Saturday, November 14, 2015

+2 தனித்தேர்வர்கள்(Private) மார்ச் 2016ல் தேர்வெழுத நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

 
+2 தனித்தேர்வர்கள் (+2 Private Candidate's) மார்ச் 2016ல்  தேர்வெழுத  16.11.2015  முதல் 27.11.2015 வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வு சேவை மையப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

1.  +2 தேர்வெழுதி Fail  ஆனவர்கள்.
2. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் முடிவடைந்தவர்கள்.
3.  01.03.2016  அன்று  16½ வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், online சேவைக்கட்டணம் மற்றும் இதர விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

TET தேர்வு இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பில்லை

 
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படாததால்,  D.T.Ed முடித்தவர்களும்,  B.Ed பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

TET  தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. மத்திய அரசின் CBSE அமைப்பு, இந்த ஆண்டின் முதல் CTET  தேர்வினை  பிப்ரவரி 2015லும், இரண்டாவது CTET தேர்வினை செப்டம்பர் 2015லும் நடத்தி  முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் மூன்று தகுதித் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு 2012 அக்டோபர் மாதமும்,  கடைசியாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது.  மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஆண்டு 2014 மே மாதத்தில் நடந்தது. 

ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு (82 மதிப்பெண்) தளர்வு அளிக்கப்பட்டதையும், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் (+2, DTED, Degree, B.Ed ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அளித்து தேர்வு செய்யும் முறை) ஆசிரியர்களை தேர்வு செய்வதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த ஆண்டும் TET  தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



Friday, November 13, 2015

மழையே நீ என் உயிர்

 under development.....

மழையில் நனைந்த மலர்

(மழையில வேற என்ன பண்றது? தெரியலைங்க.. அதான். தப்பிருந்தா மன்னிச்சுக்குங்க.)


இது நவம்பர் மாதம்.
அலைகின்ற என் விழிகளின் தேடலில்

கலைந்து போனது

அமைதியான மாலைப் பொழுது.

நான் பார்க்கும்போதே

ஜன்னலுக்கு வெளியே

சிறு தூறல்கள்

மழையாகிப் போனது.



தனிமையான நினைவுகளில் சிறைப்பட்டு
இன்னும்
எவ்வளவு நேரந்தான் இருப்பேன்!

ஜன்னலுக்கு வெளியே
மழை மீண்டும் தூறலானது.

வாசலுக்கு வந்து நின்ற

என் பாதங்கள் பட்டு

சிதறின சில்லென்ற தூறல்கள்.


இதோ..

சில்லென்ற தூறலின்

இதமான அடிகளை வாங்கும்

எனது தோட்டத்தின்

ரோஜாக்களோடு நானும்...

முகர்நதால் வாடும்
தொட்டால் கசங்கும்
எனது தோட்டத்தின் ரோஜாக்களே! 

என்னை விட்டு
அவர் எங்கே ஒளிந்தார்?
மெல்ல நான்

நழுவும்போது

அவர் இழுத்துப் பிடிக்கும்

என் கூந்தல்

இன்று அவரில்லாமல்

காற்றில் அலைகிறது.

வளைத்து அணைக்க

அவரில்லாமல்

என் இடை

எழிலழிந்து

போனது.

அவரின் அழகான

உதடுகளைத் தொடாத

என் உதடுகள்

இன்று

உணவைக் கூட மறுக்கிறது.



முகர்நதால் வாடும்

தொட்டால் கசங்கும்

எனது தோட்டத்தின் ரோஜாக்களே..

அவர் முத்தமிட்ட நேரங்களில்

உங்களை தோற்கடித்தன

என் கன்னங்கள்.


என் கன்னங்கள் சிவப்பேற

அவர் வரும்நாள்

எந்நாளோ?


தூறல் மீண்டும்

மழையானது.

