Monday, July 20, 2015

2015-2016 GENERAL COUNSELING AND TRANSPER SCHEDULE - 29.07.2015 to 18.08.2015


ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணை

Date
Day
Tentative Schedule
29.07.2015
Wednesday
Govt/Municipal Hr.Sec. School HM Transfer
31.07.2015
Friday
Govt/Municipal Hr.Sec. School HM Promotion
03.08.2015
Monday
Govt /Municipal  High School HM Transfer
05.08.2015
Wednesday
Govt /Municipal  High School HM Promotion
07.08.2015
Friday
Govt/Municipal  PG Transfer
08.08.2015
Saturday
Govt/Municipal  PG Transfer (Dist to Dist
10.08.2015
Monday
Govt/Municipal  PG Promotion
11.08.2015
Tuesday
PET, Special, SGT Transfer (within Dist)
12.08.2015
Wednesday
PET, Special, SGT Transfer (Dist to Dist)
17.08.2015
& 18.08.2015
Monday
&
Tuesday
BT Asst Deployment Counselling

B.Ed மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு

கடந்த ஆண்டு வரை B.Ed  ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு முதல் B.Ed  படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இம்மாத இறுதியில் B.Ed மாணவர் சேர்க்கையைத் துவங்க, TNTEU முடிவு செய்துள்ளது. 

அதற்காக  புதிய விதிமுறைகளை  தமிழக கல்லுாரி கல்வி இயக்ககம் வெளியிட்டு உள்ளது. 

அதன் விபரம்
  • B.Ed படிப்பில் சேர  ஏதாவது ஒரு இளங்கலை படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
  • M.Phil - Ph.D., மற்றும் முதுகலை படிப்பு படித்தவர்களும்  சேர முடியும்.
  • இளங்கலை படிப்பில், OC- 50; BC- 45; MBC- 43; SC, SCA- 40 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மதிப்பெண்களுக்கு ஏற்ப  தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். PG- 4; M.Phil-5, Ph.D- 6 என வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
  • மேலும்  19 வகையான, ஆப்ஷனல் பாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • B.Ed மாணவர் சேர்க்கை, சென்னை லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் நடக்கும்.
மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் தேதி மற்றும் கவுன்சிலிங் குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

TNPSC Group 1 தேர்வு வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

TNPSC Group  1 தேர்வு எழுதுவதற்கான  வயது உச்ச வரம்பை  45 ஆக  உயர்த்த வேண்டும் என  தமிழக Group  1 தேர்வர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, கூட்டமைப்பு சார்பில் தமிழக  முதல்வருக்கு அனுப்பி உள்ள  மனுவில்,

'தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் தமிழ் வழியிலேயே கல்வி கற்கின்றனர். இவர்கள் Group 1 தேர்வு குறித்து  30 வயது கடந்த பின்னரே தெரிந்து கொள்கின்றனர். 

ஒன்று அல்லது இரண்டு தோல்விக்கு பின்னரே  தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என தெரிந்து கொள்கின்றனர். இதற்குள் தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பை கடந்து விடுவதால்Group 1 தேர்வு குறித்து நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். 

UPSC  தேர்வுகள், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.ஆனால் TNPSC Group 1 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து  பணி நியமனம் வரை, மூன்று ஆண்டுகள் வரை  காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த காலகட்டத்தில்  பல இளைஞர்கள்  உச்ச வயது வரம்பை கடந்து விடுகின்றனர். இதில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கேரளா, குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் Group 1க்கான உச்ச வயது வரம்பு  45 வயது என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  

09.07.2015 அன்று வெளியான, Group 1தேர்வுக்கான  உச்ச வயது வரம்பையும் 45 வயதாக உயர்த்தி தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்' எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Sunday, July 19, 2015

தத்துபித்துவம் - Two in One





என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு 
எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா, 
ப்ளாட்பாரத்துக்கு 
வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.




உங்கள எல்லாம் பாத்தா  எனக்கு பாவமா இருக்கு.





என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,

வெயில் அடிச்சா

திருப்பி....
அடிக்க முடியாது.
என்னய்யா தப்பு பண்ணான் 
என் கட்சிக்காரன்? 
ராங் நம்பர்னா சாரி சொல்லிட்டு போனை வச்சிட வேண்டியது தானே, அதானே ஒலக வழக்கம்....



இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா, 
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?





என்னடா சொல்ற.....



என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா 
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது.
அதேமாதிரி, 
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், 
Ladies finger, Gens finger ஆய்டாது!!!

மா..மா 
நீங்க ரொம்ப அழகா பேசுறிங்க...




இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது, 
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.
 ஹே மேல இருக்குற பொண்ணு!
நான் ரொம்ப ஹ..ல்..ல..கா இருக்கேன் இல்ல





டிசம்பர் 31 க்கும்
ஜனவரி 1க்கும் 
ஒரு நாள்தான் வித்தியாசம்.

ஆனால்,

ஜனவரி 1க்கும்,  
டிசம்பர் 31 க்கும்

ஒரு வருசம் வித்தியாசம்.

 டைம் ரொம்ப முக்கியம்
    தம்பி..... டீ இன்னும் வரல...





பில் கேட்ஸோட 
பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு 
போடும்போது, 
கடன் வாங்கித்தான் 
ஆகனும்.
பாஸ் பண்ண வைக்குற..
இல்லன்னா.....





சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா,
ட்ரெய்ன் ஓட்டுறது 
ட்ரெய்னிங்கா?
இல்ல பிளேன் ஓட்டுறது
தான் 
பிளானிங்கா?

ங்கொய்யால என்னையா 
50 ரூபா கொடுக்குற ....
அப்போ ட்ரெய்ன் முன்னாடி விழணும் பரவாயில்லையா......





வாழை மரம் தார் போடும்.
ஆனா 
அதை வச்சு
ரோடு போட முடியாது! 
கடுப்பேத்துறார் மை லார்ட்





ஆட்டோ'க்கு
' Auto' னு 
பேர் இருந்தாலும்,
Manual' லா தான் 
டிரைவ் பண்ண முடியும்.

ஹலோ,  பிரபா வைன் சாப் ஓனருங்களா,
 கடைய எப்ப சார் தெறப்பிங்க!





 
நிக்கிற பஸ்ஸுக்கு 
முன்னாடி 
ஓடலாம். 
ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி 
நிக்க முடியாது.

ன்னாமா... 
இப்படி பண்றீங்களே மா

CCSE - Group II Hall Ticket Download - Date of Exam 26.07.2015

  Combined Civil Services Examination (CCSE)
Group II   Services

Date of Examination:        26.07.2015  FN  10.00 AM   TO 01.00 PM , SUNDAY


Click Here to Download the Hall Ticket



or



Saturday, July 18, 2015

Zen Parables

 Zen  Parables
 

 
டைடோ கோகுஷி புனிதமான ஜென் துறவி. ஒருநாள், ஆற்றங்கரையில் இருந்த ஆசிரமத்தின் குளிர்ந்த ஆலமர நிழலில், அவர் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.

அவரை சோதனை செய்து விளையாட நினைத்த சிறுவன் ஒருவன் குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டு ஜென் குருவிடம் வந்தான்.

துறவியின்  முன்னால் நமட்டு சிரிப்புடன் நின்றான். 

துறவி அவனை நிதானமாக பார்த்தார். 

அவன் துறவியை பார்த்து,

"குருவே என்னுடைய கேள்விக்கு சரியான பதிலை உங்களால் சொல்ல முடியுமா  என பார்க்க விரும்புகிறேன்" என்றான்.

துறவி புன்னகைத்தார்.

அவன் துறவியைப் பார்த்து  தனது கேள்வியை கேட்டான் 

"குருவே, என்னுடைய கைகளுக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். 

"குரு "இறந்து விட்டது" என்று சொன்னால்,  தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை பறக்கவிடுவது; அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று சொன்னால் தன்னுடைய கைகளுக்குள் மறைந்து இருக்கும்  குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது" - இது தான் அவன் திட்டம்.

ஜென் துறவி சொன்னார்,

     " இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" 


உணர்ந்தது
                 
     நமது கேள்விக்கான விளக்கங்களும், நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நம்மிடமே இருக்கின்றன"
  

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

நண்பர்களுக்கு இனிய 
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

Friday, July 17, 2015

+2 Special Supplimentary Exam July 2015 - Result

இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஜூலை 2015ல் நடைபெற்ற  12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் (+2 Special Supplimentary Exam July 2015 - Result) http://www.dge.tn.nic.in/ இணையத்தளத்தில் வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வு முடிவுகளின் போதே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் 46 லட்சம் ஜாதிகள் (46 lakh categories of caste's) - Finance Minister Arun Jaitley

  “The caste census conducted by the Registrar General of India has come out with 46 lakh categories of caste, sub-castes, different surnames in the caste and clan names, which have been sent to the states eight to nine months back for clubbing them to consolidate the caste count, said Arun Jaitley


2011 ல் எடுக்கப்பட்ட Socio-Economic-Caste (SEC) Census முடிவுகள் மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது அதில் ஜாதிவாரி தகவல்கள் இடம்பெறவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து தற்போது  ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட  மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக, ஏற்கனவே எடுக்கப்பட்ட தகவல்களை பகுத்தாய்ந்து பட்டியலிடும் பணியை  NITI Aayog துணைத்தலைவர் Arvind Panagariya தலைமையிலான குழுவிடம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த குழு, ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள கிளைகள், பிரிவுகள், குழுக்கள், ஜாதிகளின் பட்டப்பெயர், துணைப் பெயர் போன்றவற்றை ஒருங்கிணைத்து முறையான பட்டியலை தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கும். அதன் பின், ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிடுவது என முடிவாகி உள்ளது.

அப்படின்னா



சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர். 
 
 ன்னு நான் சொன்னது எல்லாம் ..........???
( From Mahakavi Subramanya Bharathi Mindvoice )

என்னம்மா, இப்படி பண்றீங்களேமா? - "Infosys" சேர்மன் நாராயணமூர்த்தி கவலை

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த கண்டுபிடிப்பும் செய்யப்படவில்லை

பெங்களூர்  இந்திய அறிவியல் கழகத்தின்(IISc) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய "Infosys" சேர்மன் திரு N.R. நாராயணமூர்த்தி,

"கடந்த 50 ஆண்டுகளில் உலக அளவில் சிறப்பான கண்டுபிடிப்புக்கள் குறித்த Top 10 பட்டியல், உலகப் புகழ்பெற்ற, கண்டுபிடிப்பாளர்களின் உற்பத்தி தளமாக விளங்கும் Massachusetts Institute of Technology (MIT) நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. 

இதில் கார்கள், எலக்ட்ரிக் பல்புகள், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், வை-பை, எம்.ஆர்.ஐ., லேசர், ரோபாட் உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய கண்டுபிடிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவைகள் தந்ததற்காக மேற்கத்திய பல்கலைக்கழங்களின் ஆய்வுக்கு நன்றி.

அதே சமயம், இதில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் பங்கு என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக IISc மற்றும் IIT களில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உலகிற்கும், சமூகத்திற்கு பயனளிக்கும் எந்த கண்டுபிடிப்பும் நிகழ்த்தப்படவில்லை என்பதே உண்மை.  

அறிவாற்றல், உற்சாகம், திறமை, ஆகியவற்றில் மேற்கத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்திய மாணவர்களுக்கு இடையே வேறுபாடு ஏதும்  இல்லை. ஆனால் நமது இளைஞர்கள் இணையதளங்களில் மூழ்கி உள்ளனர். போதிய அளவு உழைக்காமல் மாய உலகில் உள்ளனர். இவற்றை சரி செய்ய கல்வி நிறுவனங்கள் முன்வரவேண்டும்"  என   அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Wednesday, July 15, 2015

காமராஜ் ( KAMARAJAR BIRTHDAY ANNIVERSARY)

காமராஜர்
kamarajar quotes
(15.07.1903 - 02.10.1975) 

ஒரு கோயில் திறந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு நூலகம் திறந்தால் கற்றவர்களுக்கு மகிழ்ச்சி 
ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் 
நம்மைப் படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி 

                                                              - K.காமராஜ்



Tuesday, July 14, 2015

Our Sincere Condolences

M.S.Viswanathan
(24.06.1928 - 14.07.2015)
 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 
வாரி  வாரி  வழங்கும் போது வள்ளல் ஆகலாம் 
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம் 
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் 
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் 
தெய்வம் ஆகலாம் ..