திருக்கும் ஊரிலோ அல்லது 3 கி.மீ., தொலைவிற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை http://www.ramnad.tn.nic.in/nmp.htm என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பத்துடன் கல்வி, வயது, இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஜாதிச்சான்றுகளின் ஜெராக்ஸ் இணைத்து ஏப்., 7க்குள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம். அன்றைய தினமே நேர்காணல் நடத்தப்படும்.  தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களும், ஏப்., 7 க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படமாட்டாது.

விண்ணப்பத்தினை பெற கீழே DOWNLOAD செய்யவும்.

 

Technical Teachers’ Certificate (TTC)  Course in 
Typewriting 2015
தட்டச்சு தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பு  -  தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.


2015ம் ஆண்டிற்க்கான தட்டச்சு தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தகுதிகள் 

1.  01.03.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும் 
2.  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தமிழ் அல்லது ஆங்கில தட்டச்சில் Higher தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தினை tndte.gov.in என்னும் வலைத்தளத்தில்  பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பம் மற்றும்  விவரங்களை கீழே download செய்யவும்.

Monday, March 23, 2015

WORLD WATER DAY 2015 - March 22 - Water and Sustainable Development



இதை படிக்கலேன்னா நீங்க வரும் காலத்தில் ரொம்ப கஷ்டப் படுவீங்க. தண்ணியே இல்லாத ஊர்ல சதுர அடி 1500 ரூபாய்க்கு வாங்குவோமே. அந்த மாதிரி.(So,  Read Must and Be Cool Friends.)

 Humanity Needs Water

 A drop of water is flexible. A drop of water is powerful.

A drop of water is in demand.

தண்ணீர் என்பது உடல்நலன் (Water is Health)

மனிதனின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தண்ணீர். உணவு இல்லாமல் பல வாரங்கள் கூட மனிதனால் உயிர் வாழமுடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. கைகளை சுத்தமாக கழுவுவதாலேயே நாம் பெரும்பாலான நோய்களை தவிர்த்து விட முடியும். ஒரு கிராம் மனிதக் கழிவில் சுமார் 1 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனிதனின் உடல் சராசரியாக 50-65% தண்ணீரைக் கொண்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகள் உடலில் 78% தண்ணீர் உள்ளது. மனிதர்களாகிய நாம்  தினந்தோறும் குடிக்கவும் , குளிக்கவும், சமைக்கவும், துவக்கவும் என பல விதங்களில் தண்ணீரைச் சார்ந்தே வாழ்கிறோம்.  உலகில் சுமார் 75 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட  குடிநீர் வசதி இல்லாமலே வாழ்கிறார்கள். சுமார் 250 கோடி மக்களுக்கு சரியான சுகாதார வசதிகள் இல்லை. எனவே வருங்காலத்தில்  தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சார்ந்த தொழில்துறை வளர்ச்சிபெரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

 தண்ணீர் என்பது இயற்கை  (Water is  Nature )

 உலகின் சுற்றுச் சூழல் என்பது  நிலையான, தொடர்ச்சியான நீர் சுழற்சியை மட்டுமே நம்பி உள்ளது.  சுத்திகரிக்கப் படாத தொழிற்சாலை கழிவுகள், விவசாயக் கழிவுகள், இல்லக் கழிவுகள்  என எல்லாவற்றையும் ஆறுகளிலும் , கால்வாய்களிலும், ஏரிகளிலும் கலந்து சுத்தமான நன்னீர் மண்டலங்களை எல்லாம் நாம் பாழ்படுத்தி விட்டோம். 

 இந்தியாவை பொறுத்தவரை, கங்கை நதியை நாம் மிகவும் கீழ்த்தரமாக மாசுபடுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் காவேரி, பாலாறு, வைகை, பவானி என அனைத்து ஆறுகளும் கழிவுநீர் கால்வாய்களாகிவிட்டன. இதனால் இயற்கையின் சமநிலையும் சுற்றுச் சூழலும் வெகுவாக பாதிக்கப் பட்டு எங்கெங்கு காணினும் வறட்சியை மட்டுமே கண்டு வருகிறோம்.

 

 தண்ணீர் என்பது நகர்மயமாதல்   (Water is urbanization )

உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 10 இலட்சம் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். நகரமயமாக்கல் பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டும் சுமார் 93% இருக்கும் என  UN DESA’s Population Division ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால் நகர்ப்புறங்களில் சுமார் 40% பகுதிகள் குடிசைப் பகுதிகளை இருக்கும். 2050ம் ஆண்டிற்குள் 250 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா , சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மிகப் பெரும் நகர்மயமாதல் ஏற்படும் எனவும் UN DESA ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் என்ன ஆகும்?

நகர்புற மேம்பாடுகளை செய்வது என்பது 2050ம் ஆண்டுவாக்கில் பெரும் சவாலானதாக இருக்கும். தற்போதுள்ள நீர் மேலாண்மை கட்டமைப்புகள் அனைத்தும் ஏராளமான தண்ணீரை வீணாக்குகின்றன. கழிவுநீர் அமைப்புகள் எல்லாம் முறையாக இல்லாமலும், காலாவதி ஆகியும் உள்ளன. இதனால் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் பைப்புகளை புதைக்க வேண்டியிருக்கும்.

                                                                                   --  இன்று மாலை நிறைவு பெறும் .

Sunday, March 22, 2015

Physical Director Grade-1 Final Selection List and CV Date Announced.




 உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான இறுதி தேர்வுப் பட்டியல்
 
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 10.01.2015 அன்று   எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 25.02.2015 அன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

28.03.2015 அன்று முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



தற்போது உடற்கல்வி இயக்குநர்(நிலை-1)க்கான இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட அனைவருக்கும் individual call letter அனுப்பப் பட்டுள்ளது.  இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 10.04.2015 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்வுப் பட்டியலை பெற கீழே Download செய்யவும் 

1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று பணி நியமன கலந்தாய்வு






 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு

 TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28.03.2015 அன்று  பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் அறிவித்துள்ளார்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.

 கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுடன் காலை 9.30 மணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

652 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான இறுதி தெரிவுப் பட்டியல் வெளியீடு


652 COMPUTER INSTRUCTOR SELECTION LIST BY TRB

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடத்தப்பட்டது.  இதில்  கணினி பயிற்றுனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தெரிவுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் http://trb.tn.nic.in/ வெளியிட்டுள்ளது.  பணிநியமன ஆணை விவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.  

தேர்வுப் பட்டியலை கீழே Download  செய்யவும். 

Tuesday, March 17, 2015

Software's For U

Software's For U

Alternative for Adobe Reader
1. Foxit Reader (Download Below)  
FoxitReader531.0606_enu_Setup.exe


2. Canon LBP2900/2900B Printer Driver (Download Below)  
 LBP2900_R150_V330_W32_uk_EN_2.exe


3. Samsung Universal Printer Driver (Download Below)
SamsungUniversalPrintDriver.exe 

4. Samsung Scx 3400 Scan Driver(Download Below)
Samsung_SCX-3400_Series_Scan.exe