ஓவியம், தையல்,இசை,நடனம்,தோட்டக்கலை போன்ற 'தொழில்நுட்ப (TTC) தேர்வுகளுக்கான' Hall Ticket வெளியீடு

 
GOVERNMENT TECHNICAL EXAMINATIONS, 
NOV / DEC 2015



Thursday, November 12, 2015

TNPSC : 813 கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு




1
Post
Village Administrative Officer
2
Vacancies
813
3
Scale of Pay
5200-20200 + 2800 GP
4
One Time Registration Fee
50/-
5
Exam Fee
75/-
6
Age Limit
for OC :  21 to  30

SC/ST/MBC/DNC/BC/BCM  :  21 to 40
7
Qualification
SSLC Pass




 
1
Date of Notification
12.11.2015
2
Last Date for submission of Application
14.12.2015
3
Last Date for Fees Payment
16.12.2015
4
Date of Examination
14.02.2016 FN  10.00 AM to 1.00 PM


for more details:

http://www.tnpsc.gov.in/latest-notification.html 

Monday, November 9, 2015

கனமழை காரணமாக சென்னை முதல் தஞ்சாவூர் மற்றும் வேலூர், திருவண்ணாமலை,அரியலூர், நாமக்கல்,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று (09.11.2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர்,  நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை (09.11.2015) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் விடுமுறையை மேலும் சில மாவட்டங்கள் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Bihar Election 2015 - Final Result


Thanks To   News 7

Monday, November 2, 2015

12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ( Provisional Marksheet HSC Result - September 2015)

RECRUITMENT OF JUNIOR DRAUGHTING OFFICER IN HIGHWAYS DEPARTMENT - 188 VACANTS : Last Date: 18.11.2015


Diploma in Civil (DCE)  படிச்ச உங்க பசங்க, Friendsகளுக்கு தகவல் சொல்லுங்க.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை  இளநிலை வரைதொழில் அலுவலர் (JUNIOR DRAUGHTING OFFICER) - 188 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 
 மேலும் விவரங்களுக்கு 

Thursday, October 29, 2015

தமிழக அரசின் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர Computer On Office Automation Examination Dec 2015

 Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர(Typist),  கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். இதற்காக TNPSC  நடத்தும்  சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் (COA) தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) நடத்தும்  கணினி தகுதித்தேர்வுக்கு(Computer On Office Automation Examination Dec 2015) நவம்பர் 16ம் தேதிக்குள் http://www.tndte.com/ota.html ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, நவம்பர் 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


Announcement : COA Dec-2015.PDF
Syllabus:  OFFICE_AUTOMATION_SYLLABUS-23.09.15..PDF

Wednesday, October 28, 2015

மார்ச் 2016: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் கடினமானவையாக இருக்கும்

 

மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு களுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியை  தேர்வுத் துறை துவங்கியுள்ளது.  வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு  பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து புதிய கேள்விகள் கேட்குமாறு  உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே  மார்ச் 2016ல்  நடைபெற  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு வினாத்தாட்கள்  கடினமானவையாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ( Provisional Marksheet SSLC Result - September 2015)

Monday, October 26, 2015

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் வசதி

Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15
 

இ-சேவை மையத்தில்  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் எவ்வளவு?

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்றும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், புதிதாக, டி.என்.பி.எஸ்.சி.,க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, நிரந்தரப் பதிவு செய்ய, 50 ரூபாய், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய், மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒப்புகை சீட்டு

நிரந்தர பதிவு கட்டணமான 50 ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பணம் செலுத்தியதற்கான, ஒப்புகை சீட்டு, உடனடியாக பெற்று கொள்ளலாம் என, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Saturday, October 24, 2015

பாஸ்போர்ட் வேணா வாங்கிக்குங்க. ஆனா சொல்லிட்டு தான் வெளிநாடு போகணும்: பள்ளிக் கல்வி இயக்குனர்



அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும். 

இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 
"அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும்  என தமிழக அரசு (Go.Ms.No. 71 Dt. 02.07.2015)   தெரிவித்துள்ளதால்"
  
'பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும், தடையில்லா சான்றுக்காக காத்திருக்க வேண்டாம்' எனவும் .  'பாஸ்போர்ட் பெற விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலை, பணி நியமன அலுவலருக்கு அனுப்பி விட்டு, பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தன்னுடைய செயல்முறைகளில் தெரிவித்துள்ளார்.


Thursday, October 22, 2015

CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
  
தேவையற்ற குப்பைகளை 'முடிந்தவரை' உங்கள் பார்வைக்கு வைப்பதில்லை என்ற உறுதியுடன், நீங்கள் பயனடையும் வகையில் தகவல்கள் அளிக்க வேண்டும் என்ற உணர்வுடன், விஜயதசமி நல்வாழ்த்துக்களை அனைத்து   நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நவம்பர் 1 முதல் புதிய சிந்தனை மாற்றங்களுடன் deccanbluediamonds.

Tuesday, October 20, 2015

'ஜாக்டோ' போராட்டம் : விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் 'கட்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.


பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.