Showing posts with label ஆசிரியர் தகுதித் தேர்வு. Show all posts
Showing posts with label ஆசிரியர் தகுதித் தேர்வு. Show all posts

Saturday, November 14, 2015

TET தேர்வு இந்த ஆண்டும் நடைபெற வாய்ப்பில்லை

 
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படாததால்,  D.T.Ed முடித்தவர்களும்,  B.Ed பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

TET  தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. மத்திய அரசின் CBSE அமைப்பு, இந்த ஆண்டின் முதல் CTET  தேர்வினை  பிப்ரவரி 2015லும், இரண்டாவது CTET தேர்வினை செப்டம்பர் 2015லும் நடத்தி  முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் மூன்று தகுதித் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு 2012 அக்டோபர் மாதமும்,  கடைசியாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது.  மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஆண்டு 2014 மே மாதத்தில் நடந்தது. 

ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு (82 மதிப்பெண்) தளர்வு அளிக்கப்பட்டதையும், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் (+2, DTED, Degree, B.Ed ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அளித்து தேர்வு செய்யும் முறை) ஆசிரியர்களை தேர்வு செய்வதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த ஆண்டும் TET  தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.