Tuesday, November 8, 2016

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு (Rs 500 and 1000 currency demonitised: PM Modi )


மத்திய மந்திரி சபை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


இதுதொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:

ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அண்டை  நாடு இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டு இருப்பது உலகம் அறியும்.

 ஊழலுக்கு எதிராகவும்,கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான  வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். 

முக்கிய விவரங்கள் 
  1. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் 





  1. இன்றிரவு(08.11.2016) 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது 

  2. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

  3. ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். 

  4. நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. 

  5. நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

  6. ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.

  7. மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். 

  8. நவம்பர் 11-ம் தேதிவரை விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்களில் 500 ,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  9. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. 


No comments: