Tuesday, November 15, 2016

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும். மத்திய அரசு அறிவிப்பு

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று நடைமுறைக்கு வந்தது.


No comments: