Wednesday, November 30, 2016

இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க உச்சவரம்பில்லை: ரிசர்வ் வங்கி அனுமதி

வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இனி வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக இன்று முதல் வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், பணம் டெபாசிட் செய்ய ஏற்படும் தயக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

No comments: