Monday, April 4, 2016

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் - 06.04.2016 நிலவரப்படி மாற்றங்களுக்கு பின் ( Error Free)

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார். அ.தி.மு.க 227 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் மே 2016 தேர்தலில் போட்டியிடுகின்றன. 

முன்னாள் அமைச்சர்கள் 16 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
த.மா.கா விற்கு கூட்டணி கதவுகள் அடைக்கப் பட்டுள்ளன.

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு  கூட்டணியில் வாய்ப்பு வழங்கப் படவில்லை. 

டாக்டர் சேதுராமனின், மூவேந்தர் முன்னணி கழகம், ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பி.வி.கதிரவனின் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி ஆகியவற்றுக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
வேட்பாளர்கள் மாற்றப்பட்டு, புதிதாக நியமிக்கப் பட்ட  வேட்பாளர்கள் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 

வரிசை
 எண்
தொகுதி
வேட்பாளர் பெயர்
1
R.K. நகர் 
ஜெ.ஜெயலலிதா
2
கும்மிடிபூண்டி
கே.எஸ்.விஜயகுமார்
3
பொன்னேரி (தனி)
சிறுணியம் பலராமன்
4
திருத்தணி
P.M. நரசிம்மன்
5
திருவள்ளூர்
A.பாஸ்கரன்
6
பூந்தமல்லி
ஏழுமலை
7
ஆவடி
மா.ஃபா.பாண்டியராஜன்
8
மதுரவாயல்
பா.பென்ஜமின்
9
அம்பத்தூர்
வி.அலெக்சாண்டர்
10
மாதவரம்
டி.தட்சிணாமூர்த்தி
11
திருவொற்றியூர்
பி.பால்ராஜ்
12
பெரம்பூர்
பி.வெற்றிவேல்
13
கொளத்தூர்
ஜெ.சி.டி.பிரபாகர்
14
வில்லிவாக்கம்
தாடி ம.ராசு
15
திருவிக நகர் (தனி)
வ.நீலகண்டன்
16
எழும்பூர் (தனி)
பரிதி இளம்வழுதி
17
ராயபுரம்
டி.ஜெயக்குமார்
18
துறைமுகம்
கே.எஸ்.சீனிவாசன்
19
சேப்பாக்கம்
ஏ.நூர்ஜஹான்
20
ஆயிரம்விளக்கு
பா.வளர்மதி
21
அண்ணாநகர்
எஸ்.கோகுல இந்திரா
22
விருகம்பாக்கம்
வி.என்.ரவி
23
சைதாப்பேட்டை
சி.பொன்னையன்
24
தியாகராயநகர்
சத்திய நாராயணன்
25
மைலாப்பூர்
ஆர்.நடராஜ்
26
வேளச்சேரி
எம்.சி.முனுசாமி
27
சோழிங்கநல்லூர்
லியோ என் சுந்தரம்
28
ஆலந்தூர்
பண்ருட்டி ராமச்சந்திரன்
29
ஸ்ரீபெரும்பத்தூர்
கே.பழனி
30
பல்லாவரம்
சி.வி.இளங்கோவன்
31
தாம்பரம்
சிட்லபாக்கம்  இராசேந்திரன்
32
செங்கல்பட்டு
ஆர்.கமலகண்ணன்
33
திருப்போரூர்
எம்.கோதண்டராமன்
34
செய்யூர் (தனி)
ஏ.முனுசாமி
35
உத்திரமேரூர்
வாலாஜாபாத் பா. கணேசன்
36
காஞ்சிபுரம்
மைதிலி திருநாவுக்கரசு
37
அரக்கோணம் (தனி)
கோ.சி. மணிவண்ணன்
39
காட்பாடி
எஸ்.ஆர்.கே.அப்பு
40
ராணிப்பேட்டை
சுமைதாங்கி சி.ஏழுமலை
41
ஆற்காடு
கே.வி.ராமதாஸ்
42
வேலூர்
ப.நீலகண்டன்
43
அணைக்கட்டு
ம.கலையரசு
44
கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)
ஜி.லோகநாதன்
45
குடியாத்தம் (தனி)
சி.ஜெயந்தி பத்மநாபன்
46
வாணியம்பாடி
டாக்டர் நீலோபர் கபீல்
47
ஆம்பூர்
ஆர்.பாலசுப்பிரமணி
48
ஜோலார்பேட்டை
கே.சி.வீரமணி
49
திருப்பத்தூர்
டி.டி.குமார்
50
ஊத்தங்கரை (தனி)
மனோரஞ்சிதம் நாகராஜ்
51
பர்கூர்
சி.வி.ராஜேந்திரன்
52
கிருஷ்ணகிரி
வி.கோவிந்தராஜ்
53
வேப்பனஹள்ளி
முனுசாமி
54
ஒசூர்
பாலகிருஷ்ணா ரெட்டி
55
தளி
நாகேஷ்
56
பாலக்கோடு
அன்பழகன்
57
பென்னாகரம்
வேலுமணி
58
தருமபுரி
பு. தா. இளங்கோவன்
59
பாப்பிரெட்டிபட்டி
குப்புசாமி
60
அரூர் (தனி)
ஆர்.ஆர்.முருகன்
61
செங்கம் (தனி)
எம்.தினகரன்
62
திருவண்ணாமலை
பெருமாள்நகர் கே.ராஜன்
63
கீழ்பென்னாத்தூர்
செல்வமணி
64
கலசபாக்கம்
வி.பன்னீர்செல்வம்
65
போளூர்
சி.எம்.முருகன்
66
ஆரணி
சேவூர் ராமச்சந்திரன்
67
செய்யார்
தூசி கே.மோகன்
68
வந்தவாசி (தனி)
வி.மேகநாதன்
69
செஞ்சி
அ. கோவிந்தசாமி
70
மைலம்
கா.அண்ணாதுரை
71
திண்டிவனம்
எஸ்.பி.ராஜேந்திரன்
72
வானூர் (தனி)
எம்.சக்கரபாணி
73
விழுப்புரம்
சி.வி.சண்முகம்
74
விக்கிரவாண்டி
சேவல் வேலு
75
திருக்கோயிலூர்
சேவல் ஜி.கோதண்டராமன்
76
உளுந்தூர்பேட்டை
குமரகுரு
77
ரிஷிவந்தியம்
கதிர். தண்டபாணி
78
சங்கராபுரம்
ஏ.எஸ்.ஏ.ராஜசேகர்
79
கள்ளக்குறிச்சி (தனி)
அ. பிரபு
80
கங்கவல்லி (தனி)
அ. மருதமுத்து
81
ஆத்தூர் (தனி)
ஆர்.எம். சின்னதம்பி
82
ஏற்காடு
சித்ரா
83
ஓமலூர்
வெற்றிவேல்
84
மேட்டூர்
செம்மலை
85
எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி
86
சங்ககிரி
எஸ்.ராஜா
87
சேலம் (மேற்கு)
ஜி.வெங்கடாசலம்
88
சேலம் (வடக்கு)
கே.ஆர்.எஸ்.சரவணன்
89
சேலம் (தெற்கு)
சக்திவேல்
90
வீரபாண்டி
மனோன்மணி
91
ராசிபுரம் (தனி)
டாக்டர் வி.சரோஜா
92
சேந்தமங்கலம்
சி.சந்திரசேகரன்
93
நாமக்கல்
கே.பி.பி.பாஸ்கரன்
94
பரமத்தி வேலூர்
ஆர்.ஆர்.ராஜேந்திரன்
95
திருச்செங்கோடு
பொன். சரஸ்வதி
96
குமாரபாளையம்
பி.தங்கமணி
97
ஈரோடு
கே.எஸ்.தென்னரசு
98
ஈரோடு (மேற்கு)
இரா.வரதராஜன்
99
மொடக்குறிச்சி
சிவசுப்பிரமணி
100
தாராபுரம் (தனி)
கே.பொன்னுசாமி
101
பெருந்துறை
தோப்பு வெங்கடாச்சலம்
102
பவானி
கே.சி.கருப்பணன்
103
அந்தியூர்
இ.எம்.ஆர்.ராஜா
104
கோபிச்செட்டிப்பாளையம்
கே.ஏ.செங்கோட்டையன்
105
பவானிசாகர் (தனி)
ஈஸ்வரன்
106
உதகமண்டலம்
கப்பச்சி டி.வினோத்
107
கூடலூர் (தனி)
கலைச்செல்வன்
108
குன்னூர்
ராமு (சாந்தி ஏ.ராமு)
109
மேட்டுப்பாளையம்
ஓகே சின்னராஜ்
110
அவினாசி (தனி)
ப.தனபால்  
111
திருப்பூர் (வடக்கு)
கே.என்.விஜயகுமார்
112
திருப்பூர் (தெற்கு)
குணசேகரன்
113
பல்லடம்
கரைப்புதூர் ஏ.நடராஜன்
114
சூலூர்
ஆர்.கனகராஜ்
115
கவுண்டம்பாளையம்
வி.சி.ஆறுக்குட்டி
116
கோயம்புத்தூர் வடக்கு
பி.ஆர்.ஜி.அருண்குமார்
117
தொண்டாமுத்தூர்
எஸ்.பி.வேலுமணி
118
கோயம்புத்தூர் தெற்கு
அம்மன் கே.அர்ச்சுணன்
119
சிங்காநல்லூர்
சிங்கை என்.முத்து
120
கிணத்துக்கடவு
ஏ.சண்முகம்
121
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ஜெயராமன்
122
வால்பாறை (தனி)
கஸ்தூரி வாசு
123
உடுமலைப்பேட்டை
உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
124
மடத்துக்குளம்
கே.மனோகரன்
125
பழனி
பி.குமாரசாமி
126
ஆத்தூர்
நத்தம் விசுவநாதன்
127
நிலக்கோட்டை (தனி)
ஆர்.தங்கதுரை
128
நத்தம்
எஸ்.ஷாஜகான்
129
திண்டுக்கல்
திண்டுக்கல் சீனிவாசன்
130
வேடசந்தூர்
டாக்டர் வி.பி.பி.பரமசிவம்
131
அரவக்குறிச்சி
வி.செந்தில்பாலாஜி
132
கரூர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
133
கிருஷ்ணராயபுரம் (தனி)
எம்.கீதா
134
குளித்தலை
ஆர்.சந்திரசேகரன்
135
மணப்பாறை
ஆர்.சந்திரசேகர்
136
ஸ்ரீரங்கம்
எஸ்.வளர்மதி
137
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
டாக்டர்.எஸ்.தமிழரசி
138
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
ஆர்.மனோகரன்
139
திருவெறும்பூர்
டி.கனகச்செல்வன்
140
லால்குடி
எம்.விஜயமூர்த்தி
141
மண்ணச்சநல்லூர்
பரமேஸ்வரி முருகன்
142
முசிறி
எம்.செல்வராசு
143
துறையூர் (தனி)
மைதிலி
144
பெரம்பலூர் (தனி)
இளம்பை ரா.தமிழ்ச்செல்வன்
145
குன்னம்
ஆர்.டி.ராமச்சந்திரன்
146
அரியலூர்
தாமரை எஸ்.ராஜேந்திரன்
147
ஜெயங்கொண்டம்
ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம்
148
திட்டக்குடி (தனி)
பெ.அய்யாசாமி
149
விருத்தாசலம்
வி.டி.கலைச்செல்வன்
150
நெய்வேலி
ரா.ராஜசேகர்
151
பண்ருட்டி
சத்யா பன்னீர்செல்வம்
152
கடலூர்
எம்.சி.சம்பத்
153
குறிஞ்சிப்பாடி
சொரத்தூர் ரா.ராஜேந்திரன்
154
புவனகிரி
செல்வி ராமஜெயம்
155
சிதம்பரம்
கே.ஏ.பாண்டியன்
156
காட்டுமன்னார் கோயில் (தனி)
முருகுமாறன்
157
சீர்காழி (தனி)
பி.வி.பாரதி
158
மயிலாடுதுறை
வி.ராதாகிருஷ்ணன்
159
பூம்புகார்
பவுன்ராஜ்
160
கீழ்வேலூர் (தனி)
என்.மீனா
161
வேதாரண்யம்
ஓ.எஸ். மணியன்.
162
திருத்துறைப்பூண்டி (தனி)
உமா மகேஸ்வரி
163
மன்னார்குடி
காமராஜ்
164
திருவாரூர்
ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம்
165
நன்னிலம்
ஆர்.காமராஜ்
166
திருவிடைமருதூர் (தனி)
யு.சேட்டு
167
கும்பகோணம்
ராம.ராமநாதன்
168
பாபநாசம்
ரா.துரைக்கண்ணு
169
திருவையாறு
எம்.ஜி.எம்.சுப்பிரமணியன்
170
தஞ்சாவூர்
எம்.ரெங்கசாமி
171
ஒரத்தநாடு
ஆர்.வைத்திலிங்கம்
172
பட்டுக்கோட்டை
சி.வி.சேகர்
173
பேராவூரணி
கோவிந்தராஜன்
174
கந்தர்வகோட்டை (தனி)
நார்த்தான்மலை பா.ஆறுமுகம்
175
விராலிமலை
டாக்டர் சி.விஜயபாஸ்கர்
176
புதுக்கோட்டை
வி.ஆர்.கார்த்திக்
177
திருமயம்
பி.கே.வைரமுத்து
178
ஆலங்குடி
ஞான கலைச்செல்வன்
179
அறந்தாங்கி
இ.ஏ.ரத்தினசபாபதி
180
காரைக்குடி
கற்பகம் இளங்கோ
181
திருப்பத்தூர்
கே.ஆர்.அசோகன்
182
சிவகங்கை
ஜி.பாஸ்கரன்
183
மானாமதுரை (தனி)
எஸ்.மாரியப்பன் கென்னடி
184
மேலூர்
பெரியபுள்ளான் (எ) செல்வம்
185
மதுரை கிழக்கு
தக்கார் பி.பாண்டி
186
சோழவந்தான் (தனி)
கி.மாணிக்கம்
187
மதுரை வடக்கு
எம்.எஸ்.பாண்டியன்
188
மதுரை தெற்கு
எஸ்.எஸ்.சரவணன்
189
மதுரை மையம்
மா.ஜெயபால்
190
மதுரை மேற்கு
செல்லூர் ராஜூ
191
திருப்பரங்குன்றம்
எஸ்.எம்.சீனிவேல்
192
திருமங்கலம்
ஆர்.பி.உதயகுமார்
193
உசிலம்பட்டி
பா.நீதிபதி
194
ஆண்டிபட்டி
தங்க தமிழ்செல்வன்
195
பெரியகுளம்
டாக்டர் கே.கதிர்காமு
196
போடிநாயக்கனூர்
ஓ பன்னீர்செல்வம்
197
கம்பம்
எஸ்.டி.கே.ஜக்கையன்
198
ராஜபாளையம்
ஏ.ஏ.எஸ்.ஷியாம்
199
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
எம்.சந்திரபிரபா
200
சாத்தூர்
எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்ரமணியன்
201
சிவகாசி
கே.டி.ராஜேந்திர பாலாஜி
202
விருதுநகர்
கே.கலாநிதி
203
அருப்புக்கோட்டை
வைகைச் செல்வன்
204
திருச்சுழி
கே.தினேஷ்பாபு
205
பரமக்குடி (தனி)
டாக்டர் எஸ்.முத்தையா
206
ராமநாதபுரம்
டாக்டர் எம்.மணிகண்டன்
207
முதுகுளத்தூர்
கீர்த்திகா முனியசாமி
208
விளாத்திகுளம்
கு.உமாமகேஸ்வரி
209
தூத்துக்குடி
சித.செல்லப்பாண்டியன்
210
ஸ்ரீவைகுண்டம்
டாக்டர் ம.புவனேஸ்வரன்
211
ஒட்டப்பிடாரம் (தனி)
ஆர்.சுந்தரராஜ்
212
கோவில்பட்டி
கே.ராமானுஜம் கணேஷ்
213
சங்கரன்கோவில் (தனி)
வி.எம்.ராஜலெட்சுமி
214
வாசுதேவநல்லூர் (தனி)
அ.மனோகரன்
215
தென்காசி
சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன்
216
ஆலங்குளம்
எப்சி கார்த்திகேயன்
217
திருநெல்வேலி
நயினார் நாகேந்திரன்
218
அம்பாசமுத்திரம்
ஆர்.முருகையபாண்டியன்
219
பாளையங்கோட்டை
அ.தமிழ்மகன் உசேன்
220
நாங்குநேரி
மா.விஜயகுமார்
221
ராதாபுரம்
ஜி.டி.லாரன்ஸ்
222
கன்னியாகுமரி
என்.தனவாய்சுந்தரம்
223
நாகர்கோவில்
நாஞ்சில் முருகேசன்
224
குளச்சல்
கே.டி.பச்சைமால்
225
பத்மநாபபுரம்
கே.பி.ராஜேந்திர பிரசாத்
226
விளவன்கோடு
ஜி.நாஞ்சில் டொசினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ்
227
கிள்ளியூர்
ஏ.மேரி கமல பாய்


வரிசை
எண்
தொகுதி
வேட்பாளர் பெயர்
கட்சி
228
மதுராந்தகம் (தனி)
செ.கு.தமிழரசன்
இந்திய குடியரசு கட்சி
229
திருச்செந்தூர்
சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சி
230
காங்கேயம்
தனியரசு
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
231
ஒட்டன்சத்திரம்
தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சி
232
நாகப்பட்டினம்

மனிதநேய ஜனநாயக கட்சி
233
கடையநல்லூர்
ஷேக் தாவூத்
தமிழ் மாநில முஸ்லிம் லீக்
234
திருவாடானை
கருணாஸ்,
முக்குலத்தோர் புலிப்படை

Wednesday, March 30, 2016

TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 11.04.2016 வரை நீட்டிப்பு

 Spl. Link  PAY DRAWN COMPLETE PARTICULARS FOR THE YEAR 2015-2016


TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 31.03.2016 மாலை 5.45  வரை என அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது துறைத் தேர்வுகளுக்கு online மூலம் விண்ணப்பிப்பதற்க்கான கடைசி தேதி 11.04.2016 மாலை 5.45 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

Tuesday, March 29, 2016

ஏப்ரல் 15 முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம்


ஏப்ரல் 15ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள்  விநியோகிக்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்திலிருந்து (https://www.annauniv.edu/) ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  60 மையங்களில் சமர்பிக்கலாம் என உயர்கல்வி செயலர் அபூர்வா தலைமையில்  நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் அவர்கள் தெரிவித்தார்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஏப்ரல் 14ல், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
  • ஏப்ரல் 15 முதல், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில், விண்ணப்பங்களை  ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து, விண்ணப்ப கட்டணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கான, D.Dயுடன் அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து, 10 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்; அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

Thursday, March 24, 2016

PAY DRAWN PARTICULARS FOR THE YEAR 2015-2016 (Complete Schedule with IT Paid Details)

மார்ச் 2015 முதல் பிப்ரவரி 2016 வரையிலான முழுமையான ஊதியப் பட்டியல் வரப்பெற்றுள்ளது. Download செய்ய,



போலி சான்றிதழ்களை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்


இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் நவீன 2D Barcode மற்றும்,  Watermark ரகசிய குறியீட்டுடன்  பளிச்சிடும் வண்ணத்தில் அச்சிடப்பட உள்ளது.


இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்.

வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும்.


பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும்.  

2D Barcode,  Watermark ரகசிய குறியீடு மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி  பதிவு எண் போன்றவை இடம் பெறும்.  

தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும்.


மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை(Genuineness)  எளிதில் கண்டறியும் வகையில்  மதிப்பெண் பட்டியல் உருவாக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள தேர்வுத் துறையின் கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC DEPT EXAM RESULT (DEC 2015) PUBLISHED ON 21.3.2016 - LAST DATE FOR APPLYING FOR MAY 2016 DEPT EXAM IS 31.03.2016

நினைவூட்டல் 

டிசம்பர் 2015ல் நடைபெற்ற துறைத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மே 2016ல் நடைபெற உள்ள துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2016 ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய அகவிலைப்படி உயர்வால் 10 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர்.

இந்த புதிய அகவிலைப்படி 2016ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. 4.8 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களும், 5.5 மில்லியன் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த புதிய அகவிலைப்படி பொருந்தும்.

இதற்கு முன் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 113 சதவீதமாக இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 119 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2015ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்பட்டது. 2015ம் ஆண்டு மட்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 17, 2016

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)

பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ்  வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)

வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம்.அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave)

ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் விடுப்பு உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave)

ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு  விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும்.

தகுதி காண் பருவத்தினருக்கு இதில் பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு
(Medical Leave)

மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை  விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுத்தால்  அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப விடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர் 90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540 நாட்கள்  வரை எடுக்க தகுதி உண்டு.

6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs)

சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Maternity Leave)

திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும்.உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு
(Special Casual Leave)

குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு
(Turn Duty, Compensate Leave)

அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time)

இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள்  சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் ஏப்.20க்குள் முடிக்க திட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.20க்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், வேதியியல், பொருளியல், வணிகவியல்  முதலான தேர்வுகள் முடிந்துள்ளன.

அரசுத் தேர்வுத்துறை திட்டமிட்டபடி தமிழ், ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. 74 மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் திருத்தும் பணி நடக்கிறது.

ஏப்.,1 ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. 20ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13 ம் தேதி வரை நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,1 முதல் 25ம் தேதி வரை 79 மையங்களில் நடக்கிறது.

மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வருவதால், விடைத்தாள்களை சரியாகத் திருத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 15, 2016

வெயிலின் தாக்கத்தால் மின்கட்டணம் அதிகரிக்கும். சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை:

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில்  இரண்டு மாதங்களுக்கு  ஒரு முறை மின் பயனீட்டு  கணக்கு எடுக்கிறது. 

வீடுகளில், 1 - 100 யூனிட்; 101 - 200; 201 - 500; 500 யூனிட் மேல் என்ற பிரிவுகளில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 500 யூனிட்டுக்கு கீழ், மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, தமிழக அரசு மானியம் வழங்குகிறது. ஆனால், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு கட்டணமும் செலுத்த வேண்டும். 


வெயில் காரணமாக வீடுகளில்,  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், 500 யூனிட்களுக்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவோர், அரசின் மானியத்தை இழக்க நேரிடும். 


கடந்த நிதி ஆண்டில், வீட்டு மின் நுகர்வோர் மூலம், 5,884 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதில் 500 யூனிட் மேல் உள்ளவர்கள் செலுத்திய கட்டணம் மட்டும், 2,566 கோடி ரூபாய். 

தற்போது, வெயில் காரணமாக, 400 யூனிட் பயன்படுத்தியவர்கள் கூட, 500 யூனிட் மேல் பயன்படுத்தலாம். அவர்களுக்கு, அரசு மானியம் கிடைக்காது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் குறைந்தபட்சம் மாதம் ரூ. 1000/- வரை சேமிக்க முடியும்' என எரிசக்தி துறை அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tuesday, March 8, 2016

International Women's Day - March 08 - மகளிர் தினம்

Happy  International Women's Day 
 மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


One Day i will.



The willingness to listen
The Patience to understand
The Strength to support
The Heart to Care 


You can Feel her Innocence in the form of a daughter
You can feel her Care in the form of a sister
You can feel Her Warmth in the form of a friend
You Can feel her Passion in the form of a beloved
You can Feel her Dedication in the form of a wife
You can feel her Divinity in the form of a mother
You can feel her Blessing in the form of a Grandmother
Yet She is so Tough too


Her Heart is so Tender
So Naughty
So Charming
So Sharing 
So Melodious
She is a Women
And
She is a Life

Every man needs a women when his life is a Mess
Because just like the game of Chess
the Queen protects the King

Happy International Women's Day

தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு:




நாள்
கிழமை
தேர்வு பாடம்
22.04.2016
வெள்ளி
தமிழ்
25.04.2016
திங்கள்
ஆங்கிலம்
26.04.2016
செவ்வாய்
கணிதம்
27.04.2016
புதன்
அறிவியல்
28.04.2016
வியாழன்
சமூக அறிவியல்
29.04.2016
வெள்ளி
உடற்கல்வி

Monday, March 7, 2016

TNPSC DEPARTMENTAL EXAM TIME TABLE - MAY 2016


மஹா சிவராத்திரி - 2016


மஹா சிவராத்திரி 

 ஸ்ரீ லிங்காஷ்டகம்


 ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்i
ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்ii

தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
காமதஹம்கருணாகர லிங்கம்i
ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
 ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தனகாரண லிங்கம்i
ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்i
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்i
ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
 

தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவச லிங்கம்i
தினகரகோடிப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்i
அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்i
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்



திருச்சிற்றம்பலம்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே! 

திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!





வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் - See more at: http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_27.html#sthash.JTu1FGSG.dpuf
திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!





வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் - See more at: http://vivekaanandan.blogspot.in/2011/11/blog-post_27.html#sthash.JTu1FGSG.dpuf